💛💙💛💙💛

150 26 16
                                    

💙அன்பே💛சிவம்💙

🐦Episode 27

தேவி - ஏய் என்னடி கட்டிக்க போற புருஷனை மரியாதை இல்லாம பேசுற

வேணு - இதுக்கு மேலேயும் இந்த mrge நடக்கும்னு உனக்கு நம்பிக்கை
இருக்கா 3.தேவி.....

தேவி - 🤐

M - ம்...Mrs. தேவி...நீ கேட்ட நகை, கார், பங்களான்னு எல்லாமே இங்க இருக்கு... இதெல்லாம் இப்போ நான் உனக்கு தரேன் .... ஆனா நீ எனக்கு உன்னால இறந்த என் அம்மாவை மட்டும் திருப்பி தா.....

தேவி - 🤨

M - ஆம்பள பிள்ளையை பெற்று எடுத்தால் நீ என்ன அவனை வச்சி கல்யாண வியாபாரம் செய்யலாம்னு நினைக்கிறியா.....

தேவி - இங்க பாரு....

M - ம்.... நீ வந்தது.... பண்ணது...
பேசினது... இது எல்லாத்தையும் நான் ரெண்டு நாளா பாத்துகிட்டு மட்டும் தானே இருந்தேன்.... ஆனா இதுக்கு மேலேயும் நான் ஒரு சில பருத்தி மூட்டைங்க போல பாத்துகிட்டு மட்டுமே இருந்தா..நீ எனக்கு சுரணை இல்லைன்னு நினைக்க மாட்ட.... அதனால தான் நான் இப்போ பேசுறேன்.... சரி சரி சொல்லு..
எங்க அம்மாவை நீ எப்போ தர போற...

தேவி - இந்தாடி.. உன் அம்மா தான் செத்துட்டா இல்ல... அவளை நான் எங்க போய் தேடுறது...

M - என் அம்மா அவுங்களா சாகல... நீ தான் அவுங்கள வார்த்தையால குத்தி கிழிச்சி சாகடிச்ச...

ஆகாஷ் - listen ஏஞ்சல்... உங்க அம்மா மரணம் ஒரு விபத்து.... அதை ஏன் இப்போ பேசுற நீ... வா வா நல்ல நேரம் முடியும் முன்னே நான் உனக்கு தாலி கட்டுறேன்..

M - டேய் ஆர்வக்கோளாறு... அது எப்படி... நீ போற காரு accident ஆச்சுன்னா அதுக்கு காரணம் என்னோட ராசி.... ஆனா உன்னை எனக்கு கல்யாணம் செய்து வைக்கணும்னு நினைச்ச பாவத்துக்கு என் அம்மா உன் அம்மாகிட்ட அசிங்க பட்டு நெஞ்சு வலி வந்து செத்து போனா அது ஒரு விபத்து.... அப்படி தானே.... என்னங்கடா உங்க நியாயம்...

தேவி - இங்க பாரு டி.. ஒரு பொம்பளை பிள்ளைக்கு இவ்வளவு வாய் ஆகாது....

M - அத ஒரு பொம்பளையா நீ இருந்து என்கிட்ட சொல்லு நான் கேட்டுக்கிறேன்... நீயே ஒரு பண பேய்....நீ என்னை பத்தி பேசுறியா.... ஆமா ஆமா என்ன சொன்ன நீ... நான் ராசி இல்லாதவளா... என் முகத்துல விழிச்சிட்டு போனா உன் மவனுக்கும் உனக்கும் நல்லது நடக்காதோ..

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now