நிழல் 2

5.7K 167 21
                                    

கயல் சிறு வயதில் இருந்தே மேடை பேச்சுகளை கண்டு நடுங்குபவள், மிகுந்த பயம்,தயக்கம், சொல்ல முடியாத ஒரு உணர்வு ,கைகள் பிசைந்து கொண்டு ஒரு வழியாக தன்னை அவையில் அறிமுகம் செய்து கொண்டு ,தன் இருக்கையை நோக்கி விரைந்து சென்று அமர்ந்தாள்.

பின் தன் அடுத்த இருக்கையில் அமர்திருந்த தன் வகுப்பு தோழியான சிந்துவை பார்த்து ..."நான் பேசிய போது என் முகத்தில் பயம் தெரிந்ததா" என அசடு வழிந்தவளாய் கேட்டாள்.

"இல்லை கயல், நீ அழகா உன் இன்ட்ரோ கொடுத்த, நிறைய பாய்ஸ் உன்னை சைட் அடிசிபையிங் தெரியுமா உனக்கு" என சிந்து கூற,

வெட்கப்பட்டு கொண்டு மனதினுள்ளே சிரித்தாள் கயல்.

"சரி கயல்... என் அண்ணண் எனக்காக காத்திருப்பான் ,நீ ஹாஸ்டலுக்கு  பத்திரமாக போ ,நானும் புறப்படுகிறேன்" என்று கூறி அங்கிருந்து விடைபெற்றாள் சிந்து.

வரிசையாக நிறுத்தி வைக்கபட்டு இருந்த இரு சக்கர வண்டிகளில் தன் அண்ணண் வண்டி நிறுத்திய இடத்தை நோக்கி நடந்தாள் சிந்து..

வரிசையாக விடப்பட்டிருந்த வண்டிகள் அனைத்தையும் கடந்து, கடைசி வண்டி முன் சென்று நின்று," போலாமா அண்ணா" என்றாள் சிந்து.

வண்டியின் மீது இருந்த வாலிபன் திரும்பி பார்த்து, " போலாம டா" என்றான்...

அவன் மஹியை தான் என்று நீங்கள் அனைவரும் யூகித்திருப்பீர்கள்.

ஆம் மஹி்யின் சித்தப்பா மகள் சிந்து.

ஆனால் சிந்துவை தன் மகளாகவே வளர்த்தாள் மஹியின் அன்னை திலகா,மஹியும் தன் உடன்பிறந்த தங்கையாகவே சிந்துவை நினைத்தான்.

தான் படிக்கும் கல்லூரியிலேயே சிந்துவையும் சேர்த்தான் மஹி.

தினமும் தன்னுடன் அவளையும் கல்லூரிக்கு அழைத்து செல்வான்.

கல்லூரி முடிந்த பின் இருவரும் , பேசிக்கொண்டே மஹியின் இரு சக்கர வாகனத்தில் வருவது இவர்களின் வழக்கம்.

அன்றும் அது போலவே வண்டியில் ஏரிய சிந்து பேச துவங்கினாள்.. "அண்ணா இன்னைக்கு ரொம்ப ஜாலியா இருந்ததுல, எனக்கு நேரம் போனதே தெரியல, நீங்க உங்களை அறிமுகப்படுத்தி கொண்ட விதம் சூப்பர், யூ ஆர் க்யூட் அண்ணா" என்றாள்.

"யூ ட்டூ மா.... ரொம்ப தைரியமா இன்ட்ரோ கொடுத்த" என்றான் மஹி.

"அண்ணா இன்னைக்கு என் தோழி கயலை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம்னு நினைச்சேன். ஆனா நேரம் இல்லாததினால் அவளை அழைக்க முடியல" என்று சிந்து கூறி முடிப்பதற்குள் மஹியின் நினைவு கயலை நெருங்கியது.

வீட்டிற்கும் வந்தடைந்தனர்.

அவளின் முகம் மஹியின் மனதினை பாடாய் படுத்தியது.

"தன்னை ஒருவாரு சமாளித்து கொண்டு, நான் ப்ரஸ் ஆய்ட்டு வரேன்டா , கார்டன் போகலாம்"என்று கூறிக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்தான் மஹி.

"கயலும் சிந்துவும் ப்ரண்ட்ஸா? பார்க்க மிக லட்சனமாக இருக்கிறாள் கயல்.

"கிராமத்து பெண்ணு, ஆனால் நல்லா தைரியமா பேசினா ஸ்டேஜில, அவள் சிந்துவிற்கு நல்ல துணையாக இருப்பாள் " என எண்ணினான் மஹி.

தன் அறை கதவை சிந்து தட்டிக்கொண்டிருக்கிறாள் என்பதை தாமதமாய உணர்ந்த மஹி ... வேகமாக எழுந்து கதவை திறந்தான்.

"அண்ணா போலாமா?? " என்ற குரலோடு மஹியின் அறைக்குள் நுழைந்தாள் சிந்து.

"போகலாம் டா வா" என்று எழுந்தான் மஹி.

இருவரும் அவர்களின் வீட்டிற்கு முன் இருக்கும் கார்டன் நோக்கி நடந்தனர்.


நிழல்(completed)Where stories live. Discover now