ithuvum kathal thaan 212...mv..8

77 10 2
                                    

யின் கற்பனையில்...((16/04/21))மீண்டும் வருவேன்.....((இதுவும் காதல் தான்....212))((அமெரிக்காவில் வாழும் குண்ணகுடி கதிர்வேலன் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வு))ஆதி : ஹலோ.....ஈஸ்வரி : சொல்லு ஆதி.... ஹவ் ஆர் யூ ....ஆதி : எய்... நீ என்ன வேல பண்ணி வச்சிருக்க ....ஈஸ்வரி : நான் என்ன டா செஞ்சேன்...ஆதி : எய் என் தங்கச்சி கோதைக்கு நீதான் போன் பண்ணி மிரட்டுரியா...ஈஸ்வரி : என்ன டா பைத்தியம் மாதிரி பேசுற ....fashion show compétion ல அவளுக்கும் எனக்கும் ஒரு பிரச்சனை வந்தது உண்மைதான் அதற்காக அவள மிரட்டுற அளவுக்கு நான் ஒன்னும் கீழ்த்தனமான ஆளில்லை...ஆதி : நீ உண்மைய தானே சொல்ற...ஈஸ்வரி : ஆதி ...நான் நம்ம லவ் மேல ப்ராமிஸ் பண்ணி சொல்றேன் ...நான் அந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய மாட்டேன் ...சரி உனக்கு எதுக்கு என் மேல சந்தேகம் ....யார் யாரை மிரட்டுறாங்க....ஆதி : இல்ல என் சிஸ்டர் கோதைக்கு....நேத்து ஒரு போன் வந்து இருக்கு அதுல ஒருத்தவங்க அவளை பிளாக்மைல் பண்ற மாதிரி பேசி இருக்காங்க ..... இவளை ஏதோ வீடியோ எடுத்து வைத்து இருக்காங்களாம்....அவுங்க சொன்ன அட்ரஸ்க்கு இவளை வர சொல்லி இருக்காங்க...ஈஸ்வரி : யாருடா இந்த வேலையெல்லாம் செய்றது.. இவனுங்க பெண்களை எல்லாம் வளரவே விடமாட்டாங்க போல ..சரி அதான் உன் பெரியப்பா கதிர்வேலன் பெரிய dedictive ஆச்சே....அவர்கிட்ட சொன்னாலே அவர் மேட்டரை கண்டு பிடிப்பார் இல்ல....ஆதி : ம்....எல்லாம் கண்டுபிடிச்சுட்டாங்க... அந்த சிம் கார்டு வாங்கினவன் அட்ரஸ் ஈஸ்வரி என்டர்பிரைசஸ் என்ற உங்க அட்ரஸை தான் தந்து இருக்கான்....அதனால தான் நான் உனக்கு போன் பண்ணி கேட்டேன் ...ஈஸ்வரி : என்னடா குண்டைத் தூக்கிப் போடுற.... நான் அவ்ளோ worth எல்லாம் இல்லடா ....ஏதோஉன் தங்கச்சி competition ல first வந்துட்டா என்று கோவபட்டு தான் அவகிட்ட நான் பேசாம இருக்கேன்... மற்றபடி இந்த மாதிரி எல்லாம் நான் செய்ய மாட்டேன் டா....ஆதி : சரி ... நீ சொல்றத நான் நம்புறேன்.... ஆனா உன்னால எங்க குடும்பத்திற்கு ஏதாவது பிரச்சனை என்று நான் கேள்விப்படேன் வை....அந்த நிமிடமே நீ என் வாழ்க்கையில் இல்லை....ஈஸ்வரி : ஆதி நான் பிறந்ததில் இருந்தே தாய் தந்தை பாசம் இல்லாமல் ஹாஸ்டலில் வளர்ந்தேன்....என்னதான் எங்க அம்மா இந்த ஊருல பெரிய லாயராக இருந்தாலும் அவுங்க ஒரு நாள் கூட என் அண்ணன் குருவுக்கும் எனக்கும் பாசமான அம்மாவாக இருந்தது இல்லை....உங்க குடும்பத்தில் இருக்கும் சூர்யா,ரோஜா, கோதை,நீ இவுங்க எல்லாம் ஒற்றுமையாக இருப்பதை பார்த்தும்...உங்க குடும்பம் முழுதும் கூட்டு குடும்பமாக வாழ்வதை ரசிப்பவள் டா நான்....உன்னை கட்டிகிட்டா எனக்கும் பாசமான குடும்பம் கிடைக்கும் என்று தான் நான் உன்னை காதலிக்கவே ஆரம்பித்தேன்....என்னை போய் சந்தேக படுற...ஆதி : இல்ல டி...நான் உன்னை சந்தேக படல....just clear பண்ணிக்கிட்டேன்....ஈஸ்வரி : சரி ஈவ்னிங் ஜிம் ல மீட் பண்ணலாம்...ஆதி : இல்ல டி...எனக்கு அடுத்த வாரம் பாக்ஸிங் final round so என்னால அதுவரை வெளியே வர முடியாது....ஈஸ்வரி : சரி டா.... கோதைக்கு என்ன பிராப்ளம் என்று பாத்து clear பண்ணுங்க....ஐ love u டா....ஆதி : ம்....mee too...bye take care டி...(( என்று சொல்லி... சக்தி கவிதாவின் மகன் ஆதித்யா என்கிற ஆதி போனை வைக்க...... ஈஸ்வரி சொல்வதில் என்ன உண்மை இருக்கிறது.... அப்படியே அவள் உண்மையை சொல்லி இருந்தாலும்...இவளின் அட்ரஸில் அந்த சிம் கார்டை வாங்கியவரின் நோக்கம் என்ன.....என்பதை வரும் அத்தியாயங்களில் சொல்கிறேன்...))((மறுபக்கம்....பெங்களூரில்....dr.கதிருக்கு கத்திக்குத்து பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும்...முல்லைப்பூ தன் பிடிவாதத்தை விடுத்து....தன் உடன் பிறவா அண்ணன் சக்திமாறணுடன் மருத்துவ மனை செல்ல.....))((நந்தினியும், மாறனும் .... முல்லைபூவை அந்த அறையில் தனியே இருக்கும் படி செய்ய.......முல்லைப்பூ ....dr.கதிருக்கு தான் கத்திக்குத்து பட்டது என்று எண்ணியவல்....கதறி கதறி அழ.......அவளின் தோளின் மீது ஆறுதலாய் யாரோ கை வைப்பதை போல உணர்ந்த முல்லைப்பூ ...தலை தூக்கி பார்க்க...அவளின் கண் முன் நின்று இருந்தது....dr. கதிர்.....அவனை பார்த்ததும்....முல்லைப்பூ சந்தோஷத்துடன்....))முல்லைப்பூ : நீங்க..........உங்களுக்கு...........உங்களுக்கு ஒன்னும் ஆகளையே........Dr. கதிர் : ஏன் ஏதாவது ஆனால் தான் நீங்க வந்து என்னை பார்ப்பிங்களா.......முல்லைப்பூ : உங்களை யாரோ குத்திட்டாங்கன்னு சொன்னாங்க......Dr. கதிர் : ம்.... ஆமா.... நேற்று .....நான் என் உயிரின் உருவமாக நினைத்த என் தேவதை.....வார்த்தையால் என் மனசை குத்திட்டா.....ஆனா ஏன் தெரியல நான் இன்னும் சா.....க....என்று dr.கதிர் சொல்ல வருவதற்குள்.....அவனின் இதழ்களில் தன் இதழை தந்து அவன் வார்த்தையை இடைமறித்தவள்....முல்லைப்பூ : என்னை மன்னித்துடுங்க மச்சான்......நான் இனிமே அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்.....Dr.கதிர் : இல்ல முல்லைப்பூ....நான் உனக்கு வேணாம்....முல்லைப்பூ : அப்படியெல்லாம் சொல்லாதீங்க மச்சான்....நான் தான் லூசு மாதிரி உங்க மனசை காய படுத்திடேன்....என்னை மன்னித்துடுங்க மச்சான்....Dr.கதிர் : இல்ல.... இது சரி வராது.....நீ என்னை அழ வசிட்ட....நான் எதுக்குமே இப்படியெல்லாம் அழுதது இல்ல......இது சரி வராது.... உனக்கு என் மேல காதலும் இல்லை நம்பிக்கையும் இல்ல....முல்லைப்பூ : இல்ல மச்சான்...நான் உங்கள மட்டும் தான் காதலிக்கிறேன்....உங்களை நான் நம்புறேன்....Dr.கதிர் : இல்ல இல்ல....இப்போ அப்படி தான் சொல்லுவ...அப்புறம் எதையாவது சொல்லி என்னிடம் இருந்து நீ விலக தான் பார்ப்ப...முல்லைப்பூ : இல்ல இல்ல...இனிமே நீங்களே என்னை போ என்று சொன்னாலும் நான் உங்களை விட்டு போக மாட்டேன்.....என்னை நம்புங்க மச்சான்.....Dr.kathir : இப்ப அப்படி தான் சொல்லுவீங்க .....அப்புறம் நான் என்ன சொன்னாலும் நீங்க அதை கேக்க மாட்டிங்க...முல்லைப்பூ : இல்ல ..இனிமே நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்பேன்...Dr.கதிர் : உண்மையாவா....முல்லைப்பூ : ஆமா உண்மையா தான்.....Dr.கதிர் : உன்ன நம்பலாமா... நான் என்ன சொன்னாலும் எதிர் கேள்வி கேட்காமல் நான் சொல்வதை மட்டும் கேக்கணும்....முல்லைப்பூ : ம்...கேக்குறேன்...Dr.கதிர் : அப்போ.....என்கிட்ட வா....முல்லைப்பூ : உங்ககிட்ட தானே நிக்குறேன்.....Dr.கதிர் : இன்னும் கிட்ட வரணும்...முல்லைப்பூ : ம்.... வந்துடேன்...Dr. கதிர் : இல்ல இன்னும் கிட்ட.....முல்லைப்பூ : மச்சான் ....நான் இப்பவே உங்க கால் மேல என் கால் தொடும் படி தான் நிக்குறேன்....இன்னும் எப்படி கிட்ட வரருது....Dr.கதிர் : இப்பதான் நான் என்ன சொன்னாலும் கேபேன் சொல்லிட்டு ....உடனே கேள்வியெல்லாம் கேக்குற....முல்லைப்பூ : இது கேள்வி இல்ல.....இது சந்தேகம்....Dr.கதிர் : என்ன சந்தேகம்...முல்லைப்பூ : இதுக்கு மேல நான் எப்படி கிட்ட வரருதுண்ணு கேட்டேன்....Dr.கதிர் : அது....வந்து...எப்படினா......முல்லைப்பூ : மச்சான் எனக்கு கூசுது....ஐயோ விடுங்களேன்...Dr.கதிர் : எய் நான் என்ன செஞ்சேன்....முல்லைப்பூ : நீங்க .....நீங்க என் இடுப்பை .....என் இடுப்பில் உங்க கை....எனக்கு கூசுது மச்சான்....Dr.கதிர் : அது..... அது என் கைக்கு அங்க பிடித்தா தான் balance கிடைக்குது.... ஏன் பிடிக்க கூடாதா....முல்லைப்பூ : இல்ல இல்ல பிடிங்க......Dr. கதிர் : ம்...அதான் பிடிச்சுகிட்டு இருக்கேன்....முல்லைப்பூ : ம்...சரி....பிடிச்சுக்கோங்க...Dr.கதிர் : hey....என்னை பாக்க மாட்டியா.....முல்லைப்பூ : உங்கள இவ்வளவு கிட்ட இருந்து பார்த்தா எனக்கு வெக்கமா இருக்கு.....Dr.kathir : இப்போ தான் நான் என்ன சொன்னாலும் கேபேன் என்று சொன்ன....சரி போ...நான் போறேன்....முல்லைப்பூ : ஐயோ மச்சான் நான் கேட்பேன்....இப்போ நான் என்ன செய்யனும்...Dr. கதிர் : இனிமே நீ தினமும் என்கிட்ட ஒரு மணி நேரமாவது ஃபோன்ல பேசணும்...முல்லைப்பூ : ம்... பேசுறேன்Dr.கதிர் : தினமும் என்னை வந்து நீயும்...இல்லை உன்னை வந்து நானும் பார்க்கணும்...முல்லைப்பூ : இல்ல இல்ல நானே தினமும் வரேன்....Dr.கதிர் : அப்புறம்.....முல்லைப்பூ : அப்புறம் என்ன...Dr.கதிர் : அப்புறம் இந்த மாச கடைசியில் நான் குண்ணகுடி போறேன்....முல்லைப்பூ : ம்.... சொன்னீங்களே...Dr.கதிர் : ஆமா....நான் குண்ணகுடி போகும் போது நீயும் என்னுடன் வரணும்...முல்லைப்பூ : ஐயோ நானா...Dr. கதிர் : சரி வேணாம் நீ வர வேண்டாம்....போ....இனிமே நீ என்னை பார்க்க வராதே...முல்லைப்பூ : ஐயோ இல்ல....pls என்னை புரிஞ்சுக்கோங்கநான் எப்படி அங்கெல்லாம் வரருது...எனக்கு தயக்கமா இருக்கு....அதுவும் இல்லாமல் எனக்கு இருக்கும் பிரச்சனை உங்களுக்கு தெரிந்தால்....நீங்களே என்னை வெறுதுடுவிங்க என்று பயந்து தான் நான் உங்களை விட்டு விலகினேன்...Dr.கதிர் : இங்க பாரு முல்லை....உன் எல்லா பிரச்சனைக்கும் என்னால் solution தர முடியும் அதுக்கு நீ என்னை நம்பி....உன் மனச விட்டு என்னிடம் பேசணும்...முல்லைப்பூ : இல்ல மச்சான் நான்......நான் வந்து.....வேணாம் மச்சான் என்னை பற்றி எனக்கே தெரியல...ஆனா நான் ஏதோ தப்பு பண்ணியிருக்கேன்...ஒரு வேளை அதனால்ல உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால்Dr.கதிர் : hey ""அப்படியென்ன நீ கொலையா பண்ணிட்ட""....அப்படியே நீ கொலை செய்து இருந்தாலும் உனக்காக உன் நியதுக்காக நான் இருப்பேன்..((என்று dr.கதிர் சொன்ன மரு நொடி....முல்லைப்பூ தன் டாக்டர் மச்சான்னை இறுக்கி கட்டிகொள்ள...))Dr.கதிர் : முல்லைப்பூ..... நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்பதை இந்த ரெண்டு நாளில் உணர்ந்த நான்.......நான் இல்லாமல் நீ இல்லை என்பதையும் இந்த ரெண்டு மணி நேரத்தில் தெரிந்து கொண்டேன்....pls...இனிமே இந்த மாதிரியெல்லாம் பண்ணாதே...நீ எனக்கு வேண்டும்....நான் யாருக்காகவும் என் அழகியை விட்டு தர மாட்டேன்....முல்லைப்பூ : மச்சான்...எனக்கு என்ன சொல்றது என்றே தெரியல...ஆனால் என்ன ஆனாலும் நீங்க என்னுடன் இருப்பீங்க என்பதை நான் நம்புறேன்....dr.கதிர் : எய் beauty...முல்லைப்பூ : ம்...என்ன மச்சான்...Dr.கதிர் : நான் ...நான் உன்னை கிஸ் பண்ணவா....முல்லைப்பூ : இல்ல ... நான் தான் தப்பு செஞ்சேன்....அதனால் நான் தான் உங்களுக்கு முத்தம் தருவேன்.....((என்று சொன்ன முல்லைப்பூ ...டாக்டர் கதிரின் கன்னங்களை தன் கரங்களில் ஏந்தியவல்....அவனின் முகத்தில் இடை விடமால் முத்த மழை பொழிய....))Dr.கதிர் : முல்லை I need u...முல்லைப்பூ : ம்...புரியல...Dr.கதிர் : நீ எனக்கு வேணும்....முல்லைப்பூ : ம்....நான் உங்க கூட தானே இருக்கேன்...Dr.கதிர் : நோ...அப்படியில்ல நான் சொன்னது ....இங்க வா...((என்று சொன்ன டாக்டர் கதிர்..... முல்லை பூவின் காதில் ஏதோ முணுமுணுக்க))முல்லைப்பூ : என்ன நீங்க இப்படி எல்லாம் பேசுரிங்க.... இல்ல இல்ல அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணக்கூடாது நான் போறேன்...டாக்டர் கதிர் : சரி அப்போ கல்யாணம் பண்ணிக்கலாமா....முல்லைப்பூ : என்ன விளையாடுறீங்களா கல்யாணமா...அதுக்கு எல்லாம் என் வாழ்க்கையில் சாத்தியமே இல்லைdr. கதிர் : பாத்தியா அப்போ மறுபடியும் என்னை நீ ஏமாற்றலாம் என்று பாக்குறியா இல்ல இல்ல இதெல்லாம் சரிவராது நீ கிளம்பு நான் போறேன்....முல்லைப்பூ : (அவன் சட்டையைப் பிடித்து தன் வசம் அனைத்தவள் ) சும்மா அதையே சொல்லாதீங்க நம்ப எப்படி அதுக்குள்ள கல்யாணம் பண்ண முடியும் இப்பதானே நம்ப பழக ஆரம்பிச்சிருக்கோம்... இன்னும் நீங்க என்னை பற்றி தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் எவ்ளவோ இருக்கு...டாக்டர் கதிர் : எல்லாம் தெரிஞ்சு கிட்டு இவளை காதலிக்கலாமா வேண்டாமா என்று யோசித்து காதலிக்கிறதுக்கு...நீயும் நானும் நார்மலான காதலர்கள் இல்ல...உனக்கும் எனக்கும் பூர்வ ஜன்மத்து பந்தம் இருக்கு என்று நீதானே சொன்ன... இப்ப என்ன மாத்தி மாத்தி பேசுற... இங்க பாரு முல்லைப்பூ....எனக்கு இந்த மாதிரி மாத்தி மாத்தி பேசுற வங்கள கண்டாலே பிடிக்காது....எனக்குன்னு ஒரு சில ரூல்ஸ் இருக்கு.... என்னை hurt பண்றவுங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்....... உனக்கு இதான் ஃபர்ஸ்ட் and last டைம்....உன்னை நான் மன்னிச்சு மறுபடியும் உன் கூட நான் சேர்ந்து வாழனும் நினைக்கிறேன்...ஆனா நீ என்னை நேற்று hurt பண்ணதுக்கு நான் உனக்கு பனிஷ்மெண்ட் வச்சிருக்கேன்.....போக போக நான் தர எல்லா தண்டனையையும் நீ அனுபவிச்சு தான் ஆகணும்..முல்லைப்பூ : என்ன நீங்க வில்லன் மாதிரி எல்லாம் பேசுறிங்க...டாக்டர் கதிர் : ஆமா...நான் எப்ப வில்லனா இருப்பேன் எப்ப பயந்தவனாக இருப்பேன் என்று எனக்கே தெரியாது....ஏன் எனில் என் உடம்பில என் அம்மா அப்பா ரெண்டு பேரோட ரத்தமும் தான் ஓடுது புரியுதா....சரி நீ பேச்ச மாத்தாத.... நீ வெள்ளிக்கிழமை கல்யாணத்துக்கு ரெடியா இரு புரியுதா....முல்லைப்பூ : ஐயோ வெள்ளிக்கிழமைக்கு இன்னும் 12 நாள் தான் இருக்கு அதுக்குள்ள கல்யாணமா...டாக்டர் கதிர் : 12 நாளா இருக்கு வெள்ளிக்கிழமைக்கு....??முல்லைப்பூ : ஓ....இல்லையா நான் கூட அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை தான் சொல்றீங்க என்று பயந்துட்டேன்....டாக்டர் கதிர் : நானும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை சொல்லல... இதோ இப்ப வர போகுதே அந்த வெள்ளிக்கிழமை தான் சொன்னேன்...முல்லைப்பூ : மச்சான் விளையாடாதீங்க இன்னும் நாலு நாள்தான் இருக்கு அதுக்குள்ள கல்யாணமா என்னால முடியாது......டாக்டர் கதிர் : என்ன முடியாதா அப்போ நீ என்னை ஏமாற்றப் பார்க்கிற இல்ல.... சரி போயிடு என் முகத்திலேயே முழிக்காதே..முல்லைப்பூ : இல்ல இல்ல மச்சான் நான் கட்டிக்கிறேன்...dr. கதிர் : புரியல....முல்லைப்பூ : உங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன்...dr. கதிர் : நம்பலாமா...முல்லைப்பூ : ம்.......டாக்டர் கதிர் : சரி அப்போ நீ இங்க உட்காரு நான்போய் என்னுடைய கார் சாவிய எடுத்துட்டு வரேன்.....நம்ம ரெண்டு பேரும் போயி கல்யாணத்துக்கு தேவையான எல்லா பொருட்களும் வாங்கலாம்....அப்படியே நான் என் தம்பிக்கு message பண்ணி நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்றேன்.....முல்லைப்பூ : ம்....எதுக்கும் நீங்க ......எங்க அண்ணங்கிட்டdr. கதிர் : என்ன சொன்ன....முல்லைப்பூ : இல்ல ஒண்ணுமில்ல.dr.kathir : பரவாயில்ல சொல்லுமுல்லைப்பூ : இல்ல என் அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்களேன்...dr. கதிர்: உன் அண்ணன் கிட்ட கேட்டு தான் நீ அன்னிக்கு என்னை ஏணி ஏறி பார்க்க வந்தியா....நான் யார்கிட்டேயும் சொல்லணும் என்ற அவசியம் இல்லை...உனக்கு என்னை கட்டிக்க சம்மதம் இல்லைனா...நீ இப்பவே கிளம்பலாம்.....முல்லைப்பூ : இல்ல இல்ல நான் இங்கேயே இருக்கேன்....dr.kathir : என்னடா இவன் பார்க்க கண்ணாடி போட்டுகிட்டு இங்கிலீஷ் எல்லாம் பேசிக்கிட்டு அம்மான்ஜி மாதிரி இருக்கானே என்று நினைக்காத....எனக்கு தான் ஒரு பொருள் கிடைக்கும் என்று சொல்லி அத வேறு யார் கைக்காவது போச்சு என்றால்....நான் மனுஷனா இருக்க மாட்டேன்....என்ன புரியுதா...முல்லைப்பூ : ம்....புரியுது....Dr.கதிர் : சரி நீ ஏதாவது சாப்டியா ...முல்லைப்பூ : இல்ல எனக்கு எதுவும் வேணாம்....இங்க ஒரே மருந்து வாடையா இருக்கு..டாக்டர் கதிர் : ஒரு டாக்டர கல்யாணம் பண்ணிக்க போற.... மருந்து வாடை எல்லாம் நீயும் பழகிக்க வேணும் புரியுதா... ((என்று சொன்ன டாக்டர் கதிரழகன்... தன் அக்கா dr.கலையின் மருத்துவமனையிலேயே....மாறன், நந்துவை வைத்து ஒரு நாடகத்தை அரங்கேற்றி.... முல்லைப் பூவை மீண்டும் தன் வசம் வர வைக்க.......மறுபக்கம்.....dr. கதிரின்...... அக்கா dr. கலையின் மருத்துவமனை அறையின் வெளியே நின்று இருந்த மாறன்.....நந்தினியை பார்த்து....))மாறன் : ம்...எப்படி இந்த சக்திமாறனின் பிளான்...நந்தினி : நீங்க முல்லைபூக்கு அண்ணன் தானே....சக்தி மாறன் : இல்ல மாமா...நந்தினி : என்ன...??மாறன் : இல்ல உங்களுக்கு மாமா என்று சொன்னேன்...நந்தினி : அது எப்படி...என் கதிர் மாமாவை உங்க தங்கச்சி கட்டிகிட்டா உங்க தங்கை எனக்கும் தங்கை தானே...சக்திமாறன் : அட ஆமா...என்ன பண்றது... அப்போ நீங்க எனக்கு சிஸ்டர் இல்ல...ok sorry Sister...நந்தினி : ஹீலோ என்னை அபப்டி கூப்பிடாதிங்க...மாறன் : இல்ல இல்ல...நீங்க சிஸ்டர் தான்.....நந்தினி : நான் உங்களை கொண்ணுடுவென்...மாறன் : ம்...சரி சிஸ்டர் நீங்க உங்க வேலையை பாருங்க... நான் ஒரு phone பண்ணிட்டு வரேன்..நந்தினி : பரவாயில்ல நீங்க இங்கேயே பேசுங்க...மாறன் : நான் இங்க இருந்து பேசினா உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையா sister....நந்து : ஒ...pls...sister சொல்லாதீங்க....((என்று சொன்னவள் கோவமாக அந்த இடத்தை விட்டு வெளியே போக முயல.... அவளின் சுடிதார் துப்பட்டாவை பிடித்து இழுப்பது போல உணர்ந்தவள் மாறனை திரும்பி முறைத்து கொண்டே..))நந்து : ஹலோ உடம்பு எப்படி இருக்கு...சக்திமாறன் : 2 நாளா ஒரே உடம்பு வலி... ஏன் நீங்க எனக்கு ஏதாவது ஊசி போட போறீங்களா.....நந்தினி: ம்.... ஊசி எடுத்து உங்க வாயில் குத்த போறேன்... முதல என் துப்பட்டாவை விடுங்க....சக்தி மாறன் : ஹலோ... நாங்க பெண்கள்கிட்ட ஜாலியா பேசுவோமே தவிர.....அவங்க மேல எல்லாம் கை வைக்க மாட்டோம்.....உங்க துப்பட்டா chair ஆணியில் மாட்டி இருக்கு....நந்து : ஓ..... நான் பாக்கல.....சக்தி மாறன் : இருந்தாலும் சிஸ்டர்... உங்களுக்கு கொஞ்சம் அதிகம்தான்.....நந்தினி : ஹலோ... என்ன அதிகம்....சக்தி மாறன் : ம்,....வேற என்ன வாய் தான் sister .....((என்று சொன்ன சக்தி மாறன் அந்த இடத்தை விட்டு வெளியே போக..dr.கதிரும் முள்ளைபூவும் பயணித்த கார் ஒரு மாலில் போய் நிற்க....))Dr.kathir : ம்....முல்லைப்பூ...நம்ம இங்கேயே வேட்டியும் சட்டையும் புடவை ஜாக்கெட் எல்லாம் வாங்கிக்கலாம்..முல்லைப்பூ : நீங்க உண்மையாகவே நம்ம கல்யாணத்துக்கு தான் இதெல்லாம் வாங்கிறிங்களா டாக்டர் கதிர் : நான் என்ன உன்ன டைம் பாஸ்க்கு லவ் பண்றேன் நினச்சிட்டு இருக்கியா முல்லைப்பூ : இல்ல உங்க குடும்பம் ரொம்ப பெருசுஇப்படி யார்கிட்டயும் சொல்லாம கல்யாணம் பண்ணா உங்க வீட்ல யாரும் கொச்சிக்க மாட்டார்களாdr.கதிர் : உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.... எங்க அம்மா லீலா கழுத்துல... எங்க அப்பா செல்வா அவருக்கே தெரியாம தான் தாலி கட்டி இருக்கிறாரு....but நான் பாரு... எனக்கும் உனக்கும் தெரிஞ்சு தானே தாலி கட்ட போறேன்...so நீ feel பண்ணாதே....முல்லைப்பூ : என்ன சொல்றீங்க புரியலையே...டாக்டர் கதிர் : அந்த கதையெல்லாம் உனக்கு நான் இன்னொரு நாள் சொல்றேன் மொதல்ல போயி நல்ல புடவையா செலக்ட் பண்ணு முல்லைப்பூ : எனக்கு அதெல்லாம் பண்ண தெரியாது எனக்கு எது நல்லதோ இனிமே நீங்களே அதை எல்லாம் செய்யுங்க.....(( என்று முல்லைப்பூ சொல்ல டாக்டர் கதிர்..பட்டு வேட்டி பட்டு சட்டை பட்டு புடவை எல்லாம் வாங்குவதை பார்த்த முல்லைப்பூவின் மனதில் வரும் வெள்ளிக்கிழமை தனக்கு நடக்கப்போகும் திருமணத்தை நினைத்து குழப்பம் ஏற்பட....இவர்கள் இருவரும் துணிக்கடையில் செலவுகளை முடித்தவர்கள்...நகைக் கடைக்குச் செல்ல..))Dr.கதிர் : ம்... பூ...இந்த தாலி நல்லா இருக்கா...முல்லைப்பூ : அதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு சொன்னேன் இல்ல...Dr.கதிர் : ம்...இது நல்லா இருக்கு....சரி போகலாமா... வேற ஏதாவது வேணுமாமுல்லைப்பூ : இல்ல வேணாம் ஆனா இதெல்லாம் Dr.கதிரழகன் : என்ன எது கேட்டாலும் தயங்கி தயங்கி பேசுற ....நீ என்னை ஏமாற்றப் பார்க்குறியா.....முல்லைப்பூ : அய்யோ மச்சான் எனக்கு யாரையும் ஏமாற்ற எல்லாம் தெரியாது.... ஆனால் எனக்கு ....எனக்கு...ஏன் இப்போ இவ்வளவு சீக்கிரம் கல்யாணம்...Dr.கதிர் : எல்லாத்துக்கும் reason இருக்கு...வெள்ளிக்கிழமை உனக்கும் எனக்கும் கல்யாணம் புரியுதா சரி வா போகலாம் முல்லைப்பூ : எங்க போகனும் Dr.கதிரழகன் : என்ன கேள்வி கேட்கிற... நான் எங்க கூட்டிட்டு போனாலும் நீ வரணும் புரியுதா....முல்லைப்பூ : ம்...புரியுது......சரி போகலாம்....((என்று முல்லைப்பூ சொல்ல... டாக்டர் கதிரும்,முள்ளைப்பூவும் பயணிக்கும் கார்... உமா பாரதியின் அலுவலகத்திற்குச் செல்ல... அந்த அலுவலகத்திற்குள் நந்தினி, மாறன், உமாபாரதி என்று மூவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களை பார்த்து முல்லைபூ கோவதுடன் தன் அண்ணனைப் பார்த்து ...))முல்லைப்பூ : அண்ணா என்ன காரியம் பண்ண ....ஏன் என் மச்சானுக்கு கத்திக்குத்து பட்டு இருக்குன்னு என்கிட்ட பொய் சொன்ன...மாறன் : அதுவாமா இந்த நந்தினி சிஸ்டர் தான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க சொன்னாங்க...அதான் ஒரு plan பண்ணேன்....முல்லைப்பூ : நீங்க ........நீங்க.....உங்களை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன்....மாறன் : இப்ப தானே அந்த மருத்துவ மனையில் பார்த்தோம்...முல்லைப்பூ : இல்ல அப்ப நான் இவுங்களை ஒழுங்கா கவனிக்கல.....ஆனா இவுங்களை நான் வேற எங்கோ பார்த்து இருக்கேன்....நந்தினி : டேய் மாமா...சக்திமாறன் : S...சிஸ்டர்....நந்தினி : ம்....நான் என் மாமாவை கூப்பிட்டேன்....டேய் கதிர் மாமா...இந்த பொண்ணு அப்படியே நம்ம சித்ரா தான் டா......என்னால் நம்பவே முடியல...முல்லைப்பூ : இல்ல....நான் உங்கள...எங்கேயோ பார்த்து இருக்கேன்....எனக்கு தலை எல்லாம் குத்துது....dr.கதிர் : hey முல்லை....என்னாச்சு...முல்லைப்பூ : எனக்கு தலை வலிக்குது மச்சான்...dr. கதிர் : சரி நீ இப்படி உக்காரு....பாரதி இந்தாங்க....இதுல புடவை தாலி எல்லாம் இருக்கு.....உமாபாரதி : எதுக்கு இதெல்லாம்....dr.கதிர் : ம்.....COMING FRIDAY....எனக்கும் முல்லைப்பூவுக்கும்...MARRIAGE....((என்று DR.கதிர் சொல்ல..... மாறன்,நந்தினி,பாரதி என்று மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள..))dr. கதிர் : ம்... முல்லைப்பூ......உள்ள rest ரூம் இருக்கா....முல்லைப்பூ : ம்.....இருக்கு....அந்த பக்கம் போகனும்...dr.கதிர் : சரி நீ கொஞ்சம் உள்ள வா...முல்லைப்பூ : நானா.....நான் எதுக்கு...??dr. கதிர் : ஆன்....rest எடுக்க.....என்ன question இது....வான்னா வரணும் புரியுதா....((என்று சொன்ன டாக்டர் உள்ளே போக.....முல்லைப்பூ கலக்கத்துடன் வெளியே நின்று இருக்க....))நந்தினி : என்ன முல்லை....போ....ஏதாவது பேச வர சொல்லுவான்....முல்லைப்பூ : இல்ல ....அவரை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு....காலையில இருந்தே அவர் பேச்சு நடவடிக்கை எல்லாம் சரியில்ல....நான் முன்னாடி பார்த்த என் மச்சான் இப்படி இல்ல....நந்து : அதுக்கு நீ தான் காரணம்....அவனுக்கு எங்க நீ மறுபடியும் அவனை வேண்டாம் என்று சொல்ல போற என்ற பயம்...அதான் உன்னை சீக்கிரம் அவனுடைய உரிமையாக்கி கொள்ளனும் என்று முடிவு பண்ணிட்டான்..((என்று நந்தினி சொல்லி கொண்டு இருக்கும் போதே ...dr.kathir உள்ளே இருந்து சத்தமாக....))dr. கதிர் : hey beauty.... நான் எவ்வளவு நேரம் wait பண்றது.....முல்லைப்பூ : ஆன்....இதோ வரேன் மச்சான்.....(( என்று சொன்னவள் தயக்கத்துடன் dr. கதிரிடம் செல்ல......))dr.கதிர் : நான் தான் உன்னை இங்க வர சொன்னேன் இல்ல...வெளிய என்ன பேச்சு...முல்லைப்பூ : ம்....அது ஒண்ணுமில்ல....dr.கதிர் : சரி இங்க வா...முல்லைப்பூ : ம்....என்ன வேணும்...dr.kathir : என்ன கேட்டாலும் தருவியா....முல்லைப்பூ : ம்...தரேன்....dr. கதிர் : உன் உதடு தான் அப்படி சொல்லுது ...ஆனா.....முல்லைப்பூ : என்ன ஆனா....dr. கதிர் : இல்ல உன் உள்ளதில் என் மேல ஏதோ வெறுப்பு இருக்கிற மாதிரி இருக்கே...முல்லைப்பூ : இல்ல வெறுபெல்லாம் இல்ல...ஆனா பயம் தான் இருக்கு...dr. கதிர் : என்ன பயம்....முல்லைப்பூ : இங்க பாருங்க ... நான் பொய் சொல்லல....எனக்கு நான் யாரு என்ற கேள்விக்கே இன்னும் பதில் தெரியல....என் ஆயா ஒரு நேரம் என்னை முல்லை என்று சொல்லுவாங்க....ஒரு நேரம் சித்ரா என்று சொல்லுவாங்க...ஒரு நேரம் அழகி என்று சொல்லுவாங்க...dr.கதிர் : எய் சித்ரா வா......??இல்ல சைத்ரா வா...??முல்லைப்பூ : உங்களுக்கு எப்படி தெரியும்.... ஆமா அவுங்க என்னை ஒரு சில நேரம் சைத்ரா என்று கூட சொலுவாங்க....dr.கதிர் : நீ யாராக இருந்தாலும் சரி...வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து நீ MRS.கதிர்....புரியுதா.....முல்லைப்பூ : ம்....dr.கதிர் : என்ன ...ம்....முல்லைப்பூ : எனக்கு பயமா இருக்கு....நான் யாருன்னு உங்களுக்கு தெரிய வந்து நீங்க என்னை வெறுத்துட்டா.....dr. கதிர் : நீ எனக்கு வேணும் அவ்வளவு தான்.....உன்னை என்னால் வெறுக்க எல்லாம் முடியாது....இப்ப கூட ஒன்னும் ஆகள....என் மேல உனக்கு நம்பிக்கை இல்லைனா சொல்லிடு நான் இந்த கல்யாணத்தை stop பண்ணிடுறேன்...முல்லைப்பூ : அது வந்து....dr. கதிர் : ஆனா after that நீ என்னை பார்க்கவே கூடாது.... நானும் இந்த ஊருல இருக்க மாட்டேன்...முல்லைப்பூ : இல்ல இல்ல மச்சான்... என்னால் உங்களை பார்க்காமல் இருக்க முடியாது.....நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்....dr.கதிர் : ம்...சரி இந்தா....முல்லைப்பூ : என்ன இது.....dr.kathir : இது என்னுடைய மோதிரம்..முல்லைப்பூ : எதுக்கு இது...dr. கதிர் : இன்னைக்கு பத்து மணிக்கு இதை எடுத்துகிட்டு நீ நம்ம வீட்டுக்கு வரணும்....முல்லைப்பூ : நைட் ட்டா.....dr.கதிர் : ம்.... ஆமா இன்னிக்கு நைட்....முல்லைப்பூ : அது எப்படி... உங்க வீட்ல உங்க தம்பி ,அக்கா, அப்புறம் உங்க மாமா பொண்ணு எல்லாம் இருப்பாங்களே....dr. கதிர் : நீ ஏன் வாசல் பக்கம் வர....எப்பவும் போல ஏணியில் ஏறி வா.... நான் உனக்காக பால்கனியில் வெயிட் பண்றேன்....முல்லைப்பூ : எதுக்கு நைட் வரணும்..dr.kathir : ஏன் சொன்னா தான் வருவியா.....அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா....உன்னை நைட் வர சொல்லி உன்கிட்ட நான் மிஸ் behave பண்ண போறேன் என்று நினைக்கிறியா...முல்லைப்பூ : ஐயோ ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க....நான் இதெல்லாம் சொல்லவே இல்லையேdr.kathir : பின்ன என்ன கேள்வி கேட்கிற.... நான் நைட் வானா வர வேண்டியது தானே....முல்லைப்பூ : சரி சரி கோவபடாதிங்க....நான் வரேன்....dr. கதிர் : ம்....சரி இப்போ போ...முல்லைப்பூ : ம்.......dr. கதிர் : hey பியூட்டி கொஞ்சம் நில்லு....முல்லைப்பூ : ம்....என்ன மச்சான்...dr. கதிர் : போன்னு சொன்னா போய்டுவியா...முல்லைப்பூ : அதுக்கு அதானே அர்த்தம்...dr.கதிர் : love ல... போ என்று சொன்னால் இரு என்று அர்த்தம்....வேணாம் என்று சொன்னால் வேணும் என்று அர்த்தம்.... இதுகூட உனக்கு தெரியாதா....முல்லைப்பூ : இல்ல எனக்கு தெரியாது....dr. கதிர் : ம்...எனக்கும் தெரியாது.... ஆனா உன் அண்ணன் சக்திமாறனும், நந்தினியும் தான் சொன்னாங்க....முல்லைப்பூ : என்ன சொன்னாங்க....dr. கதிர் : ம்...உன் மனசு முழுசும் நான் தான் இருக்கேன்னு சொன்னாங்க...but எனக்கு அப்படி தெரியல...நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி பார்த்த என் முல்லைப்பூ இங்க இல்ல...முல்லைப்பூ : நான் அப்போ பார்த்த என் டாக்டர் மச்சான் கூட தான் இப்போ இங்க இல்ல....dr கதிர் : அதுக்கு நீ தானே காரணம்...soft ஆக இருந்த என்னை terror ஆக மாற்றியது நீ தான்...so...நீ தான் இது எல்லாத்துக்கும் ரீசன்....முல்லைப்பூ : சரி நேரம் ஆகுது நான் போகவா.....dr. Kathir : இப்போ போ... ஆனா இன்னைக்கு நைட்டு கண்டிப்பா வரணும்...இல்லன்னா நான் உன் வீட்டுக்கு வருவேன்...முல்லைப்பூ : இல்ல இல்ல நானே வரேன்...இப்போ நான் போட்டா...dr. கதிர் : சரி போறது தான் போறஎனக்கு ஒரே ஒரு கிஸ் தந்துட்டு போ...முல்லைப்பூ : அதான் நைட் வரேனே அப்போ தரேன்..dr. கதிர் : no no...இப்போ எனக்கு முத்தம் மட்டும் வேணும்...but நைட் எனக்கு மொத்தமும் வேணும்....முல்லைப்பூ : இல்ல அது வந்து...dr. கதிர் : அதான் மீண்டும் வந்துடியே அப்புறம் என்ன தயக்கம்....முல்லைப்பூ : இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு.... ஆ.....ஏன் மச்சான் என் இடுப்பை கில்லுறிங்க....dr. கதிர் : இது கனவு இல்ல நிஜமன்னு நீ நம்பவேண்டும் இல்ல அதான் கில்லினேன்....முல்லைப்பூ : அதுகுண்ணு இப்படியா ...எனக்கு வலிக்குது...dr. கதிர் : its ok நானே நைட் மருந்து போட்டு விடுறேன்....முல்லைப்பூ : நீங்க ஏதோ முடிவோடு தான் இருகிங்க போல.....dr.கதிர் : hey...BEAUTY...இது முடியவில்லை....இனி தான் எல்லாம் ஆரம்பம்...........என்று சொன்ன dr.கதிர்..... முல்லைப்பூவை தன் வசம் அனைத்து... அவளது கன்னத்தில் அவனது காதலை தன் இதழ்களை கொண்டு முத்தம் என்ற சமாதான சங்கிதத்தால் இசை அமைக்க.......இவர்களது இரு இதயமும் மீண்டும் ஒன்றாய் இணைய.........முல்லைப்பூ மனதில் தனக்கு வரும் வெள்ளி அன்று உண்மையிலேயே திருமணம் நடை பெற போகிறதா என்றும்.....தன் பிறப்பின் ரகசியம் என்ன என்ற கேள்விக்கும் உண்டான பதிலை நினைத்து கலக்கத்துடன் இருக்க.....இந்த வார கதை களம் இனிதே முடிவடைய...மீண்டும் விரைவில் சந்திப்போம்என் கற்பனைக் கதைக்கு கருத்து தெரிவிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றி மீண்டும் வருவேன் நான் உங்கள் 166Layola Justina Mary, Murugesan Ramasamy and 164 others70 CommentsLikeComment


🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now