நிழல் 21

2.8K 138 28
                                    

ஞாயிறு காலை வேலை,

தன் வீட்டுத் தோட்டத்தில் செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் மஹி.
தேவையில்லாமல் கயலை குழப்பத்தில் தள்ளி விட்டுவிட்டோம். அவளிடம் இருந்து மெசேஜ்,போன் கால் எதுவும் இல்லை. என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தான் மஹி.

காபி கப்புடன் மஹியை நோக்கி வந்தாள் மஹியின் அன்னை திலகா.

ஆழ்ந்த யோசனையில் இருந்த மஹி, செடிகளுக்கு தேவைக்கு அதிகமான தண்ணீர் பாய்ச்ச அவை வீணாக வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.

"டேய் கண்ணா, என்ன செய்ர, தண்ணீர் வீணாக போகுது பாரு" என குரல் கொடுத்தாள் திலகா.

தன்நிலை உணர்ந்த மஹி, "சாரி மா கவனிக்க மறந்துட்டேன்" என்றான்.

இருவரும் தோட்டத்தில் இருந்த பென்ஜ் மீது அமர்ந்தனர்.

கண்ணளில் தண்ணீர் தேங்க தன் தாய் மடிமீது சாய்ந்தான் மஹி.

அவனிடம் என்ன நடந்தது என விசாரிக்க துவங்கினாள் திலகா.

கயல் தன்னிடம் கேட்ட கேள்வி, அதற்கு இவன் அளித்த பதில் என அனைத்தையும் தன் அண்ணையிடம் பகிர்ந்தான் மஹி.

"நாம, எப்போதும் கெட்டது செய்ததில்லை, சீக்கிரம் ரம்யா விசயத்தை கயலுக்கு புரியவை, நிலைமையை எடுத்து சொல்லு, எல்லாம் சரி ஆகிடும்" என சமாதானம் கூறிவிட்டு கிளம்பினாள் திலகா.

கையில் இருந்த தொலைபேசி அலரியது, எடுத்து பார்த்தான், அழைப்பது சிந்து.

"ஹலோ... அண்ணா, ரூம்லயா இருக்க" என கேட்டாள்.

"இல்லை, தோட்டத்தில் இருக்கேன்" என்றான் மஹி.

"அங்கேயே இருங்க, நான் வரேன்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள் சிந்து.

அடுத்த 5 நிமிடத்தில் தோட்டத்தை அடைந்தவள் மஹியை தேடினாள்.

சிந்துவை பார்த்து மஹி கை அசைக்க, அவனை நோக்கி நடந்தாள்.

என்ன சிந்து காலையில் என்னை பார்க்க வந்திருக்க என மஹி கேட்க, அண்ணா எனக்கு உங்க உதவி வேண்டும் என்றாள் சிந்து.

"என்னமா, சொல்லு" என்றான் மஹி.

"அம்மா வந்து ஒரு போட்டோ கொடுத்து, இது அப்பா உனக்கு பாத்திருக்க மாப்பிள்ளை, நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்கனு சொல்லிட்டு போயிட்டாங்க, உனக்கு நல்லா தெரியும் நானும் ஆர்யாவும் விரும்புகின்றோம், நீங்க தான் எப்படியாது பேசி அம்மாகிட்ட இந்த மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லனும்" என்றாள்.

இந்த சம்பந்தத்தை பேசி நிருத்த உதவுகிரேன், ஆனால் ஆர்யாவிற்காக வீட்டில் பேச மாட்டேன் என மிக கண்டிப்பாக கூறிவிட்டு சென்றான் மஹி.

வீட்டிற்குள் சென்ற மஹி, சித்தி... என குரல் கொடுத்தான்.

இங்க இருக்கேன் மஹி... என கிட்சனில் இருந்து சப்தம் வர அங்கே சென்றான்.

"எதோ மாப்பிள்ளை பார்த்திருக்கிரதா சிந்து சொன்னா, எங்க நான் போட்டோ பார்க்கனும் " என்றான் மஹி.

ரூம்ல இருக்கு மஹி, வா என்று மஹியை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றாள் சிந்துவின் அன்னை.

"சித்தி , கொஞ்சம் பொறுமையா இருங்க, இப்போ சிந்துக்கு கல்யாண பேச்சி எடுக்காதிங்க, அடுத்த வருடம் பாக்கலாம்" என்றான் மஹி.

"இது நான் பார்த்த வரம் இல்ல கண்ணா.. உங்க அப்பாவும் சித்தப்பாவும் செய்யர வேலை" என்றவளை அவர்களை சமாளிப்பது உங்கள் வேலை என கூறிவிட்டு கிளம்பினான் மஹி.

நிழல்(completed)Where stories live. Discover now