அத்தியாயம் 17

188 6 0
                                    

இன்னொரு முறை அவர் அப்படி செய்தால் என்னால நிச்சயமா தாங்க முடியாது . ஒரு வருஷம் வரை பார்ப்போம் . அதன்பிறகு அவர் இப்படியே இருந்தார் என்றால் எனக்காக இல்லாவிட்டாலும் குழந்தைக்காக சேர்ந்து இருக்க வேண்டியதுதான் .

போன் அடிக்கும் சத்தம் கேட்டு ஓடி போய் அதை எடுத்து ஆரா காதில் வைத்து ஹலோ சொல்ல , ஆரா நான் அத்தை பேசுறேன் டா . அத்தை போய் சேர்ந்துட்டீங்களா . ஆமாடா... உன்னால அங்க நான் இல்லாம மேனேஜ் பண்ண முடியுது இல்ல . 

ஆமா அத்தை ...இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை . சரிடா அப்போ நான் போனை வைக்கிறேன் . அத்தை... என்னடா ...என்றைக்கு வருவீங்க ? இன்றைக்கு திங்கள் சனி ராத்திரி நானும் மாமாவும் நம்ம வீட்டில் இருப்போம் .

சரியா ...ம்..சரி 

அத்தை …. என்னடா ...ஐ மிஸ் யூ .

ஆள் மாத்தி சொல்றியேடா .

ஏன் இப்படி சொல்றீங்க ?

இதை நீ என் மகனை பார்த்து சொல்லி இருந்தா நான் சந்தோஷப்பட்டு இருப்பேன் . ஆத்விக் வேலைக்கு போயிட்டானா ? ஆமா அத்தை . சரிடா அவன் லேட்டா வந்தா போன் போட்டு சீக்கிரம் வர சொல்லு . ம்..

என் பேரன் என்ன செய்கிறான் ? அவனுக்கு என்ன நல்லா பால் குடித்துவிட்டு தூங்குகிறான் .  சாந்தினி...சரி டா உன் மாமா கூப்பிடறாரு நான் போனை வைக்கிறேன் .

எதுக்கு சபரி என்னை கூப்பிட்டீங்க ? நாம வந்து ஒரு மூன்று மணி நேரம் இருக்குமா அதுக்குள்ள நம்ம மருமகளுக்கு போன் பேசனுமா என்ன . இப்படி நீ தினமும் நாலு நேரம் பேசினால் அவ எப்படி ஆத்விக் கூட சேருவா .

இனி இங்கிருந்து கிளம்புவது வரை போன் பேசாத . ம்...சரிங்க . ஆஹா என் மனைவிக்க  வாயை கூட மூட வைக்க முடியுதே சபரி உன்னால , இங்கிருந்து போறது வரை இதை ஃபாலோ பண்ணனும் .

சாந்தி... என்னங்க... நாம என்ன ஹோட்டல் ரூம்ல ரெஸ்ட் எடுக்கவா வந்தோம் . நீ இப்படி ரிலாக்ஸா உட்கார , கிளம்பு ..கிளம்பு ...வெளியே போய் ஊர் சுத்திட்டு வரலாம் .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிTahanan ng mga kuwento. Tumuklas ngayon