😘என் வருங்காலமே😘

85 15 36
                                    

என் கரம்பிடித்த நாளில்
இருந்து அதிகாலை
உனை எழுப்பி தேனீர் கொடுத்து..

குளித்து முடித்து என்
முந்தானை இழுத்து
தலை துவட்டி..

உன் சேட்டை கண்டு
தலையில் குட்ட
நினைக்கையில்
கன்னத்தில் இதழ் ஒற்றி
சிலையென நிற்க வைக்கிறாய் ...

உன் மீசை தீண்டுகையில்
உடலில் குறுகுறுப்பேற்றி
இம்சை செய்து தெளிவாகிறேன்... ..

அடிக்க நினைக்கையில்
உணவு உன்ன மறுத்து 
ஊட்ட சொல்லி அடம் பிடித்து..

வேலைக்கு வழியனுப்பும்
வரை உன் குழந்தைத்தனமான
சேட்டை அனைத்தும் ரசித்து...

நீ வரும் வரை உன்னை
பற்றி நினைத்து
சிலநிமிட தாமதத்திற்கு
உன்னிடம் சண்டை பிடித்து..

ஒன்றும் பேசாமல்
மௌனமாய் அந்த இடத்தில்
இருந்து விலகி செல்ல நகர்கையில் .....

என் இடைபிடித்து உன் மடிமீது
அமர்த்தி வேளைடி கண்ணம்மா
என்று நீ சொல்லும் வார்த்தையில் உருகி.....

உன் அன்பில் கரைந்த பின்னும் கோபமின்றி வீராப்பாய்
முகத்தை சிலுப்பி சிரித்து.....

உன் கெஞ்சலை ரசித்து நீ
அசந்த நேரம் உன்னிடம் இருந்து
ஓடி மறைந்து....

உன் அணைப்பில் பல கதைபேசி
ஊடலும் கூடலும் இரவு கடந்திட......

உன் மார்பில் முகம் புதைத்து
உறங்கி விடியலின் உன் பிடியில்
விட்டு விலக மனமின்றி......

சிறிதாய் நீ சிணுங்குகையில் உன்
நெற்றியில் இதழ் ஒற்றி எழுந்து...

தினமும் புது மலராய் உன் அன்பில்
பிறந்து காதலுக்கு பரிசாய்
இரண்டு முத்துக்கள் பெற்று. ..

என் சிறு ஆசையும் பெரிதாய் நீ
நினைத்து நிறைவேற்றி  எல்லாம்
செய்தும் அறியாப்பிள்ளை
போல் என் மடி சாய்ந்து
உறங்கும் வேளை....

உன் அழகை ரசிக்கையில் திடீரென 
இமை திறந்து பார்த்து சட்டென என் 
நுனிமூக்கில் உரசி உன் சுவாசம்
எனதாகி.......

சோர்வான நேரத்தில்  எனை அமர்த்தி
நீ வேளை செய்யும் அழகை நான் ரசித்து....

ஒரு வேலையை பன்மடங்காய்
மாற்றி வைக்கையில் கோபமின்றி
அதை மீண்டும் நானே சீர் செய்து.......

அழகான இல்லறம் புரிந்து
காலம் அதன் போக்கில் சென்று
முடி நரைத்து நடை தளர்ந்து.....

உன் அருகில் நானும்
என் அருகில் நீயும்
அமர்ந்து விரல் பிடித்து
நம் வாழ்க்கை கதை பேசி......

அன்று நான் எழுந்த
அதிகாலை இன்று நீ
எழுந்து எனக்காய் தேனீர்
போட்டு என்னிடம் கொடுத்து....

உன் தோள் சாய்த்து
உச்சியில் முத்தம் பதித்து
கைபிடித்து காலரா
ஒரு நடை கடலோரத்தில்........

அறுவதிலும் அழகான
பயணமாய் இருக்க வேண்டும்
என் காதலே...

எனை நீயும் உனை நானும்
ஆழமாய் புரிந்து நடந்தால்
வாழும் ஒவ்வொரு
நொடியும் நமக்கு காதலர் தினமே...


Ϧ♬ᖰᖰƴ ⩔♬ɭ៩⩎Ƭɨ⩎៩ ᖱ♬ƴ ៣ƴ ᖱ៩♬Ʀ ⨏⩏Ƭ⩏Ʀ៩ ɭɨ⨏៩ ៣♬ƙ៩Ʀ💕💕💕💕💕💕💕

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now