அத்தியாயம் 9

193 8 0
                                    

இதுக்காகவே நான் அடிக்கடி ஊருக்கு வரணும் . நீங்க இருக்கீங்களே சபரி உங்க மகனுக்கு இங்கு யாரையும் தெரியாது . அதனால உங்களை தேடினான் .

ஆனால் அங்கே போன பிறகு பழைய மாதிரி இருப்பான் பாருங்க .  நம்ம மகன் மருமகள் கிட்ட இங்க இருக்கிற போது பாசமா இருக்கான்  , பார்ப்போம் ... அவன் அங்க போன பிறகு இதே மாதிரி இருக்கானா என்று ,

ஏங்க இப்படி சொல்றீங்க ? எல்லாம் உன் மகனுக்க புத்தி  தெரிந்ததினால் , ஏங்க அவனுக்கு கல்யாணம் முடிந்ததிலிருந்து ஒரு மணி நேரம் கூட நம்ம மருமகளை அவன் பிரியல . அப்படிப்பட்டவன் அங்கு போனா மாறுவானா என்ன ,

நான் ஏன் உங்க கிட்ட கேட்கிறேன் என்றால் நீங்கள் எப்பவும் வேலைனு தான் ஓடிட்டு இருந்தீங்க . ஆனா என்னைத் தவிர வேறு யாரையும் நீங்க  நிமிர்ந்து  கூட பார்க்க மாட்டீங்க அதான் கேட்டேன் .

நான் நம்ம கலாச்சாரத்தில் வளர்ந்து இங்கு வந்தவன் . நம்ம மகன் அப்படியா ,  இங்கேயே பிறந்து வளர்ந்தவன் . பார்ப்போம்... என்னை மாதிரி அவன் இருந்தா நம்மளை விட அதிகமா யாரு  சந்தோஷப்பட போறாங்க .

ஆராதனா ஆத்விக்கின் கையை பிடித்துக் கொண்டே  நடக்க தொடங்கியதும் கையை உதறியவன் நீ என்ன குழந்தையா என் கையை பிடிக்கிற .  வெளியில் போகும் போது இப்படி என் கையை பிடிக்காதே எனக்கு பிடிக்காது .

ஆராதனாவின் முகம் சோகமாவதை பார்த்தவன் எதுக்கு இப்ப முகத்தை இப்படி வச்சிருக்க . நான் தனிக்காட்டு ராஜாவா வளர்ந்தவன் . நீ கையை பிடித்தால் எனக்கு அன்கம்பர்ட்டபிளா பீல் ஆகுது .

என்னை தப்பா நினைக்காத ஓகே . நான் சொன்னது புரியுது இல்ல . ம்..இனி உங்க கை பிடிக்கல சரியா . நீ சொன்னதை வாழ்க்கை முழுவதும் ஃபாலோ பண்ணினா எனக்கு அதுவே போதும் .

நீ ஒன்றும் குழந்தை இல்லை . இனிமேல் இப்படி பழகித்தான் ஆகணும் . பேசாம நான் அத்தை கூடவே வந்து இருக்கலாம் . இவர் கூட இருக்க ஆசைப்பட்டு இப்ப மூக்குடைந்து போய் நிற்கிறேன் .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now