உயிரினில்￰ கலந்தவன்

592 45 73
                                    

வாழ்க்கை புத்தகத்தின் 
அழகான வரிகளாய் நீ

கல்லான என் மனதை 
கனியாக மாற்றியே கள்வன் நீ

வெறுத்த உலகை  விரும்பி 
பார்க்க வைத்த என் விடியல்  நீ

விலகி நடந்த  என்னை விரும்பி
ஏற்ற  உன்னதமான உறவு  நீ

வாழ்வு இருண்ட போது வாழ்க்கையை 
வண்ணமாக  மாற்றிய வசந்தம்   நீ

பாறையாய் இருந்த என்னை
சிற்பமாக  மாற்றிய சிற்பி  நீ

எட்டா கனியா இருந்த  என் புன்னகையை 
எட்டி பிடித்து  காட்டிய மாயவன்  நீ

என்  உதட்டில் பூக்கும் 
புன்னகையின்  வாசம்   நீ

புழுவாய் இருந்த என்னை வண்ணத்து பூச்சியாய் மாற்றிய பகலவன்  நீ

புயல்  அடித்த   என் வாழ்க்கையை
சில்லென்று
மாற்றிய மிதமான  காற்று நீ


என்   இதயக்கூட்டில் தினமும்
பூக்கும் என் காதல் ரோஜா  நீ

என் வாழ்க்கையாய் நினைத்த  என்னை
நம் வாழ்க்கை  என மாற்றி
இன்று என்
உயிரினில் கலந்தவன்  நீ
என் உயிரே....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now