எதிர்பார்ப்பு

213 26 116
                                    

உன்னிடத்தில் என் மனதை 
இழந்தேன் நீ காதல்
கொண்டு வருவாய் 
என காதலோடு
காத்திருந்தேன்  காலங்கள்
தான் கடந்து சென்றது 

உன்மீது தவறு இல்லையே
எதிர்பார்த்து ஏமாந்து
போனது
நானாக  தானே

காதலை
கண்ணசைவில் 
உணர்த்திவிடலாம்
  என நான் எதிர்பார்த்தது 
தவறுதான் 

உன்னை  பார்க்கும்
நிமிடமெல்லாம் 
என் காதல் வளர்பிறை 
போன்று 
வளர்ந்து கொண்டே
இருக்கிறது
எனக்கே தெரியாமல்

ஆகாயத்தின் மீது ஆசை!!!!
கருமேகம்  மேல் ஆசை !!!!
சந்திரன் மீது ஆசை !!!
சூரியன்  மீது ஆசை !!!

ஆசைப்படும் அத்தனையும்
அடைத்துவிடும்  தூரத்தில் 
இல்லையே ...

அதில் நீயும் ஒருவனாகி
விட்டாயே  ....
 
அவைகளாவது
தொலைவில்  உள்ளது
நீ அருகில்
இருந்தும்  அணைக்க 
முடியவில்லையே  ..

என்றோ ஒருநாள் 
சேர்ந்துவிடுவோம் 
என எண்ணி வாழ்ந்தேன் 
உன்னை மணக்கோலத்தில் 
பார்க்கும்  வரை ...

என் காதல் கடைசிவரை 
உனக்கு புரியவில்லையா 
அன்பே......

எனக்கு உரிமை இல்ல
பொருளில் 
ஆசை கொள்வது தவறு  
மூளைக்கு தெரிவது 
மனதுக்கு
புரியவில்லையே  ...

விழியில் தேக்கிருந்த  காதல்
அனைத்தும் இன்று
விழிநீராய் வழிகிறது  .....

எல்லா உறவும்
இருந்தும் இன்று
தனிமை மட்டும் விரும்பி
ஏற்கிறேன்  நீ எனக்கு
இல்லை என்பதால்  ....

இன்று மரணத்தை
நோக்கி காத்திருக்கிறேன்
நீ என்னுடன்  இல்லாத 
வாழ்க்கை வாழ
விரும்பாமல் .....

மரணத்துக்கும் என் எதிர்பார்ப்பு புரியவில்லை  போல
என்னிடம் வராமல் சோதனை செய்கிறது ............

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now