அத்தியாயம் 2

307 7 0
                                    

அம்மா நான் சாந்தினி பேசுகிறேன் . நீங்க எப்படி இருக்கீங்க ? எங்களுக்கு என்னடி நாங்க நல்லா தான் இருக்கோம் .  ஆத்விக்கிற்கு  பொண்ணு பார்க்க சொன்ன ,  நானும் அப்பாவும் பார்த்து பேசி பூவும் வைத்து  விட்டு வந்தோம் .

நீ என்னடான்னா அப்புறம் போனே பேசாம இருக்க . அதை ஏன் கேக்குறீங்க உங்க பேரனை  தான் உங்களுக்கு தெரியுமே . இவ்வளவு நாளும் கல்யாணத்துக்கு சம்மதிக்காமல் இருந்தவன் .

இன்றைக்கு காலையில் தான் சம்மதித்தான் . அதுதான் உடனே உங்களுக்கு போன் செய்தேன் .  சரிடி...
சாந்தினி என் பேரன் ஆத்விக் எப்படி இருக்கான் ? அவனுக்கு என்ன அவன் நல்லாத்தான் இருக்கிறான் . என்னையும் உங்க மருமகனையும் தான் ஒரு வழி ஆக்குகிறான் .

இதெல்லாம் கல்யாண முடிகிற வரைக்கும் தான் .  அப்புறம் பாரு பொண்டாட்டியையே சுத்த போறான் . அது தானே பிரச்சினையே என் மகன் இங்கேயே அவனுக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட சுத்தீட்டு இல்ல இருக்கான் .

என்னடி சாந்தினி அமைதியாக இருக்க ? அம்மா அந்த பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டாளா ? சம்மதித்த மாதிரி தாண்டி . என்ன அவ பாட்டியை நினைத்து கவலைப்படுறா .

நாமளே ஆள் வைத்து பார்க்கலாம் என்று சொல்லுங்க . சொல்லாம இருப்பேனா ? சொன்ன பிறகும் யோசிக்கிறா . ஆனா அந்த ஆராதனா பொண்ணு தான் நம்ம ஆத்விக்கிற்கு ஒத்து வருவா .

பார்க்க அவ்வளவு அழகா இருக்கா . ஆனா படிப்பு குறைவு . நீ சொன்னதுனால தான் நாங்க பூ வைத்து விட்டு வந்தோம் . சரி அடுத்த மாதம் நாங்க அங்க வாரோம் .

நாங்க வாற  பத்து நாள்ல கல்யாணத்தை முடிக்கலாம் . சரி டி சாந்தினி . உன் அப்பா வறாரு  நான் போனை வைக்கிறேன் .  கோமதி யார் போன்ல ? எல்லாம் நம்ம மகத்தான் .

ஆத்விக் கோட   கல்யாணத்தை பற்றி பேசினா . எல்லாம் சரிதானே ஆமாங்க... அந்த ஆராதனை தான் நமக்கு பேத்தியா வரப்போறா . பணம் காசு இல்லாம இருந்தாலும் அந்த புள்ள குணத்துல தங்கம் .

அவ பாட்டி மேல உயிரையே வைத்திருக்கிறா .  இந்த காலத்துல யார் இப்படி வயசு காலங்ககிட்ட பாசமா இருக்கா . நீங்க சொல்றதும் சரிதான் .. நம்ம பேரன்  பிறந்து இத்தனை வருஷத்துல மூன்று முறை தான் நம்ம வீட்டுக்கு வந்தான் .

நாம  எவ்வளவோ கூப்பிட்டும் வரவே மாட்டேங்குறான் . கவலையை விடு சரோஜா . நம்ம பேரனுக்க கல்யாணத்தை ஊரே மெச்சும் படி நடத்த போறேன் . நானும் அதைத்தான் நினைத்தேன் .

உங்க தம்பி பிள்ளைங்க கிட்ட சொல்லுங்க . கணேசும் ,  சுரேஷும் , எல்லா வேலையும் பார்ப்பார்கள் . நீ சொல்றதும் சரிதான் . நான் இன்றைக்கே  என் தம்பி கிட்டயும் அவன் பிள்ளைகள் கிட்டேயும் பேசுறேன் .

டேய் ராமசாமி... என்னண்ணா என் வீடு தேடி வந்து இருக்க ஏதாவது முக்கியமான விஷயமா ? ஆமாடா ...என் பேரனுக்கு அடுத்த மாதம் கல்யாணத்தை முடிக்கலாம் என்று இருக்கோம் ..

நீயும் உன் பிள்ளைகளும் தான் முன்னாடி நின்று நல்லபடியா எல்லாவற்றையும் முடித்து தரணும் . அதுக்கு என்ன அண்ணா செய்துவிட்டால் போச்சு . என் பிள்ளைங்க கிட்ட பேசுறேன் .

பொண்ணு அந்த ஆராதனா பிள்ளை தானே ? ஆமாண்டா அந்த பிள்ளை தான் .  ஆனா…. அந்த பிள்ளைக்கு படிப்பு ரொம்ப குறைவாச்சே ?

ஆமாடா ...ஆனா குணத்த்துல அவ தங்கம் இல்லையா அதான் என் பேர னுக்கு பேசி முடித்தது .

சரி அண்ணா நீ சொல்லிட்ட இல்ல எல்லா வேலையும் என் இரண்டு மகன்களும் பேரன்களும் பார்த்துப்பாங்க . சரிடா அப்ப நான் கிளம்புறேன் .

அந்த நேரம் வீட்டுக்குள் வந்த கணேஷ் என்ன பெரியப்பா தம்பி ஞாபகம் வந்துட்டா என்ன , நீங்களே எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க . எல்லாம் நல்ல விஷயம்  தாண்டா கணேசா .

என் பேரனுக்க கல்யாணத்தை அடுத்த மாதம் நடத்த போறோம் . நீயும் சுரேஷ்சும்  தான் முன்னாடி நின்று நடத்தணும் . சொல்லிட்டீங்க இல்ல பெரியப்பா ஜாம் ஜாம் என்று நடத்தலாம் .

நம்ம வீட்டு விசேஷத்தை நாங்க நடத்தாமல் வேறு யார் நடத்துவா .  அப்ப சரிடா நான் கிளம்புறேன் . உன் அப்பன் கிட்ட எல்லாத்தையும் பேசி விட்டேன் . சாந்தினி ஃபோன் செய்து சொன்னவுடன் கல்யாண வேலையை தொடங்கலாம் .

அப்ப நான் கிளம்புறேன்டா , சரிங்க பெரியப்பா …

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now