நிழல் 27

2.5K 92 39
                                    

மஹியின் இல்லம்,

வீட்டில் அனைவரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

மஹி வீட்டிற்குள் நுழைந்தான்,

"வாடா மஹி, போன வேலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?" மஹியின் அன்னையின் குரல்.

"முடிஞ்சதுமா...." ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துவிட்டு வேகமாக தன் அறையை நோக்கி நடந்தான்.

படிக்கட்டில் ஏறி முடிக்கவில்லை, வாசலில் மணி அடித்தது, திலகா கதவை திறக்க, மேலே இருந்து எட்டிப்பார்த்தான் மஹி.

சிந்துவும் ஆர்யாவும் ஒன்றாக வீட்டின் கதவு முன் நிற்க, திலகா,அகிலா அவர்களையே கண் இமைக்காமல் பார்த்தனர்.

"ஏய் சிந்து, யார் இது" --அகிலா.

"உனக்கு இது யார்னு தெரியாதா என்ன?"-- சிந்து.

"சும்மா இரு அகிலா, வா பா தம்பி , உக்காருங்க, என்ன விசயம்"--திலகா.

"நன்றி மா, நான் சிந்துவோட அப்பா,பெரியப்பா கிட்ட பேசனும்" என்று ஆரியா கூற,

"இருப்பா நான் கூப்பிடரேன்" என திலகா பதில் அளித்தாள்.

மாடியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த மஹியிடம் கண் ஜாடையால் அப்பாவை அழைக்க உத்தரவிட்டாள் திலகா.

அடுத்த 10 நிமிடத்தில்,
பெரிய இடத்து ஆட்கள் என தெரியும் வண்ணம் இருவரும் வெள்ளை வேட்டி, கழுத்தில் தங்க சங்கிலி, பத்து ஆட்களை ஒரே நேரத்தில் அடிக்கும் அளவு உடல்வாக்கு என மஹியின் அப்பாவும் சித்தப்பாவும் கம்பீரமாய் வந்து சோபாவில் அமர்ந்தனர்.

மஹியும் அவர்களுடன் வந்தான், சோபாவில் அமர்ந்திருந்த சிந்து எழுந்து ஓரமாக நின்றாள்.

ஆர்யா பேச துவங்கினான்,
"ஐயா, இருவருக்கும் வணக்கம், நான் தனியா எங்கயும் பேசினது இல்ல, இது வாழ்க்கை விசயம் அதனால் தான் நேரே பேச வேண்டிய கட்டாயத்தில இருக்கேன், உங்களுக்கு தெரியாதது இல்ல, நானும் சிந்துவும் காதலிக்கிறோம், என் அப்பா சுகர் மில் வெச்சிருக்காரு, நிறைய பிஸ்னஸ் பண்றாரு, அந்தஸ்துக்கு நீங்க யோசிக்க வேண்டாம், உங்களுக்கு சரிசமமான எல்லாம் எங்ககிட்டயும் இருக்கு. அப்பாக்கு சம்மதம், உங்க சம்மதத்தோட வந்தா கல்யாணத்த பண்ணிரலாம்னு சொன்னாரு" எனக்கு நான் பேசின விதம் சரியானு தெரியல , ஆனா சொல்ல வந்த விசயத்த சொல்லிட்டேன் என ஆர்யா கூறி முடிப்பதற்குள்,

"உங்க வீட்ல சம்மதம்னா? நாங்களும் சம்மதிக்கனுமா??? ஏந்திரி நீ முதல்ல..."என கத்த துவங்கினார் சிந்துவின் தந்தை,

"பொறுமையா இருடா..." என அவரை சமாதானப்படுத்தினார் மஹியின் தந்தை.

மஹியின் தந்தை பேச துவங்கினார்,
" இது இன்னைக்கு நேத்து எடுத்த முடிவு இல்ல தம்பி, அவன் அவனோட தங்கைக்கு எப்பவோ கொடுத்த வாக்கு, அவனால் எப்படி அதை மீற முடியும்?? என கேள்வி கேட்ட மஹியின் தந்தைக்கு , "சார் அப்போ நீங்க முதல்ல இத சிந்து கிட்ட தானே சொல்லிருக்கனும். ஏன் சொல்ல? அவள் என்னை மனப்பூர்வமா கதலிச்சிட்டா, இதில எங்க தவறு என்ன இருக்கு, நீங்க நியாயத்தின் பக்கம் தானே எப்பவும் பேசுவுங்க, நியாயஸ்தர் ஆச்சே, நீங்களே சொல்லுங்க" என சரியான பதிலடியோடு முடித்தான் ஆர்யா.

பேச வார்த்தைகள் இல்லாமல் மஹியின் தந்தை முழிக்க, சிந்துவின் தந்தையின் முகத்தை பார்த்தார்.

" அடுத்த ஞாயிறு தங்கச்சி வீட்டுக்கு போயிட்டு பேசிட்டு சொல்லரேன் தம்பி..." சிந்துவின் தந்தையின் பதிலை கேட்டு இருவரும் மகிழ்ந்தனர்.

மஹியின் மனதில் இருந்த குற்ற உணர்வும் மெல்லிதாக கரைந்தது, ஓடி வந்து ஆர்யாவை கட்டி அனைத்துக்கொண்டான்.

மாலை 6 மணி,

கயல் தன் வீட்டில் சாமிக்கு விளக்கேற்றி, தன் வாழ்வில் நடக்கும் சங்கடத்திற்கு தீர்வு கூறு தாயே என வேண்டிக்கொண்டிருந்தாள்.
2 தினங்களாக மஹியிடம் பேசவில்லை, அவனின் எண் சுவிட்ஜ் ஆப் , வாடிய முகத்துடன் வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்தாள் கயல்.

சட்டென அவளின் கைப்பேசி ஓலிக்க மறு முனையில் மஹி,

இப்போது நிலைமை என்ன கயல் என விசாரித்த மஹிக்கு கயலால் நற்செய்தி ஏதும் கூற இயலவில்லை,

"முடிச்ச அளவு பேசிட்டேன் மஹி, அவரு ஒத்துக்கல, மஹிக்கு உன்ன விட்டா வேற பொண்ணு கிடைப்பா, ஆனா அந்த பையன் நிலைமையை யோசி, நான் கொடுத்த சம்மததுக்காக 3 வருசமா காத்துக்கிட்டு இருக்கான். உங்கிட்ட கூட இத பத்தி ஒரு வார்த்த பேசியிருப்பானா? அவன் நியாயஸ்தன் ..... இப்படி எல்லாம் சொல்லி என்ன பேச விடாம செய்ஞ்சிட்டாரு அப்பா" என அழுதுக்கொண்டே கூறினாள் கயல்.

என்ன பதில் கூறுவது என தெரியாத நிலையில், உன்னை நான் திருமணம் செய்தாலும் , செய்யவில்லை என்றாலும் உனக்கு எப்போதும் நான் நிழலாக இருப்பேன்.

நம் காதல் என்றும் சாகாது, இது தான் என் முடிவு என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் மஹி....

நிழல்(completed)Where stories live. Discover now