உன் விழி

175 23 88
                                    

விழியில்  தேக்கி  வைத்திருக்கும்
காதலை உன்னிடம் சொல்ல நினைக்கிறேன் 

சொல்லிவிடும் எண்ணத்தில்  உன் விழி
பார்க்கையில் என் நாணம் வந்து தடுக்கிறதே 

யாருக்கும் கட்டுப்படாமல்  பெண் சிங்கமாய் 
இருந்த என்னையும்  வெட்கம்  கொண்டு
தலைகுனிய வைத்துவிட்டாயே  உன் கடைக்கண்  பார்வையால்  ...

உன்னை பார்த்து மட்டும் என்னுள்  நிகழும்
மாற்றம் ஏனோ.. ..

எனக்கே  தெரியாமல் எனக்குள் நுழைந்துவிட்டாயே கள்வா...

உன் பார்வை கூட என்னை இம்சிக்கிறதடா 
காதல் சொல்ல வந்துவிட்டேன் 
ஆனால்
உன் கண்ணை பார்த்ததும் மயங்கி 
மறந்துவிட்டேனடா சொல்ல வந்தது என்னவென்று  ..

இந்த காற்றின் மீது எல்லை இல்லா  பொறாமை எட்டி பார்க்கிறது..... ....

நான் உன் கண்ணை கூட காண தயங்குகிறேன் இந்த காற்று மட்டும் உன்னை அடிக்கடி உரசியே 
செல்கிறது......

உன்னை தீண்டும் காற்றிடம் சண்டையிட்டு
உன் தோள் நான் சாய்யா ஆசை எழுகிறதடா...

இனி வாழும் நொடி முழுதும் உன்னுடனே பயணித்திட ஆசையடா இன்பத்திலும் துன்பத்திலும்.......

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now