நிழல் 17

2.9K 148 47
                                    

திருடனுக்கு தேள் கொட்டினது போல .... என்ற பழமொழி ரம்யாவிற்கு மிகச்சரியாக பொருந்தியது.

தன் முகபாவனையை எப்படி சரி செய்வது என தெரியாத ரம்யா, செயற்கையான சிரிப்பை முகத்தில் ஒட்டிக்கொண்டு குளியல் அறைக்குள் ஓடினாள்.

"இவளுக்கு என்ன பிரச்சனை , வர வர இவளின் பேச்சும் சரியில்லை, நடவடிக்கையும் சரியில்லை.

இவளை கொஞ்சம் வாட்ச் செய்யனும், அந்த ஆர்யாக்கிட்ட தான் இப்படி திருட்டுதனமா பேசுகின்றாளோ?" என பல எண்ணங்கள் கயலை குழப்பியது.

என்ன இருந்தாலும் அடுத்தவர்கள் கைப்பேசியை எடுத்தது தவறு என கயலின் மனம் அவளுக்கு ஒரு அறிவுறை கொடுக்க, ரம்யா வந்ததும் ஒரு மன்னிப்பு கேட்டுவிடலாம் என முடிவெடுத்தாள் கயல்.

வெளியே வந்த ரம்யா , நேராக தன் கட்டிலிற்கு சென்றாள், கைப்பேசியை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேரினாள்.

அக்கம்பக்கம் பார்த்துவிட்டு மீண்டும் அந்த எண்ணிற்கு அழைத்தாள், "ஹலோ, சாரி.." என ரம்யா கூற
"என்ன கடுப்பேத்தரயா? காலையில் தான் சொல்லி அனுப்புரேன் , இப்போ வேற யாரோ போன் அட்டன் பண்றாங்க " என கத்தினான்.

"அது கயல் தான் , சாரி இனிமே இப்படி நடக்காது " என சமாதானம் கூறினாள்.

இதனை தன் அறையில் உள் இருந்து கேட்ட கயல் ரம்யாவிடம் பெரிய மர்மம் உள்ளது , அவள் யாரிடமோ மாட்டிக்கொண்டுடிருக்கிறாள் அவளை காப்பாற்றி அவளின் நிலையை சரி செய்ய வேண்டும் என நினைத்தாள்.

ஒருபாதி கதவு நீயடி... கயலின் கைப்பேசி ஒலிக்க மறுமுனையில் மஹி.

"நான் சென்னை வந்துட்டேன், செல்வா அப்பா ஆபிரேசன் நல்லபடியா முடிஞ்சது" என கூறினான்.

இதனை கேட்டு மகிழ்ந்த கயல், நாம் இன்றே சந்திக்க வைண்டும், பல விசயங்கள் இங்கே நடந்துவிட்டது, நான் குழம்பியிருக்கிரேன் என புலம்பினாள்.

1 மணி நேரத்தில் வழக்கமாக சந்திக்கும் கடற்கரைக்கு வருவதாக கூறினான் மஹி.

உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வண்ணத்துப்பூச்சியாய் அழகிய உடை உடுத்திக்கொண்டு பறந்து சென்றாள் கயல்.

அன்று பார்க்கில் சிந்து ஆர்யாவை சந்தித்தது, ரம்யாவின் நடவடிக்கை என அனைத்தையும் மஹியிடம் ஒப்பித்துவிட்டு ஒய்ந்தாள்.

கயலின் கைகளை மெதுவாக பிடித்த மஹி, ஏன் இவ்வளவு யோசனைகள், சற்று பொருமையாக இரு அனைத்தையும் பாத்துக்கொள்ளவோம் என சமாதானப்படுத்தினான்.

மஹி கைப்பிடித்தவுடன் வெக்கத்தில் தலை குனிந்தவள் அவன் பேசி முடித்தப்பின்பு தான் நிமிர்ந்து பார்த்தாள்.

"கயல் என் மனதில் பல நாளாக இருக்கும் ஒன்றை இன்று உன்னிடம் கூறப்போகிறேன்" என்றான் மஹி.

தன்னை காதலிப்பதாக மட்டும் கூறிவிடகாகூடாது கடவுளே... என கயல் வேண்டி முடிப்பதற்குள்,

" உன்னை என் மனதார நேசிக்கின்றேன், எப்போது நீ என் மனைவியாவாய்??" என தெளிவாக தமிழில் கூறி கயலையை தத்தளிக்கவிட்டான்.

மனதினுள் நீயே நிறைந்துள்ளாய்,
மறுமொழியளிக்க வார்த்தையில்லை,
மனதார உன்னை சரிபாதியாக்கினேன்,
மகிழ்ச்சியை மகிழ்ந்து கூறும் நிலையில் நான் இல்லை,
நம் மனங்கள் பேசுமானால் ,
என்
மவுன மொழி உனக்கு புரியும்,
மனங்களுக்கு மட்டுமே தெரிந்த மொழியினால் தெரிவிக்கிரேன்
என்
மனதில் நிறைந்த காதலை..!

வாயில் உதிர்க்கும் வார்த்தைக்கு இடமளிக்காமல் மவுனமொழியாலே தன் காதலை மஹிக்கு புரிய வைத்தாள் கயல்.

மனங்கள் ஒன்றானப்பின் மன எண்ணங்களை அறிய வார்த்தைகள் தேவைப்படுவதில்லை.

கயலின் மனதில் ஏற்பட்டிருக்கும் தயக்கத்தை நன்றாக உணர்தான் மஹி.

" உன் வீட்டில் பேசி , உன் அப்பாகிட்ட சம்மதம் வாங்குவது என் கடைமை, நீ கவலை படாதே " என்றவனை கண் இமைக்காமல் பார்த்தாள் கயல்.

பேச முடியாதவளாய் ஆனந்த கண்ணீருடன் மஹியை தன்னுடன் சேர்த்து அனைத்துக்கொண்டாள் கயல்...

தொடரும்...

நிழல்(completed)Where stories live. Discover now