அத்தியாயம் 4

224 6 0
                                    

சாந்தினி மற்றும் ஆத்விக்கும் சென்னை ஏர்போர்ட்டில் இறங்கியதும் , அவர்களை கணேஷ் வரவேற்று வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போக ,

இவர்களைப் பார்க்க ஊர் மக்கள் திரண்டு நிற்பதை பார்த்தவன் என்னம்மா இவங்க எல்லாரும் இப்படி நின்று என்னையே பார்த்துட்டு நிற்குறாங்க  .

இந்த காலத்துல கூடவா இப்படி வேலை வெட்டி இல்லாம அடுத்தவங்க என்ன செய்யுறாங்க என்று பார்த்துக் கொண்டு நிற்பாங்க . டேய் கண்ணா தப்பா பேசாதடா அவங்க ஒரு ஆர்வத்துல பாக்குறாங்க .

நீ இதையெல்லாம் கண்டுக்காம இரு .‌எங்களுக்கு இதெல்லாம் பழக்கம் தான் . நீ புதுசு இல்லையா அதுதான் உனக்கு  இப்படி தோணுது .

வீட்டின் முன் கார் நின்றதும் பாட்டியும் தாத்தாவும் அவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க , கிராண்ட்பா  கிரானி நல்லா இருக்கீங்களா ?

எங்களுக்கு என்னடா நாங்க நல்லா இருக்கோம் . ஆனா நீ தான் 14  வருஷம் கழிந்து இப்ப வந்து இருக்க . சாந்தினி சும்மா சொல்லக்கூடாது எங்க பேரன் சும்மா ஹீரோ மாதிரி இருக்கான் .

அவனுக்கு என்ன , உங்க மருமகன் சம்பாதித்து கோடி கோடியா வச்சிருக்கார் . அதை செலவழித்து சந்தோஷமாக இருக்கான் .  மாம் என்ன நீங்க என்னைப் பற்றி இப்படி தர குறைவா கிரானி கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க .

கிரானி உங்க மருமகனுக்கு கம்பெனில பாதி வேலை செய்வதே நான் தான் தெரிஞ்சுக்கோங்க . எவ்வளவு நேரம் தான் வீட்டுக்கு வெளியே நின்று பேசிட்டு நிற்ப  உள்ளே போவோம் .

கிரானி... என்ன பேராண்டி , நான் முன்னாடி வரும்போது உங்ககிட்ட என்ன சொன்னேன் . இந்த வீட்டை இடிச்சிட்டு பெருசா கட்ட சொன்னேனா இல்லையா ?

எங்க இரண்டு பேருக்கும் வயசாயிற்று . எங்களுக்கு இருக்கிறதோ ஒரே மக .  நீயாவது வருஷத்துக்கு ஒரு முறை வந்தாலாவது இடிச்சி பெருசா கட்டி இருப்போம் .

நீ பிறந்ததிலிருந்து மூன்று முறை மட்டும்தான் இங்கு வந்த . இப்ப உன் கல்யாணம்னால   வந்து இருக்க . கல்யாணம் நல்லபடியா முடிந்து நீங்க கிளம்பி போன பிறகு நீ எப்ப வருவியோ அது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம் .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now