நிழல் 25

2.7K 127 31
                                    

தனிமை - சிலருக்கு சுகம்,
சிலருக்கு சுமை.
தனிமை சிலருக்கு கேள்வி,
அந்த தனிமையே சிலருக்கு பதிலும் கூட.

இதில் தான் எந்த கட்டத்தில் இருக்கின்றோம் என தெரியாமல் தத்தலித்தான் மஹி. இதனை கயலிடமே தெரிவித்து ஒரு முடிவிற்கு வருவோம் என நினைத்தவன் கைப்பேசியில் அழைத்தான்.

"ஹலோ, கயல்..."
என்ற ஒற்றை வார்த்தை கேட்டதும் தெம்பி அழ துவங்கினாள் கயல். நாம் இன்னும் விசயத்தையே துவங்கவில்லை , இவள் ஏன் அழுகின்றாள்? வேறு காரணம் இருக்குமோ.... என எண்ணிய மஹியின் மவுனத்தை, மஹி..... என்ற கயலின் குரல் களைத்தது.

"சொல்லு கயல், என்னாச்சி???" என்றான் மஹி.

" மஹி, நமக்கு திருமணம் நடக்க கொஞ்சம் கூட வாய்ப்பில்லை மஹி" என்ற கயலின் வார்த்தை மஹிக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது.

"அப்பா கிட்ட பேசினேன் மஹி, அவருக்கு காசு, பணம் , செல்வாக்கு, சாதி இது எல்லாம் பிரச்சனை இல்லை மஹி." --கயல் முடிக்க,

"அப்போ எது பிரச்சனை?" ---மஹி கேட்க ,

" எனக்கு உறவுக்கார அக்காள் இருந்தாள், அவளுக்கு தாய் தந்தை யாரும் இல்லை, ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து தான் கல்யாணம் செய்து வைச்சாங்க, நான் பஸ்ட் யியர் படிக்கிரப்போ அவ பாம்பு கடிச்சி இறந்துட்டா, அப்போ ஊர் பொது மக்கள் அப்பா இட்ட கொஞ்சி அந்த அக்கா கணவர எனக்கு கல்யாணம் பண்ணி தர கேட்டிருக்காங்க, படிக்கிற பொண்ணு கிட்ட இப்போ நான் பேசல, அவ படிச்சி முடிச்சதும் நிச்சயம் பண்ணி தரேன்னு சொல்லிருக்காரு, அதுக்காக தான் என் கிட்ட ஒவ்வொரு முறையும் மறைமுகமா காதல்லாம் வேண்டாம்னு சொல்லிருக்காரு.... நான் தான் அவர் பேச்ச கேட்கல" என கூறி அழுது தீர்த்தாள் கயல்.

அடிக்கு மேல் அடி விழுந்தால் என்ன தான் செய்வது என தெரியாமல் போனை அப்பரம் பேசரேன்னு சொல்லிட்டு கீழே வீசினான் மஹி.

உதவி கேட்க எவரும் இல்லை, ஆலோசனை கூறுவதற்காவது யாராவது இருக்கின்றனரா? என யோசித்த மஹிக்கு சட்டேன நினைவிற்கு வந்தது, தன்னைப்பற்றி சிறு வயதில் இருந்தே நன்கு தெரிந்த தன் தமிழ் ஆசான் "நமச்சிவாய வாத்தியார்" , தன் பள்ளிப்பருவத்தில் இருந்தே நலம் விரும்பியாக மஹி நினைப்பவற்களில் இவரும் ஒருவர்.

நேர்மையான மனிதர், திறைமைசாளி, முக்கியம் பொறுமைசாளி.

அவரிடமே செல்வோம் என முடிவெடித்தான் மஹி.

தன் தொலைப்பேசியில் அவரின் எண்ணிற்கு அழைத்தான்.

"வணக்கம் ஐயா, நான் மஹி பேசரேன்... நலம்தானே ஐயா..." --மஹி.

" அடேய் மஹி பயலா .... நலம் தான்டா... நீ எப்படி இருக்க... "-- நமச்சிவாய வாத்தியார்.

" நலம் தான் ஐயா , உங்க கிட்ட கொஞ்சம் ஆலோசனை கேட்கனும், வீட்டுக்கு வரட்டுமா ஐயா?? " என்றான் மஹி.

" நான் ஊர்ல இல்லையேப்பா, வெளியூர் வந்திருக்கேன் திருப்ப வர கொஞ்ச நாள் ஆகும்..." ஐயா வின் பதில்.

"நான் அங்கையே வந்து பார்க்கின்றேன் ஐயா, ரொம்ப முக்கியம் அதான்..." என இழுத்தான் மஹி.

"சரி, அப்போ நீ ஏற்காடு பக்கத்துல இருக்க விடியனூர் வந்துரு " என்ற வார்த்தையை கேட்ட மஹி, நல்லது ஐயா, இப்பவே கிளம்பரேன் அப்போ தான் காலையில அங்க வந்திடுவேன் என்றான்.

"நல்லது பா... வா" என்று கூறி அழைப்பை துண்டித்தார் நமச்சிவாய வாத்தியார்.

விடியனூர்....... மஹியின் பிரச்சினைகளுக்கு விடிவை தருமா... நாமும் பயணிப்போம், காதலி இல்லாத காதல் பயணத்தில்.....

விடியனூர் அனைவரையும் அன்புடன் வரவேற்க தயாராக உள்ளது, அடுத்த அத்தியாயத்தில். 😉

நிழல்(completed)Where stories live. Discover now