என்னுள் நீ

105 18 27
                                    

உயிருக்குள்
உறவானவனே
உன்
கண்களை
பார்த்து
உரையாடி...

உன்
கொஞ்சல்களில்
என்னை
மறந்து 
நீ
முத்தம்
கொண்டு
தாக்கயில்
நான்
வெட்கம்
கொண்டு 
உன் மடி
சாய்கையில்..

என்
தலைகோதி
நெற்றி
முத்தம்
கொடுக்கையில்
இவ்வுலகின்
இன்பம்
கண்டு
கொண்டேனடா

காதலோடு
நீ
அணைக்கையில்
காற்றை
உன்னுள்
இணைந்து
காதல்
யுத்தத்தில்
இருவரும்
தோற்காத
வெற்றி
கண்டு
உறவுக்குள்
உயிராய்
இணைந்து
என் உயிரில்
நீ கலந்திட
வேணுமடா..

காலை
விடியலில்
என்
காதோரம்
உன்
மூச்சுக்காற்று
உரசி
மார்பில்
தலை
வைத்து
தூங்குகையில்..

கதிரவன்
வந்து எட்டி
பார்த்து
நம் தூக்கம்
கெடுக்கயில்
கட்டுக்கடங்காத
கோபம்
கொள்ள
தோன்றகிதடா..
விடியலை
ஏன் விரைவில்
கொண்டு
வந்துவிட்டாய் என

என்றோ
நடக்க
போகும்
நிகழ்வெல்லாம்
இன்றே
நடப்பது
போல்
உனக்காக
எழுதும்
போது
மட்டும்
தான்
எனக்குள் 
வார்த்தை
பிறக்கிறதடா..

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now