நிழல் 26

3K 135 27
                                    

காலை 6 மணி, விடியனூர்.

விடியனூர் எல்லாம் இறங்குங்ககக.... பேருந்து நடத்துனரின் குரல் கேட்டு கண் விழித்தான் மஹி.

இரவு தூக்க கலக்கத்தில் வைத்த செல்லை அரக்க பரக்க தேடினான், முதல் ஜீப்பில் முன்னடியே இருந்த போனை கவனிக்காமல் பை முழுவதும் தேடிய பின்பு கடைசியாக கவனித்தான்.

"ஐயா.... நான் பேருந்து நிலையத்தின் ஓரம் இருக்கும் ஆலமரத்தில் அடியில் இருக்கேன்.... எப்படி வரனும்..." மஹி கேட்க, சிவசக்தி அம்மா வீட்டிற்கு போகனும் வழி சொல்லுங்கனு அங்க யார்கிட்டயாவது கேளு தம்பி என்றார் வாத்தியார்.

"சரிங்க ஐயா, நான் கேட்டு வந்துடரேன்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் மஹி.

முக்கால் டிரௌசர்,அரை கை பனியன்,தலையில் துண்டினால் தலைப்பாய் போல கட்டிக்கொண்டு, கையில் பால் தூக்கு, இரண்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு ஒரு வயதான முதியவர் தல்லாடி நடந்துவந்தார், அவரை நோக்கி விரைந்து சென்றான் மஹி.

"வணக்கம் தாத்தா, எனக்கு சிவசக்தி அம்மா வீட்டு போக வழி சொல்ல முடியுமா? " என கேட்டான்.

சிவசக்தி கிழவி வீட்டுக்கா போகனும், நீ யாரு தம்பி? உன்னை இந்த பக்கம் பாத்ததில்லையே என்றார் அந்த முதியவர்.

"ஆமாம் ஐயா, நான் ஊருக்கு புதுசு, நமச்சிவாய வாத்தியார பார்க்க வந்திருக்கேன்" என்ற மஹியிடம் வழி முழுக்க பேச்சி கொடுத்துக்கொண்டு வந்தார் அந்த பெரியவர்.

"இங்க பாருப்பா, நான் இனி மேற்கா போவனூம்.... நீ அப்படியே கிழக்கே போ.... கொஞ்ச தூரத்துல ஒரு குளம் வரும், அதுக்கு பத்து வீடு தள்ளி இருக்கு சிவசக்தி வீடு...மஞ்சா கலர் கேட் இருக்கும்" என்றார் அந்த முதியவர்.

"ரொம்ப நன்றி ஐயா " என்று கூறிவிட்டு நடக்க துவங்கினான் மஹி.

குளத்தின் அடியில் அமர்ந்த மஹி, சற்று களைப்பாற்றிக்கொண்டு, வீட்டை கண்டுபிடித்தான்.

"ஐயா...ஐயா...." --மஹி

"வா மஹி, உள்ளே வா..."

இது யாரு வீடு, இவர் இங்கே என்ன செய்றாரு, வீடே காலியா இருக்கே, யாரும் இங்க இருக்க மாதிரி தெரியலயே என மஹியின் மனதில் கேள்விகள் அடுக்கடுக்காக எழ, அனைத்தையும் மனதோடு வைத்துக்கொண்டு, ஐயா தண்ணீர் கிடைக்குமா? என கேட்டான்.

நிழல்(completed)Tempat cerita menjadi hidup. Temukan sekarang