ஆண்கள் வெட்கம்

238 15 103
                                    

முதன் முதலில் அரும்பு மீசை துளிர் விடுகையில் கண்ணாடி பார்த்து தன்னை ரசித்து கொண்டு இருக்கையில் வீட்டில் யாரோ பையன் வளந்துட்டான் என கூறுகையில் அதலாம் ஒன்னும் இல்லை என கூறி நடக்கையில் வருமே ஒரு பொன் சிரிப்பு அதனின் வெட்கம் சொல்ல முடியுமோ...

தன் மனம் கவர்த்தவள் தன்னை நோக்கி வருகையில் நண்பர்கள் படை தன்னை சூழ்ந்து கொண்டு கேலி பேசுகையில் அவளை மட்டுமே பார்த்து கொண்டு அவள் தலை நிமிர்த்தி பார்க்கையில் இவன் தலை குனிந்து பேசுகையில் ஆண்களின் வெட்கம் அழகோ அழகோ.....

சின்ன சின்ன முகப்பரு அங்கங்கே வருகையில் யாரோ உன்னை ரொம்ப பார்க்குறாங்க (சைட்) அடிக்குறாங்க போல என கூறுகையில் அட போங்கடா அதலாம் ஒன்னும் இல்லை என்று கூறி அப்படி இருக்குமோ என யோசிக்கையில் வரும் வெட்கம் அழகின் அழகு....

பெண்பார்க்கும் படலம் சிறப்பாய் நடக்கையில் கண்ணெதிரே பெண் நிற்கையிலும் கூட யாரும் கேலி பேச கூடுமோ என நினைத்து தலை நிமிராமல் ஒர பார்வை பார்த்து அதிலும் யாரிடமாவது சிக்கி சிரிக்கையில் வருமே ஒரு வெட்கம் வர்ணிக்க வார்த்தை ஏது......

மணவறையில் ஊரார் முன்பு அமர்ந்திருக் கையில் தன்னவள் நாணத்தோடு வருவதை காண மனம் ஏங்கினாலும் நண்பர்களிடம் மாட்டி கொள்வோமே என மந்திரம் சொல்லி திரும்புகையில் ஐயர் இங்க பார்த்து சொல்லுங்க என கூறுகையில் சட்டென குனியும் போது வருமே ஒரு வெட்கம்......

ஆண்கள் வெட்கம் சொல்ல வார்தையுண்டோ எதிலும் எழுத படாத கவிதை அல்லவா அவனின் நாணம் வர்ணிக்க முடியாத வார்த்தை அல்லவா அவனின் வெட்கம் கலந்த பார்வை.... ஆணின் வெட்கம் அறிதல்ல அது அழகின் அழகு அதிகம் மறைவோடு மறைத்து கொள்கிறான் அவன்......

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now