நிழல் 14

3K 134 25
                                    

காதலுக்கு கண் இல்லை என்பார்கள்..
காதும் இல்லை என நிரூபித்தாள் சிந்து.

ஆர்யாவை பற்றின அனைத்து விவரங்களையும் சிந்துவிற்கு தெரியபடுத்தின கயலுக்கு கிடைத்த பரிசு ஏமாற்றம் மட்டுமே.

கயல் வார்த்தைகளை எள் அளவும் தன் மனதிற்குள் சிந்து ஏற்றிக்கொள்ளவில்லை.

ஆர்யாவை பார்த்து கயல் பேசின அன்றே , ஆர்யா அனைத்தையும் சிந்துவிடம் தெரியப்படுத்திவிட்டான்.

கயலுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் உன் மேல், நீ கவலைப்படாதே ஆர்யா ... அந்த ரம்யாவே வந்து என்னிடம் ஏதேனும் கூறினாலும் நான் நம்பமாட்டேன் என ஆர்யாவிடம் உறுதியலித்த சிந்துவிடம் கயலின் பேச்சு செல்லாக் காசானது.

"கயல், நீ என்னோட தோழி மட்டும் இல்லை, நல்ல வெல் விஸ்சர்... உனக்கு ஆர்யா மேல ஏற்பட்டிருக்க சந்தேகத்திற்கு காரணம் ஏன்னென தெரியல, யார் உங்கிட்ட இப்படி தப்பா சொன்னதுனு தெரியல , ஆர்யா நல்லவன் , தயவுசெய்து மஹிகிட்ட ஆர்யாவ பத்தி இப்படி சொல்லாத" என்ற சிந்துவின் முகத்தை அதிர்ச்சியில் பார்த்தாள் கயல்.

மஹி அடிக்கடி தொலைப்பேசியில் பேசுவது கயலிடம் தான் என மிகச்சரியாக யூகித்திருந்தாள் சிந்து.

பேச வார்தைகள் இல்லாததால் மவுனம் ஊஞ்சலாடியது, அது கயலின் மனதினை கொன்றது, இதற்கு மேலும் இவள் முன் நிற்க விருப்பமில்லை என தன் மனம் கூறிய வார்த்தைகளைக் கேட்டு கயல் சிந்துவை விட்டு முன்னோக்கி நடந்தாள்.

ஒரு பாதி கதவு நீயடி.... என கயலின் கைப்பேசி சினுங்க மறுமுனையில் மஹி.

" கயல், சிந்துகிட்ட பேசியாச்சா?? "

சில இடங்களில் பேசினால் சிறப்பு,
சில இடங்களில் பேசாமல் இருந்தால் சிறப்பு, இதில் தான் எதனை இப்போது தேர்வு செய்வது என புரியாமல் தவித்தாள் கயல்.

பின் நேரில் சந்தித்து பேசிவிடலாம் என எண்ணிய கயல், மாலை கல்லூரி முன் உள்ள பிள்ளையார் கோயிலில் பேசலாம் என கூறி அழைப்பை துண்டித்தாள்.

மஹியின் மனதில் கடந்த கால எண்ணங்கள் தென்றலாய் வீசியது.
தன்னை முதன்முதலில் கயல் சந்தித்து பேசிய இடமாயிற்றே அந்த கோயில், இன்று அங்கே மீண்டும் சந்திக்க போகிறோம்.

கயவர்கள் திருட முடியாத இருட்டரையில் பத்திரமாக பூட்டி வைத்திருக்கும் தன் காதலை இன்று கயலிம் ஒப்படைக்க வேண்டியததுதான் என மனகணக்கிட்டான் மஹி.

தன் தோழனான செல்வாவிடம் இதை தெரிவிக்க சென்றான்.

வகுப்பின் கடைசி பென்ஜ்யில் செல்வா , தயங்கி தயங்கி மொபைலில் பேசிக்கொண்டிருந்தான், மஹி அருகில் சென்றதும் வேகமாக அழத்துவங்கினான்.

"என்னாச்சிடா ? ஏன் அழற" என்றான் மஹி.

" அப்பா... அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் டா , அட்மிட் பண்ணிருக்காங்கலாம் , நாளைக்கே ஒரு ஆபிரேசன் பண்ணணுமாம் , 1 லட்சம் கட்ட சொல்றாங்க டா " என்று அழுதுக்கொண்டே கூறிய செல்வாவிடம் "பணம் ஏற்பாடு பண்ணிடலாம் , நான் வீட்டில போயிட்டு வாங்கிட்டு கோயம்பேடு வந்துடரேன் , நீ சார்கிட்ட(HOD) லீவ் சொல்லிட்டு வா" என்றான்.

மின்னல் வேகத்தில் வீட்டை அடைந்த மஹி, பணத்தை வாக்கிக்கொண்டு பேருந்து நிலையம் அடைந்தான்.

செல்வாவின் மனவருத்தத்தை உணர்ந்த மஹி அவனை தனியே அனுப்ப தயங்கி, தானும் அவனுடனே பேருந்தில் ஏறினான் கயலிடம் கூறியதை மறந்தவனாய்.

மாலை, கயல் பூங்காவில் மஹிக்காக காத்திருக்க.....

தொடரும்...

நிழல்(completed)Where stories live. Discover now