நிழல் 23

2.9K 144 44
                                    

கயல் தன் மீது வைத்துள்ள அன்பையும், நம்பிக்கையையும் நினைத்து மகிழ்ந்தான் மஹி.

இவ்வாறு பல மாதங்கள் ஓடின,
ஆண்டு இறுதி தேர்வு முடிந்ததும் கல்லூரிக்கு பத்து நாள் விடுமுறை அளித்தனர்.

விடுதியில் அனைவரும் உற்சாகமாக தங்கள் பேட்டிகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பினர்.

கயல் தன் கட்டிலில் அமர்ந்து ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

"கயல், நீ எப்போ கிளம்ப போற?"என்ற ரம்யாவின் கேள்வி சிறிதளவும் கயலின் காதுகளில் விழவில்லை.

அவளின் மனதில் எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறாள் என உணர்ந்த ரம்யா, அவளை மீண்டும் அழைக்காமல், பேட்டியை எடுத்துக்கொண்டு அறையை விட்டு கிளம்பினாள்.

சிறிது நேரத்தில் கயலின் தொலைபேசி அலற, கயல் கைப்பேசியை தேடினாள்.

கட்டிலினின் அடியில் தொலைபேசி விழுந்து கிடப்பதை கண்ட கயல், அதனை எடுத்து பார்த்தால், மஹியின் அழைப்பை பார்த்த அவள் எடுத்து பேசினாள்.

"ஹலோ கயல், நீ லக்கேஜ் எடுத்துக்கிட்டு ரெடியா இரு, நான் வந்திடுவேன் "என கூறினான்.

"சரி, அறை மணி நேரத்தில் ரெடி ஆகிடுவேன் வாங்க" என கூறிவிட்டு கிளம்ப தயாரானாள்.

மனதில் ஆயிரம் கேள்விகள், அதுவும் பதில் இல்லா கேள்விகள், இருந்தும் மஹியை முழுவதுமாக நம்பினாள்.

இருவரும் பேருந்து நிலையம் சென்றடைந்தனர்.

பத்து நாட்கள் தான் என்றாலும்
பார்க்க கூட முடியாத தருணத்தை என்னும் போது
பார்வையால் கூட அவளுக்கு விடையளிக்க விரும்பாதவனாய் இருந்தான் மஹி.

"பஸ் கிளம்ப போகிறது, நான் வரேன்,பார்ப்போம்" என்றால் கயல்.

"சீக்கிரம் வா, நீ வந்ததும் வீட்டில் நம்ம காதலை சொல்ல போகிறேன், நீயும் உன் அப்பா கிட்ட சொல்லு" என்றான் மஹி.

மகிழ்ச்சியில் பேச வார்த்தைகள் இல்லாததால்...தன் ஆனந்த கண்ணீரோடு விடைபெற்றாள் கயல்.

நிழல்(completed)जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें