💙07💙

2.3K 109 10
                                    

இரவு உணவை முடித்துவிட்டு தருணும் தாராவும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது அங்கே வந்த ரகு, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு இவர்களின் எதிரே வந்து அமர்ந்தார்.

"பப்பு, நான் உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும். தருண், நீயும் கேளு ஆனால் நடுவுல எதுவும் பேசாத."

"சரி ப்பா..." -தருண்

"சொல்லுங்க ப்பா..." -தாரா

"நான் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. நேரா விஷயத்துக்கு வரேன்... உனக்கும், ராஜ்குமார் பையன் அர்ஜுனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நாங்க முடிவு பண்ணியிருக்கோம்."

"யாரைக் கேட்டு முடிவு பண்ணீங்க? " என்று தாரா கோபமாக கத்த...

"யாரை கேக்கணும்? நான் உன்னோட அப்பா. ஞாபகம் இருக்குல்ல தாரா? உனக்கு ஒரு வாரம் டைம் தரேன் ஒழுங்கா முடிவு பண்ணி சொல்லு..." வெடுக்கென்று எழுந்த தன் அறைக்கு சென்றுவிட்டார் ரகு.

தாரா கண்கள் கலங்கி அமர்ந்திருந்தாள். அவளை தருணும் சரோஜாவும் மாறிமாறி சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தனர். இரண்டு மணி நேரம் ஓடியது. ஆனால், தாரா இடத்தை விட்டு நகர்ந்தப்பாடில்லை.

"சரோஜா அம்மா நீங்க போய் தூங்குங்க. இவ்வளவு நேரம் முழிச்சி இருந்தா உங்களுக்கு உடம்பு ஒத்துக்காது. நீங்க டேப்லெட் வேர சாப்பிட்டு இருக்கீங்க. போய் தூங்குங்க." என்று அவர்களை உறங்க அனுப்பி வைத்தான் தருண்.

தாரா அவள் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

பொறுமையை இழந்த தருண் "பப்பு... இப்ப ஏன் ஃப்யூஸ் போன பல்பு மாதிரி மூஞ்சிய வெச்சிருக்க?"

"………………" மௌனம் காத்தால் தாரா.

"எனக்கே ஷாக்'ஆ தான் இருந்தது. அப்பா அர்ஜுனை சொல்லுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. "

" …………… "

"என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற. தயவு செஞ்சு உன் வாயை திறந்து சொல்லு... யாரையாவது லவ் பண்றியா? ஏதாவது லவ் ஃபெயிலியர் ஆ? "

"………………"

"இதுவரைக்கும் நீ என்கிட்ட மறைச்சதெல்லாம் போதும்... தயவுசெஞ்சு பேசு.  இப்ப மட்டும் நீ பேசலனா, இந்த ஜென்மத்துல என்க்கிட்ட பேசிராதே நீ... " தருணின் கண்கள் சிவந்திருந்தது.

இதற்கு மேலும் தன் அண்ணனை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்த தாரா... "தருண், நான் உன்கிட்ட இதுவரைக்கும் எதையுமே மறைத்ததில்லை... ஒரே ஒரு விஷயத்தை தவிர... "

"அதான் என்ன விஷயம்னு நான் கேட்கிறேன்..."

"அது... அது... வந்து..." என்ற தயங்கினாள்.

"தயங்காம சொல்லுடா..."

"நான் என்ன சொன்னாலும் நீ என்ன தப்பா நினைக்க கூடாது. ப்ராமிஸ் பண்ணு." இதை கூறும் போதே தாராவின் கண்கள் மேலும் கலங்கியது.

அவள் கண்களின் கண்ணீரை துடைத்து விட்ட தருண் "நீ என்ன சொன்னாலும் நான் உன்ன தப்பா நினைக்கவே மாட்டேன். நம்ம அம்மா போனதுக்கப்புறம், நீதான் எனக்கு இன்னொரு அம்மா மாதிரி இருந்து என்னை பார்த்துகிட்டே. நீ எனக்கு தங்கச்சி மட்டுமில்ல... எனக்கு இன்னொரு அம்மா... So, தைரியமா என்கிட்ட சொல்லு."

"நான் காலேஜ் பைனல் இயர் படிக்கிறப்ப ஒரு பையன லவ் பண்ணேன். ஆனா அவன் என் காதலை ஏற்கவில்லை."

" யார்டா அது? அந்தப் பையனை எனக்கு தெரியுமா? "

"ம்ம்ம்... தெரியும்."

"யாருன்னு சொல்லு... அந்தப்பையன் இப்ப எங்க இருக்கான்? என்ன பண்றான்...? உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு பேசி முடிச்சிடலாம்."

"அதற்கெல்லாம் அவசியம் இல்லை." என்று வெறுப்பாக சிரித்தாள் தாரா.

குழம்பிப்போன தருண் ... "ஏன் மா? நடந்தது எல்லாத்தையும்  தெளிவா சொல்லு எனக்கு ஒண்ணுமே புரியல..."

"5 வருஷத்துக்கு முன்னாடி... "


_

_______________________________

(தொடரும்...💜)

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now