நிழல் 11

3.2K 149 47
                                    

எதிர்பாராத கேள்வியை எதிபாராத நேரத்தில் கேட்டுவிட்டாளே , என்ன பதிலளிப்பது , என யோசித்த ரம்யாவின் மவுனத்தை கலைக்க முயர்ச்சித்தாள் கயல்.

"ரம்யா... நான் கேட்டதற்கு பதில் .." என இழுத்த கயலை தயங்கியவாரு பார்த்த ரம்யா பேச துவங்கினாள்.

"கயல், ஆர்யா என்னோட ப்ரண்ட் , அவ்வளவு தான் , ஏன் என்னாச்சி ? " என பதற்றமில்லாமல் வினாவினாள்.

ரம்யா இன்னும் அவளோட டைரியை தான் படித்ததை தெரிந்துக்கொள்ளவில்லை என மனதிற்குள் நினைத்த கயல், இவளிடம் இருந்து உண்மையை சீக்கிரத்தில் தெரிந்துக்கொள்ள வேண்டும் , ஆனால் இப்போது இதற்கு தகுந்த நேரம் இல்லை என தனக்குள்ளே பேசிக்கொண்டு தன் கட்டிலில் சென்று அமர்ந்தாள்.

தன் கைபேசியை எடுத்து பார்த்த கயல், வாட்ஸ்ஆப் நோடிபிகேசனை பார்த்தாள்.

மஹியிடம் இருந்து 3 மெசெஜ் வந்திருந்தது.

"எங்கே போயிட்டு வர கயல் ? அந்த ஆர்யா கிட்ட உனக்கு என்ன பேச்சி? அதுவும் பார்க்ல " என்ற மஹியின் மெசெஜ் கயலுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் மனதில் ஒருவித ஆனந்தம் ஏற்பட்டது . மஹி தன் மீது வைத்துள்ள அன்பை நினைத்து தனக்கு தானே சிரித்தாள்.

Dpயை எடுத்து மஹியின் புகைப்படத்திடம் பேச துவங்கினாள்.

"நான் என்ன செய்யரேன்னு எனக்கே தெரியாம வாட்ச் பண்றியா, இடியட் ... லவ்வபில் இடியட்... " என்ற பேசியவள் தன் மனதினை கட்டுப்படுத்த பல முறை முயன்று கைபேசியை கீழே வைத்தாள்.

"ஒரு பாதி கதவு நீயடி , மறுபாதி கதவு நானடி....." என கயலின் கைபேசி சினுங்க , கையில் எடுத்து பார்த்தாள்.

மறுமுனையில் மஹி.....

கடுங்குளிரில் குளிர்ந்த நீரில் கை வைப்பது போன்ற ஒரு உணர்வு, போனை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மஹியின் அழைப்பையே பார்த்துக்கொண்டிந்தாள்.

"கயல் , போனை எடுடி , கையில வச்சிக்கிட்டு என்ன வேடிக்கை ? " என ரம்யா குரல் கொடுக்க , வேகமாக போனை எடுத்து பேச துவங்கினாள்.

"என்ன போன் அட்டன் பண்ண இவ்வளவு நேரமா ? " என்ற மஹியிடம் "சாரி , பார்க்கல" என தன் முதல் பொய்யை கூறினாள் கயல்.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப, காதலுக்கு ஒரு ஐநூறு பொய்யாவது தேவைப்படும் தானே???

நீ ஏன் தனியாக பூங்கா சென்றாய், என்னை அழைத்திருக்கலாமே என்ற மஹியிடம், ஆர்யா தன்னுடைய வகுப்பு நண்பன் , இதுவரை எண்ணிடம் அவன் எப்போதும் தவறாக ஒரு வார்த்தை கூட பேசினதில்லை, நடந்துக்கொண்டதும் இல்லை, அவன் மீது நம்பிக்கை சற்று குறைந்திருந்தாலும் உங்களிடம் கூறியிருப்பேன் என தன் மறுமொழியை அளித்திருந்தாள் கயல்.

தனக்கு பிடிக்காதவன், சில பழக்கங்களில் தவறானவன் என்றாலும் அவனின் அனைத்து குணத்தையும் சந்தேகிக்காமல் , தைரியமாக அவனிடம் தனியே சென்று பேசிவிட்டு , அதனையும் எனக்கு புரிகின்றவாறு எடுத்து கூறின கயலின் செயலை நினைத்து மிகவும் பெருமிதப்பட்டான் மஹி.

தன் வாழ்வில் இவளை ஒருகனமும் இழக்க கூடாது என தனக்கத்தானே கூறினான்.

மஹியின் அக்கறை வார்த்தைகள் கயலின் மனதில் ஆழத்தில் சென்றது.

கடவுளே மஹியை காதலித்துவிடக்கூடாது ... அப்பா என்மீது வைத்துள்ள நம்பிக்கையை பொய்யாக்க கூடாது என தனக்கு பிடித்த கிருஷ்ணனிடம் கயல் வேண்டிக்கொள்ள, சுவரில் இருந்த கிருஷ்ணனின் படம் கயலை பார்த்து கள்ள சிரிப்பு சிரித்தது.

நிழல்(completed)Where stories live. Discover now