💙37💙

2.1K 106 19
                                    

அடுத்தநாள் காலை...

குடும்பம் மொத்தமும் கிளம்பி, கோவிலுக்குச் சென்றது.

தாரா, அர்ஜுனுடன் நடந்துக் கொண்டிருக்க...

பிரியா, தருணுடன் நடந்துக் கொண்டிருந்தாள்.

அனைவரும் கடவுள் இருக்கும் பிரகாரத்தினுள் நுழைந்தனர்.

கடவுளுக்கு தீபாராதனை காட்டிக்கொண்டிருக்கும் போது. கைக்கட்டி எங்கோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவன் தோள்களை இடித்த தாரா.
"கைக் கட்டி நிக்காத டா." என்று மெல்லமாக அவனிடம் சைகையில் கூற... தன் கையை கீழே இறக்கினான்.

பிறகு பூசாரி அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார். அதை கையில் வாங்கிய அர்ஜுன்... நேராக மைதிலியிடம் சென்று, அவளின் கைகளில் கொடுத்தான்.

பிறகு, அனைவரும் பிரகாரத்தின் உள்ளிருந்து வெளியே வந்தனர்.

அங்கிருந்து வேகமாக நடையைக் கட்டிய அர்ஜுனின் தோள்களைப் பிடித்து நிறுத்திய தாரா...
"என்ன அர்ஜுன், உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லேனா எனக்குத் தெரியும். அதுக்காக, இப்படியா அங்க கைக் கட்டி நிப்ப?"
என்று தன் ஃபோனை எடுத்து, அதில் தன் முகத்தைப் பார்த்தவாறு நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டே அர்ஜுனிடம் பேசினாள்.

அர்ஜுன் இவள் கேட்டதை கண்டுக்கொள்ளாமல் எங்கோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் தோள்களை உலுக்கியவள்.. "ஆமா, உனக்கு ஏன் கடவுள் நம்பிக்கை இல்லை?" என்று தன் சந்தேகத்தை கேட்க...

"ஹான்!" என்று இவளிடம் திரும்பியவன்... "நம்பிக்கை இல்லேன்னு சொல்ல முடியாது. அப்பறம், என்ன காரணம் எனக்கு தெரியல டி. விடு." என்றான்.

அப்பொழுது தான் அர்ஜுனின் நெற்றி வெறுமையாக இருந்ததை கவனித்தாள் தாரா. அவனுக்கு திருநீர் வைத்து விடலாம் என்று அவள் எண்ணிக்கொண்டு இருக்கும்போதே...

"அஜு மாமா, கொஞ்சம் கீழ குனிந்து நில்லு"... என்று இவர்களிடத்தில் ஓடி வந்தாள் ஐஸ்யங்கா.

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now