💜04💜

2.6K 126 7
                                    

தருண் மற்றும் தாராவின் தந்தை ரகுராமும், அர்ஜுனின் தந்தை ராஜ்குமாரும் கடந்த 30 வருடங்களாக நெருங்கிய நண்பர்கள். இவர்கள் பரம்பரை பணக்காரர்கள் அல்ல. இந்த உயர்ந்த அந்தஸ்தை அடைய இருவரும்     அயராது பாடுபட்டு இந்த நிலையை அடைந்தவர்கள். இவர்களை போலவே இவர்கள் பெற்றெடுத்த செல்வங்களும், தந்தையின் உழைப்பில் வாழாமல்... சொந்த முயற்சியில் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

ராஜ்குமார், மைதிலி மற்றும் ரகுராம் வட்டமாக இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சரோஜா அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

"அண்ணா எப்போ உங்க வீட்டில கல்யாண சாப்பாடு போடுவீங்க? " என்று ரகுராமை பார்த்து கேட்டாள் மைதிலி.

"எங்க மா... இந்த தாரா கல்யாணத்துக்கு சம்மதிக்கவே மாட்டேங்கிறா. தாரா திருமணம் செய்த பிறகுதான் திருமணம் செய்வேன் என்று தருண் பிடிவாதம் பிடிக்கிறான்."

"இங்க அர்ஜுனும் அதே மாதிரி கல்யாணம் வேணாம்னு அடம்பிடித்துட்டுதான் இருக்கான்." என்றார் ராஜ்குமார்.

"அர்ஜுன் ஏதோ ஒரு பொண்ண காதலிச்சிட்டு இருக்கான்னு சொன்னீங்களே. அந்த விஷயம் என்ன ஆச்சு?"

"அது ஒரு வருஷத்துக்கு முன்னாடியே பிரேக்கப் ஆகிடுச்சு டா. அந்தப் பொண்ணு வேற ஏதோ பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா'னு இவன் சொல்லி பொலம்பிட்டு இருந்தான்." -ராஜ்குமார்

"நாங்க அர்ஜுனை அவன் இஷ்டத்துக்குதான் விட்டோம். அவனுக்கு எந்த பொண்ணு பிடிக்குதோ கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்று கூறினோம். ஆனால் அவன் எதுக்குமே ஒத்து வர மாட்டேங்குறான்." -மைதிலி

"இங்க தாராவும் அதையேதான் பண்ணிட்டு இருக்கா மா. அவ யாரையாச்சும் காதலிச்சாக்கூட நான் சேர்த்து வைக்கிறேன் என்று தான் சொல்லி இருக்கேன்."

"நமக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுது. சீக்கிரம் சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ணி வெச்சு, பேரன் பேத்தியை பாக்கணும்னு எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. ஆனா அதெல்லாம் நடக்குமா என்று தான் தெரியல." என்று கண் கலங்கினார் மைதிலி.

"மத்த பெற்றோர்கள் மாதிரி நாம இவங்கள கண்டித்து வளர்க்காமல், ரொம்ப செல்லம் கொடுத்து விட்டுட்டோம். அதான் இவங்க இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாங்க." -ராஜ்குமார்.

"தாராவுக்கு இன்னும் ஆறு மாசத்துல 27 வயது ஆகப்போது. இனிமேலும் தாமதிக்க முடியாதுன்னு அவகிட்டயே நான் சொல்லிட்டேன். அவ என்ன அடம் பிடித்தாலும் நான் விடப் போறது இல்ல. நிச்சயம் அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து கட்டி வைக்கத்தான் போறேன்."

"அண்ணா, நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டா நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களே? " -மைதிலி.

"சொல்லு மா."

"நாம ஏன் தாராவிற்கும் அர்ஜுனிற்கும் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது? "

"என்னம்மா இப்படி கேட்டுட்ட? எனக்கு ரொம்ப சந்தோஷம் மா. ஆனா, தாராவும் அர்ஜுனும் ஏதோ காரணத்தினால் கொஞ்சம் வருஷமா பேசிக் கொள்வதே இல்லை... அவங்க இதுக்கு ஒத்து வருவாங்களா? "

"என்ன இருந்தாலும் அர்ஜுனும் தாராவும் சிறுவயதில் ஒன்னுக்குள்ள ஒன்னா பழகிய நண்பர்கள். கல்யாணம் செய்து வைத்தால் அவங்களே காலப்போக்குல பேசி பிரச்சனை எல்லாத்தையும் சரி செய்து விடுவார்கள். அர்ஜுனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு." -ராஜ்குமார்.

"அண்ணா, தாரா கிட்ட நான் பேசி பார்க்கவா? தாராவுக்கு என்ன ரொம்ப புடிக்கும். அவ நான் கேட்டா மாட்டேன்'னு சொல்ல மாட்டா'னு நம்பிக்கை இருக்கு." என்றாள் மைதிலி.

"கண்டிப்பா மா... But அவ இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியல. So, நான் அவ கிட்ட முதலில் விஷயத்தை பேசி பார்த்துட்டு உன்ன பேச வைக்கிறேன். சரியா?..."

"டேய்... நீ பொறுமையா தாரா கிட்ட பேசிட்டு, முடிவை அடுத்த வாரம் சொல்லுடா." -ராஜ்குமார்.

மாலை நேரம் ஆனதால், மண்டபத்தை விட்டு ஒவ்வொருவராக கிளம்பினார்கள். இவர்களும் சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் வீட்டிற்கு கிளம்பி சென்றனர்.


_

_______________________________

(தொடரும்...💜)

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now