பயணம்

113 27 63
                                    

உறங்காத பயணத்தில்
விடியாத இரவில்....
உன் தோள் சாய்ந்து
உன் விரல் பிடித்து
பல கதை பேசி 
பயணம் தொடங்க
காத்திருந்தேன்.. ...
காற்றாக கை வந்து
சேர்ந்தாய்...
என் அருகில் நீ அமர்ந்து
உன் விரல் என்னை
தீண்டுகையில் உடல்
சிலிர்த்து போகிறேன்...
உன் தீண்டல் சீண்டலாய்
மாறுகையில் மனம்
நிறைந்து போகிறேன்....
உன் தோள் சாய்ந்து
எனை நான் மறந்து...
காலம் முழுதும் காதல்
செய்து வாழ ஏங்குதடா
என் மனம்....
ஆனால் எனக்கு மட்டும் ஏனோ
நீ  இல்லாத பயணம் நீளுகிறது
உன்னுடனான பயணம்
உடனே முடிகிறது....
காதல் வயப்பட்ட நெஞ்சத்துக்கு
மட்டும் தான் இப்படி தெரிகிறதோ....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now