நிழல் 18

2.9K 130 34
                                    

மனதில் நிறைந்தவள்

மவுனமாக பதிலக்க,

மவுனத்திற்கும் மொழியுண்டு என

மனதார உணர்ந்த

என்னை

மணாளனாக ஏற்கும்

தருவாய்க்காக

மாசில்லா மனதுடன்

மங்கையே உனக்காக

காத்திருப்பேன்...

என மஹி தன் எதிர்பார்ப்பை கவிதையாக பொழிய,

அங்கே பலத்த மழை பொழிய,  மழையில் நினைந்தாள் கயல்.

ஓயாத அலைகள் போல நம் காதலும் எப்போதும் ஓயக்கூடாது .... என ஒன்றை வார்த்தையில் தன் காதலை வெளிப்படுத்தினாள் கயல்.

கதிரவரன் தன் கைகளை சுருக்க, மென்மையான முகத்தை தொலைவில் இருந்து வெளியே காட்டினான் வெண்மை நிறத்தவன்.

மணி 6, என தேவாலய மணி அடிக்க , தன்னை மஹியிடம் இருந்து விலகிக்கொள்ள  முயற்சி செய்தாள் கயல்.

அவளை மேலும் தன்னோடு சேர்த்து அணைத்தவன் அவளின் முக மாற்றத்தை பார்க்க தலையை மென்மையாக தூக்கினான்.

வெட்கத்தில் செஞ்சூரியனைப் போல சிவந்து இருந்த கயலின் முகத்தில் தன் முதல் முத்தத்தைப் பதித்தான்.

தன் நுனி விரலினால் கீழிருந்த மணலில் தன் கால்களால் கிளரினாள் கயல்.

"மஹி, மஹி.... போதும்.... என சற்று கண்டிப்புடன் அவனை விலக்கினாள்.

மஹியின் கைகள் அவளை விட, சட்டென வெட்கத்தில் அவனின் முகம் பார்க்காமல் வேறு திசையை நோக்கி தன் பார்வையை பாய்ச்சினாள்.

"என்னை ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணிடு" என கயல் கூற,
முதல் முறையாக உரிமையாக கேட்ட கயலைப்பார்த்து உதடோரம் சிறிய சிரிப்புடன் வண்டியை எடுத்தான்.

விடுதியில் ரம்யா தன் அறையின் ஜென்னல் அருகே அமர்ந்துக்கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்திருந்தாள்.

மஹியும் கயலும் வண்டியில் சேர்ந்து வருவதை ஆச்சரியத்துடன் கண்டாள்.

நிழல்(completed)Unde poveștirile trăiesc. Descoperă acum