நிழல் 13

3K 147 38
                                    

எப்போதும் பேருந்து நிலையத்தில் நாம் எதிர்பார்க்கும் பேருந்து தக்க சமயத்தில் வந்ததாக சரித்திரமே இல்லை.

நாம் எதிர்பாக்கும் பேருந்துக்கு நேர்மாறான பேருந்துதான் எப்போதும் வரும் என தனக்குள்ளேயே முனகிக்கொண்டாள் கயல்.

வண்டியில் மஹி அவள் முன் வந்து நிற்க , ஆச்சரியம் கலந்த வெட்கத்தில் அவள்  முகம் சிவந்தது.

"என்னங்க இந்த பக்கம் நான் தான் உங்கள் இங்க வர வேண்டாம்னு சொன்னேன்ல??" என கயல் கேட்க, "எப்பவும் போற ரூட்ல இன்னைக்கு ஹெவி டிராப்பிக் காட்டுச்சி அதான் இந்த பக்கம் வந்தேன், அப்படியே உன்னையும் பிக் அப் பண்ணிட்டு போயிடலாம் அதான்" என்றான்.

"பைக்லயே வா கயல் , சீக்கிரம் போகலாம் " என்ற மஹியின் வார்த்தைகள் கயலின் மனதில் வண்ணபூக்களாய் பூத்து குளுங்கியது.

தனக்கு பிடித்த தன்னவனுடன்,
தான் மட்டும் வண்டியில் செல்ல,
தடை கூறவா போகிறாய் கயல்??

என கயலின் மனது அவளிடம் கேட்க ,
மறுமொழி கூறாமல் வண்டியில் ஏறினால்.

அசூர காற்று முகத்தை தழுவ,
ஆசை நாயகன் முன்னே இருக்க,
பேச துடித்த உதடுகளை , மவுனப்பூட்டாள் கட்டி,
ஆரவாரம் இல்லாத சாலையில்,
அமைதியாக இருவரும் சென்றனர் .

கடற்கரை காற்றில் களைப்பாகும் வரை நடந்துவிட்டு பின் இருவரும் அமர்ந்தனர்.

"மஹி, உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும் " - கயல்

" நானும் பேசனும் கயல் , சரி நீயே முதல்ல சொல்லு " என்றான் மஹி.

" ஆர்யா , ரம்யாவ ஏமாத்தினது உண்மை தான் , ரம்யாவே என் கிட்ட சொன்னாள்" கயல் கூறி முடிக்க,

மஹியின் முகத்தில் சற்று கோபம் தெரிந்தது.

"ஆனால் ஆர்யா இதனை மறைக்கிறான் " என்றாள் தயக்கத்தோடு.

" நான் விசாரிச்சப்ப கூட அவனோட கேரக்டர் பத்தி யாரும் பெஸ்ட் னு சொல்லலை, இத எப்படி சிந்துவிற்கு புரிய வைப்பதுனு தான் புரியல" என மன வருத்தத்தில் கூறினான் மஹி.

அந்த பணியை தான் ஏற்பதாகவும், ஆர்யாவை பற்றி முழுமையாக சிந்துவிற்கு புறிய வைப்பது தன் கடமை எனவும் கூறினாள் கயல்.

தன் தங்கை மீது கயல் கொண்டுள்ள அன்பை எண்ணி மகிழ்ந்தான் மஹி.

கயலின் கைகளை பற்றி , " தேங்ஸ் கயல் " என்றான்.

"என்ன மஹி, எனக்கு தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு, ப்ரண்ட்ஸ் குள்ள எதுக்கு தேங்க்ஸ் " என்றாள் கயல்.

"கயல்... இன்னும் கொஞ்சம் பேசனும்..." - மஹியின் குரல்.

குனிந்து மணலில் கிறுக்கிக்கொண்டிருந்த கயல் மஹியின் முகத்தை பார்த்தாள்.

" அது எப்படி செல்லவது என தெரியவில்லை.. " என இழுத்தான் மஹி.

மஹியின் எண்ணங்களை ஒருவாரு முன் கணக்கிட்டு வைத்திருந்த கயல், மஹியை மேலும் பேசவிட்டால்,  தாம் விழி பிதுங்கி முழிக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்ற யோசனையில்,

மஹி , மழை வருவது போல தெரிகிறது, வண்டியை கிட்ட நடந்துக்கிட்டே  பேசலாமா ?   என பேச்சை திசைத்திருப்பினாள் .

சற்று ஏமாற்றத்துடன் , சரி என தலையசைத்த மஹி, வண்டியை நோக்கி நடந்தான்.

வண்டியின் அருகில் வந்ததும், தூரல் ஆரம்பிக்க, இருவரும் அங்கிருந்து கிளம்ப முடிவேடுத்தனர்.

அடுத்த 20 நிமிடத்தில் இருவரும் விடுதியை அடைந்தனர்.

கயலிடம் விடைபெற்றுக்கொண்டு தன் வீட்டின் திசை நோக்கி வண்டியை திருப்பினான்.

தன் அறைக்குள் சென்ற கயல் , சட்டென கட்டிலில் விழுந்தாள்.

கண்களின் ஓரம் கண்ணீர் கசிய , மஹியை பேசவிடாமல் செய்ததை எண்ணி வருந்தினாள்.

மஹி மனதில் தன் மீதான காதல் வளர்வதை உணர்ந்தவள், தான் அதற்கு தகுதியானவள் இல்லை என்றும், தந்தையின் வார்த்தைக்காக ஆயிரமாயிரம் ஆசைகளை மனதிற்குள்ளே புதைத்துக்கொண்டு பெற்றோரை மகிழ்விக்கும் சராசரி பெண்களிள் தானும் ஒருவள் என தன் மனதார வருந்தினாள்.

சிந்துவிடம் ஆர்யாவின் உண்மைகளை தெரிவித்தப்பின் மஹியிடம் தன் மன எண்ணங்கள் முழுவதையும் தெரியபடுத்த வேண்டும் என முடிவெடுத்தாள்.

நிழல்(completed)Where stories live. Discover now