நிழல் 10

3.2K 141 36
                                    

கண்களில் அனலும் ,
வார்த்தைகளில் மென்மையும்,
ஒரே நேரத்தில் வெளிப்படுத்துவது மிக கடினம், கயல் இதனை சாமர்த்தியமாக செய்தாள்.

மலை போன்ற வீரர்கள், கடவுளின் கருணை அனைத்தையும் கொண்ட பாண்டவர்களை , தன் நண்பனுக்காக எதிர்தான் கர்ணண், அதே போல

எதிரே நிற்பது சீறும் சிங்கம் என தெரிந்தும் , தன் நட்பிற்காக எதிர்க்க துணிந்தாள் கர்ணண் வம்சத்து மங்கை கயல்.

"ஆர்யா, உன்கிட்ட ஒரு 5 நிமிசம் தனியா பேசனும் " - கயல்.

"பேசலாம் கயல், இங்கயே பேசலாமா? இல்ல பக்கத்துல இருக்க பார்க் போலாமா?" என்று கேட்ட ஆர்யாவிடம் பார்க்கே போகலாம் சீக்கிரம் கிளம்பு என்றாள் கயல்.

ஐம்பதடி தூரத்தில் இருக்கும் பூங்கா கயலுக்கு ஐம்பதாயிரம் அடிகள் போல் சலிப்பை ஏற்படுத்தியது.

வெறுப்பவர்களுடன் நடந்து செல்வது கொடுமையிலும் கொடுமை என்பதை உணர்ந்தாள் கயல்.

ஒருவாராக இருவரும் பூங்காவை வந்தடைந்தனர்.

காதலினை சுற்றி சுற்றி வரும் காதலன் போல அங்காங்கே இருக்கும் பூக்களை வண்டுகள் சுற்றிக்கொண்டிருந்தன.

தன் தங்கையின் எடை குறைவு, அவள் கீழும் மேலும் ஏறி இறங்கி விளையாட வேண்டும் என ஒரு சிறுவன் சீசா வில் எழுந்தும் அமர்ந்தும் விளையாட்டை சிறப்பாக்கினான் .

இவை யாவையும் கயலின் மனதை பரிக்கவில்லை , தன் மன எண்ணத்தில் மூழ்கி இருந்த கயலிடம் "என்ன கயல் ஏதே பேசனும் சொன்னீங்க ? " என்றான் ஆர்யா.

"ஆர்யா , நான் கேட்கும் கேள்விக்கு உண்மைய மட்டும் சொல்லனும் என்னை நீ உண்மையான தோழியா நினைத்தால்" என கயல் தன் பேச்சை துவங்கினாள் கயல்.

"என்ன கயல் இப்படி கேட்கனுமா ? நான் எப்பவும் உண்மையை மட்டும் தான் பேசுவேன், கேளுங்க " என்றான் ஆர்யா.

"ரம்யாக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?" என கேட்ட கயலை கண் இமைக்காமல் பார்த்தான் ஆர்யா.

பதில் சொல் என்றாள் கயல்.

"ரம்யா , நம்ம கிளாஸ்மேட் , நல்ல ப்ரண்ட் " என்ற ஆர்யாவின் பதிலை கேட்ட கயல் கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.

" ஐ நோ எவ்ரித்திங் ஆர்யா, டோன்ட் டிரை டு சீட் அஸ் " என பேசித்தீர்த்தாள்.

" என்ன தெரியும் கயல்? எனக்கு புரியல? தெளிவா பேசு " என்ற ஆர்யாவின் வார்த்தைகள் மேலும் கயலின் கோபத்தை தூண்டியது.

"உண்மையிலேயே ரம்யா என்னோட ப்ரண்ட் மட்டும் தான் , நீ அவளையே கேளு " என்ற ஆர்யாவின் முகத்தை பார்க்க கூட விரும்பாத கயல் வேகவேகமாக பூங்காவை விட்டு வெளியேறி தன் விடுதி நோக்கி நடக்க துவங்கினாள்.

தன் அறைக்குள் நுழைந்த கயல் , ரம்யாவின் கட்டிலுக்கு சென்றாள்.

"ஹாய் கயல், எங்க போயிட்ட நீ , நான் உன்ன காலேஜ் ல தேடிப்பாத்துட்டு வந்துட்டேன்" என்றாள் ரம்யா.

சற்று வெளியே வேலை இருந்தது முடித்துவிட்டு வர தாமதமானது என தன் காரணத்தை கூறிவிட்டு ரம்யாவையே பார்த்துக்கொண்டிருந்தாள் கயல்.

"என்ன கயல், எதாவது பேசனுமா ? ஏன் அப்படி பார்க்கிறாய்?" என்ற ரம்யாவிடம், ஆர்யாவை பத்தி சொல்லு ரம்யா " என்றாள் கயல்.

ஐம்பது கிலோ அரிசி மூட்டையை தூக்குவது போல பேசவே மிக சிரமப்பட்டாள் ரம்யா.

நிழல்(completed)Where stories live. Discover now