காதல் கனவு

162 25 132
                                    

இரவு பகல் பார்க்காமல் இடைவிடாமல் உறங்குகிறேன் உயிரே உன்னை காண்பதற்காவே.....

கோடி ஆசைகள் என்னுள் உன்னை கண்டு உன்னுள் உறவாட....

பார்க்கும் அனைத்திலும் உன்னையே தேடுகிறேன்....

உன் முகம் அறியும் ஆவலில்....
உன்னை கண்டு உன் மார்பில் சாய்ந்து பல கதை பேசவேண்டும் காலநேரமின்றி...

நிழலாய் உனை தொடர்ந்து கொண்டு காலம் முழுதும் வாழ்ந்திடனும்.....

காற்றை போல் என்றும் உன் தேகம் உரசி காதல் மூச்சில் கலந்திடணும்டா....

நொடி பொழுது உனை பிரியாமல் உன் அணைப்பில் உறங்கிடவேணுமடா.....

தொடங்கும் அனைத்திலும் நீ வெற்றி கண்டாலும்...

காதல் செய்வதில் நான் உன்னை வெல்வேனாடா......

இமை மூடாமல் என்றும் என் இதய சிறையில் உன்னை ஆயுள் கைதியாய் அடைத்திடுவேனடா....

உன்மீது நான் கொண்டுள்ள அன்பை இன்று உன்னிடம் சொல்ல முடியாவிட்டாலும்...
வருத்தமில்லையடா.....

காரணமின்றி உன்னை காதலித்து கொண்டே வாழ்வேணடா...

வாலில்லா பட்டம் போல் பறக்கிறேன்
உன் கை வந்து சேர மாட்டேனா என்ற ஏக்கத்தோடு....

நான் பிறந்ததே உன்னுடன் சேரத்தானே விரைவில் என்னிடம் வந்து சேரடா....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now