நிழல் 29

3.3K 126 61
                                    

ஆர்யாவின் இல்லம்

என்ன ப்ளேன் பண்றது?? என யோசித்தபடியே வீட்டின் மாடியில் சுற்றிக்கொண்டிருந்தான் ஆர்யா.

சட்டென ஒரு ஐடியா வந்ததும், வீட்டிற்கு வெளியே வந்து பைக்கை எடுத்தான்,

"டேய், மணி 6, நாளைக்கு காலையில உனக்கு நிச்சயதார்த்தம் தெரியும்ல..." என ஆர்யாவின் அம்மா குரல் கொடுக்க.... வந்திடுவேன் மா... சிந்துவ பார்க்க தான் போரேன் என்றான்.

சிந்துவிற்கு கால் செய்தான், "ஏய் சிந்து வெளியே யாருக்கும் தெரியாம வா, உன் வீட்டு தெரு முனையில ஐ ஆம் வைய்ட்ங் " என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

இந்த நேரத்துல இங்க என்ன பண்றான், கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி டார்ச்சர் பண்றானே என முனகிக்கொண்டே வந்து சேர்ந்தாள் சிந்து.

ஒரு ஐடியா வந்தது, அதான் நைட்டோட நைட்டா எக்ஸிகியூட் பண்ணலாம்னு வந்தேன் என்ற ஆர்யாவை நறுக் என ஒரு கில்லு கில்லினாள் சிந்து .

சொல்லரத முதல்ல கேலு...... என சிந்துவின் காதில் ஏதோ ரகசியமாக கூறினான் ஆர்யா.

"ஏய், செம ஆர்யா.... உன் மூலைக்கா இப்படி ஐடியா எல்லாம் வருது" என கிண்டல் அடித்தாள் சிந்து.

"டைம் வேஸ்ட் பண்ணாத, வா போகலாம்" என்றான் ஆர்யா.

இப்பவேவா??? , காலையில போகலாம் என்றாள் சிந்து.

பேபி, நாளைக்கு காலையில 10 மணிக்கு நமக்கு நிச்சயதார்த்தம், உறவுகள் எல்லாம் 5 மணிக்கே வர ஆரமிச்சிருவாங்க, மறந்துட்டையா?? என கேட்க ஆர்யாவுக்கு அசட்டு சிரிப்பினாள் பதில் அளித்தாள் சிந்து.

"இரு முதல்ல இங்க பேசிட்டு கிளம்புவோம்" என கூறிவிட்டு கயலுக்கு கால் செய்தான் ஆர்யா.

சுப்பு எங்க இருக்காரு பாத்து அவர கூட்டிக்கிட்டு ரோட்டு முனைக்கு வா, கேள்வி எதும் கேட்காத, என கூறிவிட்டு ஆர்யா போனை கட் செய்தான்.

வீடு முழுவதும் தேடி, சுப்புவை கண்டுபிடித்தாள் கயல்.

நன்றாக கும்பகர்ணண் போல 7 மணிக்கெல்லாம் சாப்பிட்டு நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்த சுப்புவை பார்த்ததும் கயலின் கோபம் ஆகாயத்திற்கு ஏறியது.

நிழல்(completed)Where stories live. Discover now