💙55💙

3.5K 136 70
                                    

"மாமா, எனக்கு மாங்கா சாப்பிடணும் போல இருக்கு டா. வாங்கிக் குடு." என்று தாரா சிணுங்க...

"போடி லூசு. எப்போப் பார்த்தாலும் எதாவது சாப்பிடக் கேட்டுட்டு இரு டி நீ. அதில்லாம இப்போ மாங்கா சீஸனும் இல்ல. தீனி பண்டாரம். சாப்பிட்டு, சாப்பிட்டு யானை மாதிரி ஆகப் போற நீ." என்று அவளை தலையில் கொட்டினான் அர்ஜுன்.

"இந்த மனுஷனக் கட்டிக்கிட்டு நான் இன்னும் என்னக் கஷ்டம் எல்லாம் படப் போறேன் தெரியல." என்று தலையில் அடித்துக் கொண்டு தாரா எழுந்து நிற்க...

தானும் எழுந்த அர்ஜுன், அவள் முகத்தை கைகளால் ஏந்தி... அவளின் கண்களை கூர்ந்துப் பார்த்தான்.

"ஓய் தாரா மாங்கா, என்னடி ஆச்சு?" என்று தன் மூக்கைக் கொண்டு அவளின் மூக்கை உரச...

"நீ தான் சரியான மாங்கா டா. எல்லா விஷயத்தலும் நல்லா விவரமா தான இருக்க? ஆனா, சில சமயம் நீ செய்யறதப் பார்த்தாலே... உன்னைத் தூக்கி போட்டு மிதிக்கணும் போல இருக்குது." என்று தாரா கைகளை முறுக்கிப் பேச...

"ஓய்! பேபி, எதுக்கு இவ்வளவு டென்ஷன்?" என்று தாரா தலையை வருடிக் கொடுத்த அர்ஜுனை, மீண்டும் நன்றாக முறைத்தாள் அவள்.

அதைக் கண்டுப் புன்னகைத்த அர்ஜுன், தாராவின் இதழில் முத்த மழைப் பொழிந்தான்.

அர்ஜுன் இதழ்களில் இருந்து தன் இதழை விடுவித்த தாரா, அவனைப் பிடித்துத் தள்ள...

தாராவை இறுக்கமாக கட்டிக் கொண்ட அர்ஜுன்... "தாங்க்ஸ் டி. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?" என்று அவளின் நெற்றியில் முத்தம் வைத்தான்.

"எதுக்கு தாங்க்ஸ் சொல்லற? நான் என்ன சொல்ல வந்தேன்'னு உனக்கு முதல்'லப் புரிஞ்சுதா?" என்று தன் இடுப்பில் கைவைத்து தாரா கேட்க...

"எனக்கு புரொமோஷன் கிடைச்சிடுச்சு. அதைத்தான சொல்ல வந்த?" என்று குதர்க்கமாகப் பேசினான் அர்ஜுன்.

"போடா லூசு. உனக்கு இன்னும் புரியலயா டா?" என்று தாரா தன் தலையில் அடித்துக் கொள்ள...

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now