💙43💙

2.1K 109 16
                                    

அதைக் கேட்டு முகம் சிவந்த பிரியா... "நானும்." என்று கூறி அங்கிருந்து எழ, பிரியா கைகளைப் பற்றினான் தருண்.

"உங்க வீட்ல எப்போ வந்து பேசட்டும்?" என்று தருண் கேட்க...

"நாளைக்கே வந்து பேசுங்க." என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றாள் பிரியா.

இதை அங்கிருந்த மற்ற நபர்கள் கவனிக்காமல் இல்ல... அனைவரும் ஒன்றாக சேர்ந்து "ஹோ!" என்று அலறினார்கள்.

இதிலே பதறிய தருண், தானும் வெட்கப் பட்டு அங்கிருந்து எழுத்துச் சென்றான்.

அடுத்த நாள்...

இவர்களின் காதல் விஷயத்தை தன் தந்தையிடம் தருண் கூற... மிகுந்த ஆனந்தம் அடைந்தார் அவர்.

பிறகு... பிரியா வீட்டிற்குச் சென்று, கல்யாணத்தைப் பற்றி தருண் அப்பா ரகு பேச... பிரியா குடும்பமும் முழு சம்மதம் தெரிவித்தது.

தருண் மற்றும் பிரியா திருமணம் பெரியோர்களின் சம்மதத்துடன் இரண்டு மாதங்களுக்குப் பின் முடிவு செய்யப் பட்டது.

_____________________________

ஒரு வாரத்திற்கு பிறகு... ஞாயிற்றுக் கிழமை அன்று...

பெங்களூர் செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவன் அருகே நின்று அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தாரா.

"என்ன டி. இப்படிப் பார்துட்டு நிக்கிற? உன்னோட பொருட்கள் எதையும் தூக்கிட்டு ஒடிட மாட்டேன். கொஞ்சம் சிரி." என்றான் அர்ஜுன் நக்கலாக...

"அய்ய! நீ பண்ணலாம் பண்ணுவ. அதான் பார்த்துட்டு இருக்கேன்." என்று அவனை முறைத்தாள் தாரா.

"இப்படி உன் கூட இருக்கவனையே சந்தேகப் படு. விளங்கிடும்." என்ற அர்ஜுன்...
"சரி, எல்லாம் எடுத்தாச்சு. எதையும் மிஸ் பண்ணல. இப்போக் கிளம்ப நான் தயார்." என்று தனக்குத் தானே உறுதி செய்தவன், தன் பேக்கைத் தூக்கி கொண்டு "வா தாரா, கீழப் போகலாம்." என்று அழைக்க....

"நான் எதுக்கு வரணும். என்கிட்ட கேட்டா நீங்க எல்லா முடிவையும் எடுக்கறீங்க?" என்று கைகளைக் கட்டி நின்றாள்.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now