நிழல் -8

3.5K 153 27
                                    

"அது வந்து மஹி....." என இழுத்த கயலின் வார்த்தைகள் இன்னும் கொஞ்ச நேரம் ஊஞ்சலில் விளையாட விட மாட்டார்களா என ஏங்கும் குழந்தைகள் மனதை போல, மஹியின் மனதையும் ஏங்க வைத்தது.

இவள் பேசவில்லை என்றால் கூட பரவாயில்லை இப்படியே என் முன் நின்றுகொண்டிருந்தாள் போதும் என ஆயிரமாயிரம் எண்ணங்கள் மஹியின் மனதில் ஊஞ்சலாடின.

"மஹி, நான் எதுக்காக கூப்பிட்டேன்னா......" என மறுபடியும் இழுத்த கயலை தன் கள்ள பார்வையால் பேச விடாமல் செய்தான் மஹி.

"ம்ம்ம் , சொல்லுங்க கயல்"என்றான் மஹி.

"சிந்துவ பத்திதான் ஒரு விசயம் பேசனும் " என கயல் கூற, சிந்துவ பத்தியா ? என்னாச்சி ? என்றான் மஹி.

சிந்து தன் வகுப்பு தோழனான ஆர்யாவை காதலிப்பதை பற்றி கூறினால் கயல்.

"இங்க பாருங்க கயல், எங்க வீட்ல எப்போதும் லவ்கு அப்சக்சன் பண்ண மாட்டாங்க , நோ பிராபலம் " என முடித்தான் மஹி.

தான் கூற வந்த செய்தியை முழுவதும் சொல்லி முடிப்பதற்கும் குறுக்கே பேசி பேச்சை முடித்த மஹி மீது கயலுக்கு கோபம் ஏற்பட , "கொஞ்சம் பொறுமை மஹி, என்னை பேசி முடிக்க விடுங்க" என்றாள் தன் அனல் பார்வையினால்.

சரி சரி, கூல்... சொல்லுங்க என மஹி சமாதானப்படுத்தினான்.

"ஆர்யா, எப்போதும் கலகலப்பாக பேசுவான்... எல்லார்கிட்டயும் ப்ரண்ட்லி டைப் என பேர் வாங்கிட்டான். ரிச் பேமிலி ..... எப்போதும் அவன் ராயல் லுக்னால நிறைய பெண்களை இம்பிரஸ் பண்ணான், சிந்துக்கு எனக்கு இன்னும் நிறைய பேருக்கு அவன் குலோஸ் ப்ரண்ட்" என்று கயல் முடிப்பதற்குள் குறுக்கிட்டான் மஹி.

அப்போ ஓகே தான், இந்த சிந்து என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்ற மஹிக்கு மீண்டும் ஒரு சுப்பிரபாதம் கயலிடமிருந்து கிடைத்தது.

"மஹி, நான் முடிச்சிட்டேன்னு சொன்ன பிறகு தான் நீங்க பேசனும் சரியா?" என்றாள் கண்டிப்பாக.

அவளின் கண்டிப்பில் இருந்த அழகையும் தவறாமல் கவனித்தான் மஹி.

"ஓகே மேம்..." என்றான் மஹி கிண்டலாக.

பின் ஆர்யா குணங்களை இன்னும் சற்று விரிவாக கூற துவங்கினாள் கயல்.

சிந்துவிற்கு ஆர்யாவை மிகவும் பிடித்துவிட்டது, அவன் வார்த்தை வித்தகன், அவனின் பேச்சை கேட்டால் எல்லோருக்கும் அவனை பிடித்துவிடும். சிந்து என்னிடம் முதல் முதலில் இதை பகிர்ந்த போது எனக்கும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவன் மனம் எப்போழுது எப்படி மாறும் என யாருக்கும் தெரியாது என்று கயல் முடிக்க, பொறுமையை இழந்த மஹி,

"ஏன் அப்படி சொல்லற கயல்" என்றான்.

"ஆமாம் மஹி, ஆர்யா முதல்ல என்னோட ரூம்மெட் ரம்யாவ தான் லவ் பண்ணான் , எனக்கே இது ஒரு நாளுக்கு முன்னாடி தான் தெரியும். ரூம் சுத்தம் செய்யும்போது அவளோட டைரி என்கிட்ட கிடச்சது , அதுல முதல் பக்கத்திலேயே ஆர்யா ரம்யா போட்டோ இருந்தது, உள்ளே படித்தேன் ரம்யா அவ லவ்வ ஆர்யா கிட்ட சொல்லிட்டதா எழுதி இருந்தா, இது வரை ஒரு முறை கூட இத பத்தி ரம்யா என்கிட்ட பேசினதில்ல , ஏன்னு தெரியல " என முடித்தாள் கயல்.

"தலையே சுற்றுது கயல் , என்ன பண்றது தெரியல , சரி நானும் ஆர்யாவ வாச் பண்றேன் ... நீங்க ரம்யா கிட்ட பேசி எதாவது விசாரிங்க, இப்போதைக்கு சிந்துக்கு இது தெரிய வேண்டாம். ஆதாரம் இல்லாம முழுசா விசாரிக்காம சொன்னா சிந்து ஏத்துக்க மாட்டாள்" என்றான் மஹி.

"சரி மஹி , நான் காலேஜ் போகனும் 30 நிமிடம் லேட், ஈவ்வனிங் பேசலாம் " என்றவள் மின்னல் வேகத்தில் மறைந்தாள்.

நிழல்(completed)Where stories live. Discover now