அத்தியாயம் 13

204 7 0
                                    

இப்படியாக ஒரு மாதம் கடந்த நிலையில் ஆரா காலையில் எழும்பாமல் இருப்பதை பார்த்தவர் , பயந்து போய் அவளை தட்டி எழுப்ப , ஆரா... என்னடா... தூங்கிட்டு இருக்க ? தெரியல அத்தை எனக்கு தூங்கிட்டே இருக்கணும் போல இருக்கு .

பசியே எடுக்கல . என்னடா சொல்ற ? ஆமா அத்தை.. இரண்டு நாளாவே இப்படித்தான் இருக்கு . ஆரா உனக்கு எப்ப கடைசியா பீரியட் வந்தது ? அது கல்யாணத்துக்கு முன்னாடி .

" ஓ " நான் உன் மாமா கிட்ட சில பொருட்களை வாங்கிட்டு வர சொல்றேன் . அதை வைத்து டெஸ்ட் செய்தால் உனக்கு தெரிந்து விடும் .

அத்தை அவர் கோபப்படுவாரா ? அவன் கோபப்பட்டால் அவனை வீட்டை விட்டு விரட்டி விட மாட்டேன் . ஆத்விக்கை பற்றி என்ன நினைக்கிறாய் ? என்னால் அவரை புரிந்து கொள்ள முடியவில்லை .

பாவம் என் மருமக என் மகனைப் பற்றி அவனுடைய குணத்தை கூட இன்னும் புரிஞ்சிக்க தெரியாமல் இருக்கிறா . இப்படி ஒரு பொண்ணு கூட வாழ அவனுக்கு ஏன் கசக்குது என்று தான் தெரியல .

சாந்தினி சபரிக்கு போன் செய்தவர் இரவில் வரும்போது அவர் சொன்ன பொருளை வாங்கி விட்டு வர சொல்ல , சாந்தினி... என்னங்க... இந்த வயசுல உனக்கு திடீரென்று இந்த பொருளுக்கு என்ன தேவை வந்தது ?

ஒருவேளை நீ பிரக்னன்றா ஆயிட்டியோ . அடச்சீ... உங்க புத்தி ஏன் தான் இப்படி போகுதோ .
எதுக்குடி கோவப்படுற . நான் எவ்வளவு எதிர்பார்ப்போட கேட்டேன் தெரியுமா .

பேரன் பேத்தி எடுக்கிற வயசுல உங்களுக்கு பிள்ளை கேட்குதா ? இருக்கிறதே  போதாதா . இதில் இன்னொன்றா .  இப்ப எதுக்கு கோவப்படுற என் சந்தேகத்தை கேட்டது ஒரு தப்பா .

உங்க சந்தேகத்தில் நெருப்பு வைக்க , போனை வை நான் இரவு வரும்போது வாங்கிட்டு வரேன் . வரவர என் பொண்டாட்டிக்கு ரொம்ப கோபம் வருது . பாவம் அவளும் என்ன செய்வா .

ஒரே மகன் இப்படி தான் தோன்றியா இருந்ததும்  எங்க இரண்டு பேராலயும் ஒன்றும் செய்ய முடியவில்லையே . எங்களுக்கு பேர குழந்தை வந்தால் நல்லது தான் .
என் மகன் அப்பவாவது மாறுவானா என்று பார்க்கணும் .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now