￰மழைத்துளி

159 22 41
                                    

நீ வரும் போது   ஆனந்த 
களிப்படைகிறேன் உன்னை
காணும்  வேலையில் 
உள்ளுக்குள்  சொல்ல
முடியாத ஒரு உணர்வு
நீ என்னை தீண்டும் போது
மெய் மறந்து உன்னக்குள் 
புதைகிறேன்  மீண்டு  வர
விரும்பாமல்  ஆனால் நீயோ
என்னை ஏமாற்றி  கொண்டே
இருக்கிறாய் சொல்லிக்கொள்ளாமல் 
வந்து இன்பம்  தருகிறாய் 
அதை உடனே நீயே
பறித்துக்கொண்டு
தவிக்கவிடுகிறாயே நீ உடனே
பிரிந்தாலும் உன் வாசம் 
என்னை உன் வசம் இழுத்து 
செல்கிறதே  உன் வருகையில்
எத்துணை  ஜீவன் உயிர்
பெறுகிறது  உனக்கு மட்டும்
எத்துணை வலிமை
ஆனால் சுயநலம் கொண்ட நான் 
மட்டும்  நீ அழும் போது  ரசித்து
சிரிக்கிறேன்  என்னை மறந்து ..
பருவம் தவறாமல்  தரிசனம் 
தரும் உன்னை இன்று மனிதன்
என்னும் மனம் இல்லாதவர்களால்  இயற்கை காடு மலைகளை  அழித்து உன்னை காண்பதற்கு  தவம்
செய்யும் படி ஆயிற்றே  ...
மீண்டும் ஒருமுறை வரம் தருவாயா 
உனக்காக ஏங்கி  தவிக்கிறேன் 
நீ சிந்தும் மழைத்துளியில் 
ஒருமுறை உனக்குள் 
உறவாடி கொள்கிறேன் 

ஆசைகள் ஆயிரம் Opowieści tętniące życiem. Odkryj je teraz