நிம்மதி

202 37 95
                                    


உன் முகம் பார்த்த பின்பு   பிறவி 
பலனை அடைந்தேனடா  .....

உன் கண் அசைவில்   காதல்
தோன்றவில்லையடா.....

காதல் பூக்கும் நேரம் யாருக்கும்
தெரிவதில்லையடா..... 

வாழ்க்கை அழகானதென்று   உன்னால்  உணர்ந்தேனடா....

உன் குரலில் என்ன காந்த சக்தியடா... 
உனக்காக மட்டும் செவிசாய்க்கிறது 

என் வலியில் நீ துடித்த போது
தாயன்பின்   நிறைவு  கண்டேனடா.  

உன் அணைப்பில் தந்தையின் 
அரவணைப்பு கண்டேனடா ....

முடிவில்லா ஆகாயம்  போல் உன்
அன்புக்கும்  குறைவில்லையடா..... 

இது தான் சொர்க்கமென்று 
எனக்காக துடிக்கும் உன் இதயத்தில் 
உணர்ந்தேண்டா ..... ......

காலம் முழுதும்  உன் அன்பில்  கரைந்து
உன் கைக்குள்  அடங்கிட ஆசையடா  .......

எந்நாளும்  வண்ணமயமாக  அமைய உன்
புன்னகை போதுமடா ...

ஒருமுறை வாழும் வாழ்க்கையை உனக்காக
என் காதல் கொண்டு நிரப்பவேணுமடா .........

துன்பம் வரும் போது உன் தோள்
சாய்ந்தாள்  துன்பம் விலகுமடா .........

பிரமன்  கை தேர்ந்தவன்  என
உன்னை பார்த்து  கண்டு கொண்டேனடா......

இதுவரை காணாத நிம்மதியை....... உனக்காக நான் என்று நீ சொல்லும் ஒற்றை  வரியில் அடைந்தேனடா.......

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now