அத்தியாயம் 5

226 7 0
                                    

அப்படி என்ன தலை போற விஷயம் நடந்து போச்சு . எல்லாம் நல்ல விஷயம் தாண்டி . உன்னை கட்டிக்க போறவரு வந்துட்டாரு . பார்க்க அம்புட்டு அழகா ராஜா மாதிரி இருக்காரு .

இதைத்தான் ஏற்கனவே சொல்லிட்டியே . திரும்பவும் எதுக்கு இம்புட்டு தூரம் ஓடிவந்து சொல்லிட்டு இருக்குற . எல்லாம் ஒரு சந்தோசம் தாண்டி .

யாருக்கு ? உனக்கு தாண்டி ...நான் கேட்டேனா ... நான் உங்ககிட்ட அந்த ஆளு இப்ப எப்படி இருக்காருன்னு . ஏண்டி உன் வீட்டுக்கு அவர் வீட்டுக்கும் ரொம்ப தூர ஆச்சே .

நீ எப்படி அவரைப் பார்த்த , நான் மட்டும் இல்லடி ஊரே உன் புருஷனை பார்க்க கூட்டமா நின்னுடுச்சுன்னா பார்த்துக்கோ . நான் கூட கிட்ட போய் பார்க்கல .

தூரமா நின்னு பார்த்துட்டு உன்கிட்ட சொல்ல ஓடி வந்தேன் . ஏண்டி ஐசு உனக்கு வீட்ல வேற வேலையே இல்லையா ? எப்பவும் என்னை கட்டிக்க போறவங்களோட வீட்டையே சுத்தி வர .

எனக்கு வேலை இல்லைன்னு உன்கிட்ட சொன்னேனா . வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவன் ஆச்சே நம்ம ஊரு பொண்ணை கல்யாணம் கட்டிக்க வந்திருக்கான்னு எல்லாரும் பார்த்துட்டு நின்னாக .

நானும் கூட்டத்தோட பார்த்துட்டு ஓடி வந்து உன்கிட்ட சொல்ல வந்தா நீ என்னடான்னா கேள்வி மேல கேள்வி கேட்கிற .  வெளியில பிடிக்கல பிடிக்கலைன்னு சொல்லீட்டு நான் பார்த்துட்டு வந்தது பொறக்காம  பொருமுற  .

நான் எங்கடி  பொருமுறேன் . இவ்வளவு நேரம் வேலையிருக்குனு சொல்லீட்டு இப்ப என்னை கட்டிக்க போறவரு  வீட்டையே  சுத்திட்டு இருக்கியே அதான் கேட்டேன் .

உனக்கு என்ன பணக்காரன் புருஷனா வரப்போறான் அதான் இப்படி பேசிட்டு இருக்க . அடியே ஐசு ...  என்ன பாட்டி…. எதுக்கு எப்பவும் என் பேத்திக்கு கிடைத்த வாழ்க்கையை நினைத்து புலம்பிட்டு திரியுற .

உன் ஆத்தாளு கிட்ட சீக்கிரம் உனக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்க்க சொல்லு . நீயும் ஏரோபிளேன்ல போகலாம் இல்லையா .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிWhere stories live. Discover now