அத்தியாயம் 8

221 7 0
                                    

டேய் கண்ணா... வாட் மாம் ..ஆராதனா  இப்ப உன் கூட வரக்கூடாது . சொன்னா புரிஞ்சுக்கோடா .  எங்களுக்கு தான் கல்யாணம் முடிந்தாச்சுல்ல பிறகும் எதுக்கு அவளை என்கிட்ட இருந்து பிரிக்க நினைக்கிறீங்க .

ஐயோ டேய் ராத்திரி ஒன்பது மணிக்கு தான் நல்ல நேரம் அப்பத்தான் அவ உன் கூட இருக்கணும் . மாம் இந்த காலத்துல போய் நல்ல நேரம் கெட்ட நேரம் என்று பேசிட்டு இருக்கீங்க .

டேய் கண்ணா  புரிஞ்சுக்கோடா .
ஓகே மாம் இப்ப என்ன இவ இப்ப என்னுடன் இங்கே இருக்க கூடாது அவ்வளவு தானே . ஆராதனா நீ மாம் கூட போ . ஆராதனா வாடாம்மா , 

தன் மருமகளின் கையைப் பிடித்துக் கொண்டு கீழே அழைத்து வந்தவர் ,
இதோ  பாரு ஆராதனா என் மகன் சரியான அவசரக்காரன் . அவன் யார் பேச்சையும் கேட்க மாட்டான் . என் பேச்சுக்கு மட்டும் தான் கட்டுப்படுவான் .

நாளைக்கு காலைல நீ அறையை விட்டு வெளியே வரும்போது என் மகன் உன் முந்தானையை பிடிச்சிட்டு தான் வெளியே வரணும் .

நான் என்ன சொல்றேன்னு புரியுதா ? ம்..என்ன நீ , வாயை திறந்து பேச மாட்டேங்குற . என் மகனுக்க வேகத்துக்கு நீ இப்படி ஆமை மாதிரி இருந்தா எப்படி உருப்படுவ .  நீ அவன்கிட்ட காட்டுற பாசத்துல அவன் எங்கே இருந்தாலும் உன்னை தேடி வரணும் புரியுதா ?

சரிங்கத்தை ...என்ன அவங்க வாயை திறந்தா இங்கிலீஷ்ல தான் பேசுறாங்க . எனக்கு அவங்க என்ன சொல்றாங்கன்னு புரியல அதான் பயமா இருக்கு .

தொடக்கத்தில் எல்லா பொண்ணுங்களுக்கும் புருஷன் காரன் கிட்ட பயம் இருக்கத்தான் செய்யும் .

அதெல்லாம் கொஞ்சம் நாள் தான் . அப்புறம் அவன் உன் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான் பாரு . நான் படிப்பு குறைவு என்று  அவங்ளுக்கு தெரியுமா அத்தை ? தெரியாது …

இன்னும் நான் அவன் கிட்ட சொல்லவில்லை . அங்க போன பிறகு சொல்லிக்கலாம் . நீயும் அவன்கிட்ட இப்ப எதையும் பேசி வைக்காதே . அமெரிக்க போன பிறகு நானே சொல்றேன் சரியா .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now