அத்தியாயம் 20

163 5 0
                                    

எட்டு மாதங்கள் கழிந்து

ஆரா , ஆரவ் நேத்துதான் பிறந்தது போல் இருக்கிறது அதுக்குள்ள அவனுக்கு ஒரு வயது ஆகப்போகுது . இன்னும் இரண்டு நாள்ல நாம எல்லாரும் ஊருக்கு போகணும் .

இந்த முறை நம்ம பிளைட்லயே போகலாம் . அப்பத்தான் நம்ம எல்லாருக்கும் சௌகரியமாக இருக்கும் . நீங்க என்ன முடிவெடுத்தாலும் அது சரியா தான் இருக்கும் அத்தை .

இப்படியே சொல்லிட்டு எஸ்கேப்பாக பாரு . ஹி... ஹி... ஹி... அத்தை ஊர்ல போய் எத்தனை நாள் தங்க போறோம் ? ஒரு வாரம் தாண்டா . ஆத்விக்கிற்கும் , உன் மாமாவுக்கும் இங்க நிறைய வேலை இருக்கு
இல்ல ,

ஆமா இல்ல ஆனா எனக்கு ஊர்ல குறைந்தது ஒரு மாதமாவது இருக்க வேண்டும் என்று ஆசையா இருக்கு . அடுத்த முறை போகும்போது உன் ஆசை தீர நிற்கலாம் சரியா .

இந்த முறை ஆரவ்விற்கு மொட்டை அடித்து விட்டு , பிறந்தநாள் கொண்டாடிவிட்டு எல்லாரையும் பார்த்துட்டு வரலாம் . நாம அங்க நின்னாலும் அப்பாவும் மகனும் இங்க கஷ்டப்படுவாங்க .

எல்லாவற்றுக்கும் வேலைக்காரங்க இருக்காங்களே அத்தை . வேலைக்காரங்க இருந்தாலும் நாம கவனிக்கிற மாதிரி வருமா . ஏய் ஆரா உன்னை மாதிரி பொறுப்பில்லாதவங்க என்று என் மாமை நினைச்சியா ?

மாம் டேடை விட்டு பிரியவே மாட்டாங்க . டேட்டுக்கு எப்பவும் மாம் கிட்ட இருக்கணும் . ஆனா எனக்கு தான் அந்த கொடுப்பினை இல்லாம போயிடுச்சு .

எப்ப பாரு ஊருக்கு போறேன்னு புலம்ப வேண்டியது . அத்தை இவர் எப்பவும் இப்படித்தான் என்கிட்ட கோபப்படுகிறார் . எதுக்குடா என் மருமகள் கிட்ட சண்டை போடுற ?

இந்த தடவை ஊருக்கு போனா எல்லாம் சரியாகும் . போய் நிம்மதியா உன் பொருள்கள் எல்லாத்தையும் எடுத்து வை . ஓகே மாம் . ஆரா நீ ஏன் இன்னும் ஆத்விக் கை புரிஞ்சுக்காம இருக்க ?

அவன் உன் கூட வாழ ஆசைப்படுகிறான் . ஆனா நீ அதை புரிந்து கொள்ளாமல் நடந்துட்டு இருக்க . அத்தை என்னால் அவரை மூழு மனதா நம்ப முடியல . நான் என்ன செய்யறது .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now