நேசத்தின் தேசம்

69 17 51
                                    

பேசுவதற்கு வார்த்தைகள்
இருந்தும் இன்பமான துன்பமாய்
தவிக்கிறது நெஞ்சம்
உன்னிடத்தில் பேசமுடியாமல்...

சம்மதம் என்ற ஒற்றை
புன்னகையோடு எனை திரும்பி
பார் போதும் உனக்காய்
சேர்த்தும்  நானே காதலிக்கிறேன்...

என் மைவிழியால் நீ உணர்ந்திருக்க வேண்டுமே என்றோ உன்
காதலில் கவிழ்ந்துவிட்டேன் என...

உலக மொழிகள் அனைத்தும்
கூட படித்துவிட்டேன்  உன்
மௌன மொழியின் அர்த்தம் மட்டும் அறியமுடியவிலையே...

என் தவிப்பு கண்டு நீ சிரிக்கிறாய்
எப்படி சொல்வேன் அன்பே
உன் சிரிப்பை காண தான்
நான் தவியாய் தவிக்கிறேன் என...

எந்தன் பேச்சு வார்த்தையில்
இருந்து இன்று என்
மூச்சுக்காற்றாய் நீயே
இருக்கிறாய்......

எனக்காக நான் சேகரித்த
சொத்து உன் நேசம்
அதில் உனக்காக எழுதிய 
உயில் என் உயிர்
பிரிந்தாலும் உனக்காக மட்டுமே...

உன் நேசமான வார்த்தையால்
இன்று என்  நேசத்தின் தேசமாய்
நீயே ஆனாயே அன்பே.....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now