நிழல் 20

2.8K 129 36
                                    

மஹி, வாழ்க்கையில் சண்டைகள் பல வரலாம், சந்தேகம் என்ற ஒன்று வந்துவிடக்கூடாது.

என் மூளை என்னை குழப்பினாலும் சண்டையிட்டாளும் நான் உன்னை சந்தேசிக்க மாட்டோன்.

ஆனால் என் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு பதில் வேண்டும், நீ உண்மையை மட்டுமே என்னிடம் கூறுவாய் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன், என் கேள்விக்கு பதில் தருவாயா ?? என்றாள் கயல்.

கயலின் வார்த்தைகள் மஹிக்கு மிக புதிதாக இருந்தது, இவள் தன்னிடம் ரம்யாவைப்பற்றி மட்டும் கேட்காமல் இருந்தால் தப்பித்து விடலாம் என யோசித்தான்.

"மஹி, ரம்யாவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம், உனக்கு அவளை எவ்வாறு தெரியும் " என தன் கேள்வியை முடித்தாள்.

இன்று சூரியன் உதிக்காமலே இருந்திருகலாம்.

எப்படி இந்த நிமிடத்தை கடப்பது?, சோதனை கடவுளே... என மனம் நோந்தான்.

"கயல், உன்னை நான் ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன், அதில் உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம், ரம்யாவிடம் நான் பேசுவது பற்றி என்னிடம் கேட்டாள் , இப்போதைக்கு என்னிடம் பதில் இல்லை, கூடிய விரைவில் உன்னிடம் அந்த உண்மையை கூறுவேன், இப்போது என்னை கேட்காதே" என்றி கூறிவிட்டு இடத்தை விட்டு கிளம்பினான்.

என்ன செய்வதென தெரியாமல், அங்கேயே சிறுது நேரம் அமர்ந்தாள் கயல்.

முழுமையாக நம்ப வேண்டும் இல்லையேல் முழுவதும் நம்ப கூடாது, ஆற்றில் ஒரு கால்,சேற்றில் ஒரு கால் எப்போதும் ஆபத்தானது என உணர்ந்த கயல், மஹியை முழுமையாக நம்பலாம் எந்த கேள்வியும் இனி கேட்க கூடாது என தனக்குத்தானே சங்கல்பம் எடுத்தாள்.

மன அமைதிக்காக சற்று நேரம் அமர்ந்தவள் பின் விடுதிக்கு சென்றாள்.

ரம்யா தன் கட்டிலில் அமர்ந்திருந்தாள், கேள்விகள் தேங்கிய மனதினை சிரமப்பட்டு கட்டுப்படுத்தினாள் கயல்.

அமைதி என்பது ஒரு கடினமான விசயம் தான் என முதல்முதலில் உணர்ந்தாள் கயல்.

ஏதோ நடக்கிறது ஆனால் என்னவென்று அறிய இயலாத சூழ்நிலை , வாழ்க்கை மிக விநோதமானது.... என தன் மனதிற்குள் புழங்கினாள்.

வராத சிரிப்பை மிகவும் கஷ்டப்பட்டு வரவைத்துக்கொண்டு ரம்யாவிடம் பேசினாள் கயல்.

"ரம்யா, உண்மைய சொல்லனும்னா உனக்குள்ள பல ரகசியங்கள் இருக்கு, அதனோட வெளிப்பாடு உன் முகத்தில் தெறியுது, ஆனால் சொல்ல மறுக்கிறது உன் மனம், கேட்க துடிக்கின்றது என் மனம்" என கயல் தன் உணர்வை அடக்கமுடியாமல் கேட்டு விட்டாள்.

படபடத்து போன ரம்யா, கயல் இப்படி பேசுபவள் இல்லை, இவளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என மனதிற்குள் கணக்கிட்டாள்.

வார்த்தைகள் மிகப்பெரிய ஆயுதம், அதனை சரிவர பயன்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்புகள் வரும் என நன்கு உணர்ந்த ரம்யா, தன் சாமார்தியமான பேச்சால் கயலை திசைத்திருப்பினாள்.

இனி பேசினாலும் ரம்யாவிடம் இருந்து எதையும் அறிய முடியாது என நன்கு தெரிந்துக் கொண்ட கயல், மௌனம் என்ற பூட்டாள் கஷ்டப்பட்டு தன் வாயை பூட்டினாள்.

வந்த கோபத்தை அடக்காவிட்டாள் அது தன் வாழ்க்கையை அடக்கிவிடும் என்ற மன எண்ணம் கயலின் மனதில் ஓட, "பேசிய வார்த்தைகளை" எப்போதும் திரும்பப்பெற முடியாது, அதற்கு மௌனமே சிறந்த மொழி என அன்று தான் கயல் தன் மனதார உணர்ந்தாள்.

நிழல்(completed)Where stories live. Discover now