💜22💜

2.4K 115 26
                                    

(இந்த அத்தியாயத்தை முழுமையாக மாற்றியமைத்து எழுதியுள்ளேன்.)

    

"இந்த மாசம் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி, நாள் ரொம்ப நல்லா இருக்கு. அன்னைக்கே நம்ம நிச்சயதார்த்தம் வெச்சுக்கலாம். அப்பறம் கல்யாணத்தை அடுத்த மாதம் செப்டம்பர் பதினாறு முடிவுப்பண்ணிக்கலாம்." என்றார் ரகுராம்.

"ஓகே டா. நிச்சயத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்குது. அதுக்குள்ள உப்பு ஜெளலி வாங்கனும். நாளைல இருந்தே எல்லாரும் ஷாப்பிங் போகலாம். தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி முடிக்க இந்த ஒரு வாரம் சரியா இருக்கும். அர்ஜுன்கூட இப்போ ஃப்ரீயா தான் வீட்டுல இருக்கான்." என்று தன் கருத்தை தெரிவித்தார் ராஜ்குமார்.

"ஓகே டா." என்ற ரகு, தாராவிடம் திரும்பி...  "தாராமா உனக்கு இந்த ஒரு வாரம் லீவ் கிடைக்குமா?" என்று கேட்க...

"அது வந்து..." என்று தயங்கியவள்... "ஹாஸிப்டல்'ல ஃபோன் பண்ணி ஹெட் டாக்டர்கிட்ட லீவ் சொல்லணும். என்னால ஒரு ரெண்டு, மூணு நாள்தான் லீவுப்போட முடியும். அதுக்கு மேல கஷ்டம் ப்பா." என்றாள் தாரா, தரையை பார்த்துக்கொண்டே.

"தாரா டார்லிங், நான் வேனா உங்க ஹாஸ்பிடல்'ல பேசி ஒரு வாரம் லீவ் வாங்கித்தரவா? என்று அர்ஜூன் கூற... அவனை அனைவரும் ஆச்சரியமாக திரும்பிப்பார்த்தனர்.

"பார்ரா, இப்போவே வருங்கால மனைவி மேல அவ்வளவு அக்கறையா...?" என்று மைதிலி சிரிக்க...

"போங்க அம்மா..." என்று கால்களால் தரையில் கோலம் போட்டான் அர்ஜூன்.

தாராவிற்கோ அர்ஜுனை தூக்கிப்போட்டு மிதிக்க வேண்டும் போல இருந்தது... 'இந்த அர்ஜுன்னுக்கு லூசு புடிச்சிருச்சா? போன மாசம் வரைக்கும் பெரிய பிஸ்தா மாதிரி பேசிட்டு இருந்தான். இப்போ இப்படி சினுங்கறான். சாம்திங் ராங்க்.' என்று புரியாமல் பார்த்தாள் தாரா.

அர்ஜுனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தருண், அவனின் கைகளைப்பிடித்து வீட்டின் வெளியே இழுத்துச்சென்றான்...

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now