வீர வணக்கம்

89 23 305
                                    

நம் இரவுகளில் இன்பமாய் உறங்க
அவர்களோ பெருதுன்பமாய் உறங்கா விழிகளுடன்..

நாம் சுகமாய் இங்கு வாழ அவர்களோ தினமும் புது புது சிக்கல்களில் இருந்து காத்து நமக்கு நல் வாழ்க்கை கொடுத்து.. .

சிறு குளிர் வெயில் தாங்க முடியாமல் நாம் இங்கு தடுமாற....

அவர்களோ காடு, பனி, வெயில், குளிர், மழை என்று பாராமல் தேசம் காக்கும் தெய்வங்களாய்  ..

ஒரு நாள் பெற்றோரை பிரிந்தால் கூட கண்களில் கண்ணீர் தேக்கி உடனே ஓடி வருகிறோம்...

எல்லைக்கு போனால் உயிர் திரும்புமா என்ற நிச்சயம் இல்லாமல் சென்று நமக்கு காவலாகிறார்கள்...

பயங்கரவாதி என்ற அரக்கர்களை அசுரவாதம் செய்ய நம் மண்ணில் பிறந்தவர்கள் நம் வீரர்கள்....

ஆனால் நம் மண்ணில் பிறந்த கயவனாலே இன்று அகோரமான
ஆபத்தோடு உயிர் பறிபோயிற்று..

இன்று தீவிரவாத தாக்குதல் நடத்தி என் வீரர்களின் உடலில் காயம் ஏற்படுத்தலாம் உயிர் எடுக்கலாம்  ஆனால் மீண்டும் இம்மண்ணில் உதிக்கும் வீரர்களை தடுக்க இயலாது..

எல்லையில் இருந்து உயிரோடு திரும்ப வில்லை என்றாலும் உடலோடு திரும்புவாய் என நினைத்தோமே...

இன்று வெறும் சதைகளை கட்டி கொடுக்கிறார்களே இது நீ தான என்று வீட்டார் கத்தும் ஓசை காதில் ஒலித்து கொண்டே இருக்கிறதே வடியும் கண்ணீரோடு... .

அதை கண்டும் நாம் கையால் ஆகாமல் நிற்கிறோமே ...

நமது நலன் காக்க இன்னுயிர் விடுத்து எல்லையில் உயிர் துறந்த நம் வீரர்களுக்கு என் வீர வணக்கம்.....

எல்லைக்கு சென்று அனைவராலும் காக்க இயலாது வாய்ப்பு கிடைக்கையில் நாமும் பாரதம் காத்திடுவோம்...
          !!!!!!!ஜெயஹிந்த்!!!!!!

Yarum itha senjatha religion based la parkathinga... Bcoz yara iruthalum thavaru senjathu oru indian than..

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now