💕விரல் கோர்த்திட ஆசை 💕

86 21 37
                                    

தீராத காதலில் மனதை திருடிய கள்வனுடன் சேரும் நேரம் எதுவோ..

உன் மீது ஆசை கூடுதே மெய் காதலோடு நல் தோழனாய் வரும் நேரம் எதுவோ...

நமக்குள் இருக்கும் இடைவெளி முற்றிலும் குறைந்து ஆழ்மனதோடு புதைய போகும் காலம் எதுவோ...

ஆயுள் ரேகை கூடிட ஆசையும் கூடுதே  நீயும் என் வாழ்க்கையோடு கலந்திருப்பதால் தானோ...

காற்றினில்  கொண்ட சுவாசம் இனி உன் வசத்தின் வாசத்தோடு சுவாசிக்க ஏங்குதே...

உன் விரல் கோர்த்து வலம் வர ஆசை வருகிறதே  ஆளை மயக்கும் மாலைநேரத்து கடற்கரை மணலில் அல்ல..

என் சொந்தம் நீ என்று உணர்த்த போகும் மணப்பந்தலில் ஊரார் மத்தியில் அக்னி வலம் வந்திட  ஆசை கூடுதே ....

நீ யாரென்று அறியாமல் காதலை கவிதைகளில் செதுக்குகிறேன்  உனக்குள் எனக்கான நேசம் விதைத்திருக்குமா என்ற ஆவலோடு...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now