அத்தியாயம் 16

220 8 0
                                    

அவருக்கு தான் என்னை பிடிக்காதே . என்னைத்தான் பிடிக்கல , அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் செய்ய வேண்டும் . என் கூட வாழனும் . என் மேல பாசமா இருக்காரே என்னை நல்ல கவனிப்பார் என்று நினைத்தேன் .

ஆனா வந்த இரண்டாவது நாள் என்னை கொடுமைப்படுத்தி அவர் அறையை விட்டு போக சொன்னாரு . அத்தை சொல்றாங்க அவர் மாறினதா . ஆனா எனக்கு தான் இன்னும்  நம்பிக்கை வரல .

ஊர்ல இருக்கும்போது ஐந்து நாளும் எப்படி பாசமா இருக்கிற மாதிரி நடிச்சாரு . என்னால கண்டுபிடிக்க கூட முடியல . இனி அவர் மாறினாலும் என்னால எப்படி நம்ப முடியும் .

அத்தை மாமா எல்லாரும் அவர் வீட்டுக்கு வந்தவுடன் சந்தோஷப்படுறாங்க . எனக்க ஒருத்திக்காக அவங்க சந்தோஷத்தை ஏன் கெடுக்கணும் . அவங்க இரண்டு பேரும் நம்புற மாதிரி அவர் இருந்தால் நல்லது தான் .

தன் மகன் பால் குடித்த நிலையிலேயே தூங்கி விட , அத்தை என்ன ஆரா உங்க பேரன் தூங்கி விட்டான் வாங்க . இதோ வந்துட்டேன்டா .

கணவன் , மனைவி இருவரும் டீ குடித்துக் கொண்டிருக்க சாந்தினி பாதி குடித்த டீ கப்பை அப்படியே வைத்துவிட்டு குழந்தையை கவனிக்க செல்வதை பார்த்தவர் ,

பாவம் சாந்தி குறைந்தது ஒரு வருடம் இப்படித்தான் அவளுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும் . ஒரு மூன்று மாதம் முடிந்து ஆராவையே குழந்தையை கவனிக்க சொல்லணும் .

அப்பத்தான் அவளுக்கும் பொறுப்பு வரும் .  இல்ல என் மகனுக்கும் மருமகளுக்கு இன்னும் முட்டிக்கும் . ஆரா என் பேரன் நல்லா தூங்கிட்டான் போல . ஆமா அத்தை
..நான் அவனை தொட்டிலில் படுக்க வைக்கிறேன் .

நீ பாலை குடித்துக் கொண்டு தூங்கு . சரிங்க அத்தை . மூன்று மாதம் தான் நீ இப்படி ஓய்வு எடுக்கணும் . அப்புறம் சின்ன சின்ன வேலைகளை செய்ய தொடங்கணும் புரியுதா . அப்படியே குட்டி பையனை நீ தான் கவனிக்கணும் .

நான் அப்பப்ப ஒத்தாசை தான் செய்வேன் .  இவ்வளவு நாளா ரெஸ்ட் எடுத்த மாதிரி இனி இருந்தா வாழ்க்கை முழுவதும் உனக்கு பொறுப்பே வராது .  அப்போ அத்தை உங்க மகன் சொல்ற மாதிரி நான் எதுக்கும் லாயக்கு இல்லாதவளா .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now