அத்தியாயம் 19

153 6 0
                                    

ஆரா ... என்ன அத்தை ... ஆரவ் தூங்கியாச்சா ? ஆமா அத்தை . உனக்கு சாப்பிட பழங்கள் வெட்டி வைத்திருக்கிறேன் வந்து சாப்பிடு . வர வர நீ சரியா சாப்பிடவே மாட்டேங்குற .

நீ இப்படி சாப்பிடாம இருந்தா என் பேரனுக்கு எப்படி பால் பத்தும் . ஐயோ அத்தை நேற்று நீங்க இல்லாம இருந்ததினால் சரியா சாப்பிட முடியல . இனிமேல் நீங்க என்னை கவனிக்க போறீங்க .

நீ இருக்கியே ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்க . ஏன் அத்தை அப்படி சொல்றீங்க ? ஆமா இனிமேல் நீ பழைய மாதிரி இருக்கக் கூடாது .

இப்போ நீ ஆரவ்வுக்கு தாய் , என் மகனும் மனசு மாறி வந்துட்டான் . குழந்தைக்க தேவையையும் கவனித்து , வீட்டையும் பார்த்துகிட்டு , உன் புருஷனையும் கவனிக்கணும் புரியுதா .

அது அத்தை நான் எப்படி அவரை கவனிக்க என்னால் அவர் கூட சேரவே முடியல . அது மட்டுமா வீட்டு நிர்வாகத்தை உங்களை விட வேறு யாரால் நல்லா செய்ய முடியும் .

ஆனால் ஒன்று ஆரா நீ நல்லா பேச கத்துக்கிட்ட . என் குரு நீங்க இல்லையா அத்தை , அப்போ நான் இப்படி கூட பேசாம இருந்தா நல்லாவா இருக்கும் . மொத்தத்தில் வரம் தந்த சாமி தலையில் கை வைத்த கதை மாதிரி நீ இருக்க .

ஐயோ அத்தை உங்களை போய் நான் அப்படி நினைப்பேனா , நீங்க யாரு ? சொல்லு , நான் யாரு ? என் செல்ல அத்தை போதுமா . அதானே பார்த்தேன் .

சரி சரி பேசினது போதும் உட்கார்ந்து சாப்பிடு . ஆமா நேத்து ஜாஸ்மின் வந்தாளா ? ஆமா அத்தை இன்றைக்கு இன்னும் ஆளை காணவில்லையே . வர வர பாதி நாள் வர மாட்டேங்குறா .

நீங்க அவளுக்கு அதிகமா இடம் கொடுக்குறீங்க பின்ன அவ என்ன செய்வா . நான் இடம் கொடுக்கிறேன் சரி , நீயாவது ஸ்ட்ரிக்டா இருக்க வேண்டியதுதானே .

அய்யய்யோ அத்தை அது என்னால முடியாது . இப்படி எல்லாம் வற்றிக்கும் முடியாதுன்னு இருந்தா எப்ப தான் இந்த வீட்டு பொறுப்பை ஏற்று நடத்துவ . ஆரா இனிமேலும் நான் உன்னை இப்படி இருக்க விட மாட்டேன் .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிOù les histoires vivent. Découvrez maintenant