நிழல் 1

11.1K 228 53
                                    

தாமரை மலர்களை துள்ளி குதித்து எட்டிப்பார்க்கும் மீன்கள் போல மகேந்திரன் (மஹி) கண்கள் கயல்விழியை (கயல்) நோக்கின......

மஹி
ராஜா வீட்டு கன்று குட்டி....
தொழிலதிபர் மணிவண்ணணின் ஒரே மகன்....

அகண்ட அழகிய வீதிகள்.... வீட்டின் முன் நவீன அழகிய
அலங்காரங்களுடன் தோட்டம் ... பார்ப்பவர்களின் மனதினை பறிக்கும் அழகிய வீடுகள், அவ்வாரான வீதியில் ராஜ கோட்டை போல் அவ்வீதியின் நடுநாயகமாக இருந்தது மஹி வீடு.

இதற்கு முற்றிலும் எதிரான சூழலில் அமைந்திருந்தது கயல் இல்லம்...

வயல்களின் நடுவில் , ஒற்றையடி பாதையில் , விண்ணை தொட ஏங்கி நிற்கும் பனை,தென்னை,ஈச்ச மரங்களின் வரிசையில் அழகிய சிறிய குடிசை வீட்டின் செல்ல மகாராணியாக வாழ்ந்தாள் கயல்...

ரம்பை,ஊர்வசி,மேனகை அனைவரும் சற்று பொறாமை படும் அளவிற்கு கயலின் அழகு இருந்தது....

பள்ளி கல்வியை முடித்துவிட்டு கல்லூரியில் கால் பதிக்க ஆவலாக இருந்தாள்...

அவளின் வீட்டை சுற்றிலும் அழகிய செடி கொடிகள் ,அவற்றில் பூத்து குலுங்கும் வண்ண மலர்கள் ... இவற்றை எல்லாம் விட்டு விடுதியில் தங்க அவள் மனம் இடம் தரவில்லை , வேறு வழி இன்றி சம்மதித்தாள்.

புதிய ஊர்,புதிய நண்பர்கள்,புதிய சுதந்திரம்...

தந்தையின் நம்பிக்கையை பொய்யாக்க கூடாது என்ற எண்ணம் , எந்த நம்பிக்கையை... ??

கல்லூரி போகும் பெண்களின் தந்தைகளுடைய ஒரே கவலை , தன் மகள் எவரையும் காதலிக்க கூடாது...

அதே எண்ணம் தான் கயலின் தந்தைக்கும் ,தன்னால் முடிந்த அளவு ... இக்கால இளம் ஆண் பிள்ளைகளை பற்றி குறையாக கூறி அறிவுரைகளை வழங்கி தன் பணியை சிறப்பாக செய்து , மகளை அனுப்பி வைத்தார்.

கயலுக்கு இருந்த ஆர்வம் அவளை தாவரவியல் பிரிவு எடுக்க வைத்தது ...

மஹி தன் தந்தை தொழிலுக்கு உதவும் வண்ணம் காமர்ஸ் பிரிவை தேர்ந்தெடுத்திருந்தான்.

மஹியின் வீட்டு தோட்டத்தில் அவனுக்கு ஒரு தோழன் இருந்தான் , அவன் வீட்டில் இருந்த பழைய வேப்ப மரம் ...

மஹி ஒரே பிள்ளை என்பதால் அவனுக்கு மரத்தினை துணை ஆக்கினார் மஹியின் தந்தை...

சிறு வயதில் இருந்தே அம்மரத்திற்கும் அவனுக்கும் நெருங்கிய உறவு இருந்தது.. வாய் இல்லை என்றாலும் மஹியின் மன எண்ணங்களை அம்மரம் நன்கு உணர்ந்தது...

கயல் மஹி இருவரும் ஒரே கல்லூரியில் அவரவர் வகுப்பறைக்குள் நுழைகிறார்கள்....

ஒரு மணி நேரத்தில் ப்ரஸ்சர்ஸ் டே (freshers day ) விழா அழைப்பு வர ,அனைவரும் கலையரங்கம் (auditorium) நோக்கி சென்றனர்...

கல்லூரி முதல்வரின் அறிமுகத்திற்கு பின் ... ஒவ்வொருவராக தங்களை மேடையில் ஏறி அறிமுகம் செய்து கொண்டனர்.

மஹி மேடையில் பேச துவங்கினான்,
அவனின் கொஞ்சும் தமிழ் உச்சரிப்புகள் அனைவரையும் கவர்ந்தது...

சூரியனை பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டு சூரிய காந்தி மலர் தலையை நாணத்தினால் முதலில் தாழ்த்தி கொள்வது போல ...மஹியின் குரலை கேட்ட கயல் தலை நிமிராதவளாய் இருந்தாள்...

எனினும் தன் ஒரக்கண்களால் அவனை பார்க்காமல் அவளால் இருக்க முடியவில்லை...தன் தந்தையின் சொற்களை வலுகட்டாயமாக தன் நினைவிற்கு கொண்டு வந்தாள்.

அழகான முகம், ஆஜானுபாகுவாய் இருந்த உடல்வாகு... பார்ப்பவரை கவரும் பார்வை ,இவ்வாறாக இருந்தான் மஹி.

கயலின் வாய்ப்பு வந்ததும் மேடை ஏற ஆயத்தமானாள் ...
இதற்கு முன் இவ்வளவு பெரிய மேடையையும் பார்த்தது இல்லை ..
இவ்வளவு மாணவர்களையும் பார்த்து இல்லை...

பயம் மூச்சையே அடைப்பது போல இருந்தது ... மனதில் வீரலட்சுமி அம்மனை வரவைத்துக்கொண்டு மேடை ஏறினாள்....

நிலா போன்ற முகம்... அதற்கு ஏற்ற திலகம் ... வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகு தேவதையாய் மேடையில் தோன்றினாள்...

மேடை ஏறியதும் அவளையே அறியாமல் அவள் கண்கள் மஹியை கூட்டத்தில் கண்டுபிடித்தது .

ஒரு நிமிடம் மஹியும் தன் தலையை தூக்கி பார்க்க ....

எதிர்பாராத விதமாக அமைந்தது மஹி கயல் முதல் பார்வை.

நிழல்(completed)Dove le storie prendono vita. Scoprilo ora