💜20💜

2.3K 110 50
                                    

வீட்டுக்கு வந்த அனைவரையும் வரவேற்றனர் ரகுராமும், தருணும்.

அர்ஜுனோ, தனக்கும் இதுக்கும் சம்மதம் இல்லை என்பது போல அனைவருக்கும் பின்னால் பொறுமையாக வந்தான்.

அனைவரும் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

"தரு, சீக்கிரம் தாராவை வரச்சொல்லு." என்று ரகு கூற...

"சரி ப்பா..." என்றவன் நேராக தாராவின் அறைக்கதவை தட்டினான்.

"டேய் டூ மினிட்ஸ் டா." என்று உள்ளிருந்தப்படியே கத்தினாள் தாரா.

"டயலாக்க மாத்து டி. எப்போ பார்த்தாலும் இதே டயலாக் தான். உங்க ஆளு வீட்டுல இருந்து எல்லாரும் வந்தாச்சு."

"தயவு செஞ்சு அவன என் ஆளு'னு சொல்லாத." என்று பல்லைக்கடித்து சொன்னாள் தாரா.

"சரி உன் ஆளு இல்ல, உன் வாலு அர்ஜுன் வந்துருக்கான்.. வா மா தாரா."

"டேய் இருக்கற கடுப்புல நீ வேற ஏன்டா மொக்கப்போட்டு சாவடிக்கிற...?" என்று கதவைத்திறந்து வந்தாள்.

"தாயே, ஒரு வழியா ரெடி ஆகிட்ட போல... பிடிக்காத கல்யாணத்துக்கு இந்த மேக்கப் தேவையா?" என்றான் நக்கலாக.

"உனக்கு என்னதான்டா பிரச்சனை? இன்னொரு டைம் நீ வாயைத்திறந்தா, அப்பாக்கிட்ட பிரியா விஷயத்தை பத்தி சொல்லிடுவேன்."

"அச்சோ, நான் இன்னைக்கு மௌன விரதம்." என்று தன் வாயில் விரல் வைத்துக்கொண்டு கீழே ஓடினான்.

"அது! அந்த பயம்." என்று நீல நிறப்புடவையில் ஜொலித்த தாரா... மாடியில் இருந்து மெல்ல மெல்ல கீழே இறங்கி வந்தாள்.

தற்செயலாக அவளைப்பார்த்த அர்ஜூன்... 'பரவால்லயே நல்லாதான் இருக்கா. போனா போதுண்ணு இவளையே கல்யாணம் பண்ணிக்கலாம்.' என்று மனதில் என்னியவன். வாயைப்பிளந்து, அவள் படி இறங்கி வரும் அழகை தன்னையே அறியாமல் ரசித்தான்.

வந்த அனைவருக்கும் வணக்கம் சொன்ன தாரா, நேராக கிட்சன் சென்று... சரோஜா தயாராக போட்டு வைத்திருந்த டீயை எடுத்து வந்து அனைவருக்கும் பரிமாறினாள். கடைசியாக அர்ஜுனிடம் வந்தவள்...

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now