அத்தியாயம் 22

446 7 1
                                    

ஒரு நாளாவது எனக்கு போன் செய்தியா ? இப்ப பெருசா கையை பிடிக்க வந்துட்டா . ஐஸு என்னை மன்னித்து விடுடி . இனிமேல் நான் வாரம் ஒரு முறை உன் கிட்ட பேசுறேன் போதுமா .

ஆமாடி ஜஷு நேத்து உன்னை பார்க்க முடியல . அது பாட்டி நேத்து என்னை பொண்ணு பார்க்க வந்தாங்க . உன்னை அவங்களுக்கு பிடித்ததா ? ஆமா . அடுத்த மாதம் கல்யாணம் .

நீ இங்க இருப்பியா ஆரா ? இருக்க மாட்டேன்டி . இன்னும் நாலு நாள்ல கிளம்பி போயிடுவேன் . அதானே பார்த்தேன்
நீயாவது எனக்க கல்யாணத்தில் இருக்கிறதாவது .

ஐசு... என்ன பாட்டி , ஆரா கலந்துக் காட்டி என்ன , அவ சார்பா நாங்க எல்லாரும் வருவோம் இல்ல . அப்படியே உனக்கு தங்கத்தில் இரண்டு வளையல் , கம்மல் , ஆரம் , எல்லாம் போட போறோம் .

அப்படியா பாட்டி ! ஆமாடி நீயும் எங்களுக்கு பேத்தி மாதிரி தான் . பெரியம்மா சாப்பாடு ரெடி இனி எல்லாருக்கும் பரிமாற வேண்டியதுதான் .

சரிடா கணேஷ் நீ எல்லாத்தையும் கவனி , அனைவரும் மனம் நிறைய கடவுளை தரிசனம் செய்து சாப்பிட்டு விட்டு கிளம்ப , இரவு தூங்கின பிறகு தன் கணவனின் அருகில் சென்ற ஆரா ,

ஏங்க இப்படியே என்கிட்ட எப்பவும் அன்பா இருப்பீங்க இல்ல ? ஆமா ஆரா இந்த ஆத்விக் இனி மாற மாட்டான் . மாறுற ஐடியாவும் எனக்கு இல்ல .

இன்றைக்கு நம்ம குடும்பத்தில் உள்ளவங்க எல்லாரும் எவ்வளவு ஒற்றுமையா சந்தோஷமா நம்ம மகன் பங்சனை நடத்தினாங்க . இந்த சந்தோஷம் என்றைக்கு இதே மாதிரி நிலைத்திருக்கணும் .

நானும் என் ரோபோ டேட் மாதிரி எல்லார் கூடவும் அனுசரித்து போகணும் . அப்பத்தான் குடும்பம் குடும்பமாய் இருக்கும் . நம்ம வேர் இங்க தான் இருக்கு .

ஒவ்வொரு வருடமும் நாம எல்லாரும் இங்க வரணும் . அப்பத்தான் எதிர்காலத்தில் நம்ம மகனுக்கு உறவுகளோட அருமை தெரியும் . ஆரா ஆசையாக தன் கணவனை பார்க்க ,

என்னடி உன் பார்வை இப்படி இருக்கு ? நீங்க சரியான தத்தி . என்னது ? நான் தத்தியா ! ஆமா ..பின்ன ..இல்லையா , நான் ஆசையா உங்களை பார்த்தா நீங்க அதை புரிஞ்சுக்காம இருக்கீங்க

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now