அத்தியாயம் 12

189 6 0
                                    

ஏய் அழகையை நிப்பாட்டு . இனி ஒரு முறை உன் அழுகை  சத்தம் கேட்டது அப்புறம் மீண்டும் என்னை ஒரு முறை மிருகமா தான் பார்ப்ப . என் பக்கத்திலேயே  படுக்காத பக்கத்து ரூமுக்கு போ .

இல்ல நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது . அவனை கண்களில்  மிரட்சியுடன் பார்த்தவள் கஷ்டப்பட்டு எழும்பி பக்கத்து அறைக்கு போய் படுத்து  அழுது கொண்டே  தூங்கி விட ,

காலையில் எழுந்த சாந்தினி தன் மருமகள் வெளியே  வராமல் இருப்பதை பார்த்தவர் புன்னகை முகத்துடன் காபி போட கிச்சனுக்கு செல்ல , 8 மணிக்கு எழுந்து வந்த சபரிக்கு காபி கொடுத்தவர் ,

தன் கணவனுடன் சேர்ந்து காபி அருந்தி கொண்டே நேற்று நடந்ததை பற்றி சொல்ல , சாந்தினி எனக்கென்னமோ நம்ம மகனால பெரிய பிரச்சனை வரும் போல இருக்கு .

என்ன சொல்றீங்க சபரி ? ஆமா.. நிச்சயமா  நம்ம மகனால நம்ம மருமகளுக்கு பிரச்சினை தான் வரப்போகுது . ஏங்க நானே கலக்கத்தில் இருக்கேன் நீங்க வேற என்னை பயம் காட்டாதீங்க .

குட் மார்னிங் மாம் ...குட் மார்னிங் கண்ணா ...ஆரா எங்க ?  என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும் . என்னடா சொல்ற ? அவளை இன்றைக்கு நாங்க பார்க்கவே இல்லை .

நாங்க நினைத்தோம் தூங்கிட்டு இருக்கான்னு . நீ அவ எங்க இருக்கான்னு தெரியாதுன்னு சொல்ற . மாம் அவளை பற்றி கேட்டு என்னை எதுக்கு டென்ஷன் படுத்துறீங்க .

டேய் என் மருமக எங்கடா ? இத பாருங்க டேட்  என்கிட்ட இப்படி சத்தம் போடுவதை நிப்பாட்டுங்க . நான் அவளை பக்கத்து ரூம்ல போய் படுக்க சொன்னேன் . ஒரு வேளை அவ அங்க தூங்கிட்டு இருக்கலாம் .

எதுக்குடா தாலி கட்டின மனைவியை பக்கத்து ரூம்ல போய் படுக்க சொன்ன ? டாட் ..  முதல்ல என் பிரைவசில  தலையிடறதை நிப்பாட்டுங்க .  ஏங்க அவன்கிட்ட பேசறதை  நிப்பாட்டுங்க .

நான் ஆராவை போய் பார்த்துட்டு வாரேன் . சாந்தினி அந்த இடத்தை விட்டு அகன்றதும் சபரி தன் மகனை பார்த்து முறைக்க , உப்ஸ்.. டாட் இப்படி என்னை பார்ப்பதை நிப்பாட்டுங்க .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now